RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

வீரம் - விமர்சனம்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 5:28 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஆரம்பம் முதல் அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்! பலே, பலே!!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

சந்தானம் கோர்ட்டில் இருப்பதை விட இவர்களுடன் சுற்றும் நேரம் ஜாஸ்தி என்பதால் அவருக்கு விதார்த், பாலாவின் அஜீத்துக்கு தெரியா காதல் தெரிய வருகிறது. அதுமுதல் தன் காதலையும் புதுப்பித்துக் கொள்ளும் "பெயில் சந்தானம், 4 சகோதரர்களுடனும் சேர்ந்து தங்கள் காதலுக்கு அஜீத் சம்மதிக்க வேண்டுமென்றால், அஜீத்தையும் ஒரு பெண்ணின் காதலில் தள்ள வேண்டுமென களம் இறங்குகிறார். அதற்கு ஏதுவாக அஜீத்தின் சிறுவயது நண்பரும், கலெக்டருமான ரமேஷ் கண்ணாவின் ஐடியாபடி, அஜீத்துக்கு பள்ளி பருவத்தில் பிடித்த பெண்ணின் பெயரான 'கோப்பெருந்தேவி' எனும் பெயரில் ஒரு அழகிய இளம் பெண்ணை அஜீத்முன் நிறுத்தினால் எல்லாம் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும், அஜீத்துக்கும் காதல் பிறக்கும் எனும் யோசனை வருகிறது.

அதன்படி புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். "பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

தமன்னா, கோப்பெருந்தேவியாக அவர் புனரமைக்கும் சிலைகள் மாதிரியே சிலிர்க்க வைக்கிறார்.

சந்தானம் 'பீடீ ஊதுன வாய்க்கும், பீப்பி ஊதுன வாய்க்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று சீனுக்கு சீன் அஜீத்துக்கு ஈக்குவலாக "பன்ச், அதுவும் காமெடி பன்ச் அடித்து தியேட்டரில் மேலும் விசில் சப்தத்தை கிளப்புகிறார். அதிலும், க்ளைமாக்ஸில் அஜீத்-தமன்னா திருமணத்தை சந்தானம் நடத்தி வைத்து ""எவ்வளவு தான் "முரட்டுகாளையா இருந்தாலும், பொண்டாட்டி முந்தியை பிடித்ததும் அப்படியே மாறிடுவிங்களே... என அஜீத்தையும், "வீரம் - முரட்டுகாளை என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ குத்திக்காட்டும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.(அதிர்ச்சியிலா, சிரிப்பிலா?)

விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை, ஆனாலும் மனதில் நிற்கவில்லை என்பது மைனஸ்!

வெற்றியின் ஒளிப்பதிவு வீரத்திற்கு கிடைத்த வெற்றி.

சிவாவின் இயக்கத்தில் ஒட்டன்சத்திரம் பெரும்புள்ளி விநாயகம் அஜீத், தமன்னாவின் அப்பாவிடம் காதல் சம்மதம் பெற, குடும்பத்துடன் 7 நாட்கள் அங்கேயே ஹால்ட் அடிப்பதும், அவர்களது எதிரிகளை பந்தாடுவதும், ஒட்டன்சத்திரத்தில் அஜீத்துக்கு வேலை இல்லாதது மாதிரி சற்றே லாஜிக்காக இடிக்கிறது!

மற்றபடி, அஜீத்தின், "வீரம் - ஈரம் - சூரம் - தரம்!



Message reputation : 100% (2 votes)

« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT