RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கோவாலு, 'கோபால்' வேண்டாம்.. இனி, காலையில எந்திரிச்சதும் 'இன்டர்நெட்'ல பல் துலக்கலாமாம்!

From: 'விஸ்தாரம்'

POST 16/1/2014, 2:04 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
லாஸ் வேகாஸ்:

வேப்பங்குச்சி, பயரியா பல்பொடி, கோபால் பல்பொடி, டூத் பேஸ்ட், எலக்ரிக் பிரஷ் ... இப்படி பல ரூபங்களில் பல் துலக்கி வந்த, வரும், மனித குல வரலாற்றில் முதல் முறையாக இன்டர்நெட் மூலம் பல் துலக்கும் ஒரு அதி நவீன பிரஷ்ஷை களத்தில் இறக்கியுள்ளனர்.

நிச்சயம் இந்த செய்தி தினசரி காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சந்தோஷமான செய்தியாகத்தான் இருக்கும். இது இன்டர்நெட் காலம் என்பதால் எல்லாமே இன்டர்நெட் மயமாகி வருகிறது. அதை அடிப்படையாக வைத்தே, மக்களின் நாடி பிடித்துப் பார்த்து இப்படி ஒரு வினோதமான பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவாலு, 'கோபால்' வேண்டாம்.. இனி, காலையில எந்திரிச்சதும் 'இன்டர்நெட்'ல பல் துலக்கலாமாம்! 06-1388988627-smart-brush343114-600

உலகின் முதல் இன்டர்நெட் அடிப்படையில் அமைந்த டூத் பிரஷ் என்ற பெயரை இது பெற்றுள்ளது. அதாவது ஸ்மார்ட் பிரஷ்.

பிரான்ஸைச் சேர்ந்த கோலிப்ரீ என்ற நிறுவனம்தான் இதை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லாஸ் வேகாஸில் நடந்த நிகழ்ச்சியில் இதை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோலிப்ரீ நிறுவனத்தின் இணை நிறுவனர் லாயிக் செஸ்ஸாட் பேசுகையில், பல வருடமாகவே இந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தாமல், கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். பல் ஆரோக்கியத்திற்கான அருமையா்ன நடவடிக்கை இது. இந்த பிரஷ் வழக்கமான பிரஷ்களை விட வலுவானது, ஸ்மார்ட்டானது என்றார்.

கோவாலு, 'கோபால்' வேண்டாம்.. இனி, காலையில எந்திரிச்சதும் 'இன்டர்நெட்'ல பல் துலக்கலாமாம்! 06-1388988645-smart-brush24-600-jpg

இந்த நூதன டூத் பிரஷ்ஷில் ஒரு சென்சார் உள்ளது. அந்த சென்சார், நாம் பற்களைத் துலக்கும்போது, எந்த அளவுக்கு அழுக்குகளை காலி செய்துள்ளது என்பதை நமக்குத் தெரிவிக்குமாம். மேலும், நாம் எந்த அளவுக்கு பிரஷ் செய்துள்ளோம் என்பதையும் நமக்குக் காட்டும். அதை அடிப்படையாக வைத்து நாம் பிரஷ் செய்யலாம்.

இந்த பிரஷ்ஷை, வயர்லெஸ் மூலமாக ஒரு ஸ்மார்ட் போன் 'ஆப்'புடன் இணைத்து அதன் மூலம் இந்த தகவல் பரிமா்ற்றம் நடக்கிறதாம்.

சிறார்களுக்கு இந்த பிரஷ் மிகவும் பொருத்தமானது என்கிறார்கள். காரணம், அவர்கள்தான் சரியான முறையில் பல் துலக்குவதில்லை. இனிமேல் இவர்களுக்கு இந்த பிரஷ்ஷைக் கையில் கொடுத்து விட்டால் போதும், அவர்களே எந்த அளவுக்கு நமது பற்கள் சுத்தமாகியுள்ளன என்பதை அறிந்து சூப்பராக பல் துலக்க முடியும்.

கோவாலு, 'கோபால்' வேண்டாம்.. இனி, காலையில எந்திரிச்சதும் 'இன்டர்நெட்'ல பல் துலக்கலாமாம்! 06-1388988869-smart-brush-app-600-jpg

செஸ்ஸாட் மேலும் கூறுகையில், நம்மில் பலரும் இப்போது உள்ள பிரஷ்களை வைத்து தேய் தேய் என்று தேய்க்கிறோமே தவிர, எத்தனை பேருக்கு பற்கள் சுத்தமாகியுள்ளன என்பதை அறியவே முடிவதில்லை. அந்த நிலை இனிமேல் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டே இனி இந்த பிரஷ் மூலம் பல் துலக்க முடியும் என்றார்.

இந்த பிரஷ்ஷுக்கு தற்போது ரூ. 6100 முதல் ரூ. 12,436 வரை விலை நிர்ணயித்துள்ளனர். விரைவில் உலகம் முழுவதும் களம் இறக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம். இந்த பிரஷ்ஷுடன் இலவசமாக 'ஆப்'பும் கொடுக்கிறார்களாம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT