RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

குழந்தைப் பருவ பொங்கலே குதூகலம்: லதா ராவ் ராஜ்கமல்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 4:23 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கல் அடுப்பில் விறகு வைத்து... புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் கொண்டாடிய குழந்தை பருவ பொங்கலே குதூகலம் என்கிறார் சீரியல் நடிகை லதா ராவ்.

குழந்தைப் பருவ பொங்கலே குதூகலம்: லதா ராவ் ராஜ்கமல் 09-1389254566-latha-rao-629600

சின்னத்திரை நட்சத்திர தம்பதி லதா ராவ், ராஜ்கமல் ஆகியோரை பொங்கல் பண்டிகை சிறப்பு பேட்டிக்காக அணுகினோம்.

சந்தோசமாக ஒத்துக் கொண்ட நட்சத்திர தம்பதியர் தங்களின் சிறுவயது, இளவயது, பொங்கல் கொண்டாட்டங்களையும், குழந்தைகளோடு இப்போது கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர்தான் எனது சொந்த ஊர். ஆறும், வயலுமாய் விவசாய பூமி. பொங்கல் கொண்டாட்டத்திற்கு அங்கே குறைவிருக்காது என்று குழந்தை பருவத்திற்கு போனார் லதாராவ்.

அதிகாலையிலேயே எழுந்து வாசலில் கோலமிட்டு கல் அடுப்பு வைத்து விறகு மூட்டி புதுப்பானையில் பொங்கல் வைப்பதே தனி சுகம் என்றார்.

எங்கள் வீட்டில் மாடு இல்லை என்றாலும் பக்கத்து வீடுகளில் மாடுகளுக்கு அலங்கரித்து, கொம்புகளில் வர்ணம் பூசி மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைப்பார்கள். அதை வேடிக்கப் பார்க்கப் போவோம். ஆனால் நகரத்தில் அதையெல்லாம் காண முடியாது.

காணும் பொங்கலை ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பூப்பறிக்கிற நோன்பி என்பார்கள். வீடுகளில் விதவிதமாய் சமைத்து, பலகாரங்களை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் உறவினர்களுடன் ஒன்றாய் கூடி அமர்ந்து சாப்பிடுவோம். அது தனியான சந்தோசம்.

சென்னையில் காணும் பொங்கலன்று கூட்டம் அதிகமாகிவிட்டது. எனவே காணும் பொங்கலன்று வெளியே செல்வதை தவிர்த்து விடுவோம். வீட்டிற்குள்ளேயே பொங்கல் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்வோம்.

பொங்கல் பண்டிகை என்பது இப்போது நகரங்களில் டிவி நிகழ்ச்சிப் பார்ப்பதோடு முடிந்து விட்டது. முன்பெல்லாம் டிவி கிடையாது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு நேரமிருந்தது. இப்போது டிவி நிகழ்ச்சிகள் கொண்டாட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.

சென்னையில் மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இங்கேயும் அடுப்பில் புதுப்பானை வைத்துதான் சமைப்போம். குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து குதூகலமாய் கொண்டாடுவோம் என்று லதாராவ் கூறும் போதே இடையில் ராஜ்கமலையும் அழைத்தோம்.

ராஜ்கமல் காவிரி ஓடும் திருச்சி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை என்ற ஊரைச்சேர்ந்தவர். அறுவடை, விவசாயம் வீரவிளையாட்டு, என பொங்கல் தனி சந்தோசம்தான். ஆனால் நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதில்லை பார்த்து ரசிப்பது மட்டுமே என் வேலை என்கிறார்.

பொங்கல் தினத்தன்று அன்றைக்கு ரிலீசாகும் அத்தனை திரைப்படங்களையும் ஒன்று விடாமல் பார்ப்பதுதான் ஒரே பொழுது போக்கு. அப்போதெல்லாம் நிறைய படங்கள் ரிலீசாகும். இப்போது ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகிறது என்று ஆதங்கப்பட்டார் லதாராவ்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் திருச்சியில் மாமியார் வீட்டில் தலைப் பொங்கலை கொண்டாடினேன். பொங்கல் வைக்க அன்றைக்குத்தான் முதன்முறையாக கற்றுக்கொண்டேன் என்று கூறிய லதாராவைப் பார்த்து சிரித்தார் ராஜ்கமல்.

காவிரியாறு, கல்லணை, முக்கொம்பு என காணும் பொங்கலை கொண்டாடிய அனுபவம் உண்டு. இப்போது கூட்டம் காரணமாகத்தான் கடற்கரைக்குப் போவதில்லை என்கிறார் ராஜ்கமல்.

இன்றைக்கு சென்னைக்கு வீட்டில் பொங்கலை கொண்டாடுகிறோம்.

வீட்டில் பெரியவர்கள் பொங்கல் வைப்பார்கள். குழந்தைகளுக்கு பாரம்பரியத்தைப் பற்றியும், பண்டிகையைப் பற்றியும் கற்றுக் கொடுக்கிறோம். பொங்கலைப் பற்றிய பேச்சோடு டிவியில் பொங்கலுக்காக முதன்முறையாக தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி பற்றியும் பேச்சு திரும்பியது.

ராஜ்கமல் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் கலைநிகழ்ச்சிகள். கார்ப்பரேட் மீட்டிங், என ஏற்பாடு செய்கிறோம். முதன் முறையாக பாலிமர் டிவிக்காக பத்து சின்னத்திரை நட்சத்திரங்களை கிராமத்திற்கு அழைத்து போய் பொங்கல் கொண்டாடி அதை பொங்கலன்று ஒளிபரப்புகிறோம் என்றார் ராஜ்கமல்.

பொங்கல் பண்டிகைப் பற்றி குதூகலத்தோடு பகிர்ந்து கொண்ட தம்பதியருக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி நாம் விடை பெற்றோம்.

ஜெயலட்சுமி சுப்ரமணியன்



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT