RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

டமால் டுமீல் கதை...!

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 5:35 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
வைபவ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் பெயர் 'டமால் டூமீல்'. வித்தியாசமான டைட்டிலா இருக்கே என்று யோசிக்க வேண்டாம் படத்துக்கு பொருத்தமான டைட்டில். படத்தின் டைட்டில் கார்டு முடிந்ததில் இருந்து எண்ட் கார்ட்டு போடுற வரைக்கும் டாமல் டுமீல்னு துப்பாக்கி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்குமாம். அதற்குதான் இந்த டைட்டிலாம். இனி "டைட்டிலுக்கும் படத்துக்கும் என்னய்யா சம்பந்தம்"ன்னு யாரும் கேட்க முடியாதே.

படத்தோட ஸ்டோரி இதுதான். அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கிற ஆள் வைபவ். திடீரென்று வேலை பறிபோய் நடுத் தெருவுக்கு வருகிறார். எதையாவது செய்து குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்காக ஒரு காரியத்தை செய்யப்போய் கோட்டா சீனிவாசராவ், ஷாயாஜி ஷிண்டே என்கிற இரண்டு மெகா வில்லன்களிடம் மாட்டிக் கொள்கிறார். இரண்டு பேரும் கொலை வெறியோடு வைபவைத் தேடுகிறார்கள். பணம் சம்பாதிக்க போனவர் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடுகிறார். அவரை தொடர்கிறது டமால் டூமீல்கள்.

அவர் அப்படி என்ன காரியத்தைச் செய்தார். கடைசியில் என்ன ஆனார்ங்றத தியேட்டரில் போயித்தான் பார்த்துக்கணும், அதுசரி இதுல ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கு என்ன வேலைன்னு கேட்டா, வைபவ்கூட டூயட் பாட, வில்லன்கள் கடத்த, கொஞ்சம் அழ, கொஞ்சம் சிரிக்க இதற்கு ஆள் வேண்டாமா?

தமன் மியூக், எட்வின் சகாய் கேமராமேன், ஸ்ரீ இயக்கம், ஜாலியான, காமெடியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.



Message reputation : 100% (1 vote)

« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT