RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

'ஜில்லா' - ஒரு கண்ணோட்டம்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 7:58 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
* மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படி ஒரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் 'ஜில்லா' என்று பெயர்.

* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் இணைந்துள்ள படம்.

* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள்.

*விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.

* மோகன்லால் விஜய்யின் காட்பாதராக நடிக்கிறார் . விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை.

*விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.

* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.

* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார்.

*ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.

* விஜய்யின் காமெடி ஏரியா ஃபிரெண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.

* விஜய், இதில் சில கெட்டப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்டப் முஸ்லிம் இளைஞன்.

* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.

* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.

* தமிழ்நாடு , கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

* படத்தின் கதையில் காஜல் அகர்வால் பெரிய திருப்பமாக இருப்பாராம். தலைவா படத்தில் அமலாபால் போலீஸாக என்ட்ரி ஆவது போல், இப்படத்திலும் காஜல் போலீஸ் தானாம். படத்தில் சூரியும் போலீஸ்.

* ’நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் நடித்த நிவேதா தாமஸ் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

* விஜய்யின் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஜில்லா. தமிழ் நாட்டில் 250 திரையரங்குகளிலும், கேரளாவில் 300 திரையரங்குகளிலும் ரிலீஸ்!! கேரளாவில் மோகல் லாலே ரிலீஸ் செய்கிறார்.

* படத்தில் காமெடிக்கு, பரோட்டா சூரி இருந்தாலும், விஜய்யின் மேனரிசங்கள் அசத்தலாக இருக்குமாம். இது போதாதென்று தெலுங்கு காமெடி நடிகர் பிரேமானந்தமும் இருக்கிறாராம்.

*ஃப்ரெண்ட்ஸ் படத்திற்கு பிறகு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஷங்கர் மகாதேவனும் சேர்ந்து பாடல் பாடியிருக்கிறார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT