RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

அதிமுக லிஸ்ட் ரெடி: தேனி: ஜெயலலிதா - வடசென்னை: பரிதி- நெல்லை:பி.ஹெச். பாண்டியன்?

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 4:44 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: அதிமுகவில் லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலரது பெயரும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் 40-ம் நமக்கே என்பதுதான் தாரக மந்திரம்

இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிதான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளில் அதிமுகவே போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்கிறது அதிமுக வட்டாரங்கள்:

வடசென்னை

வடசென்னையில் ஓரங்கட்டப்பட்ட வெங்கடேஷ் பாபு அல்லது புதிய வரவு பரிதி இளம்வழுதிதான் வேட்பாளர்களாம்

தென் சென்னை

தென்சென்னை தொகுதியில் வி.என்.ரவி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வேட்பாளர்களாக இருக்கலாம்.

மத்திய சென்னை

மத்திய சென்னையில் வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான பாலகங்கா அல்லது மைத்ரேயன் களமிறக்கப்படுகின்றனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தொகுதியில் வழக்கம்போல ஓ.எஸ்.மணியன் அல்லது ராமநாதனுக்கு சான்ஸ் கிடைக்கலாம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தொகுதியில் நன்கு அறிமுகமான மலைச்சாமி அல்லது அன்வர் ராஜா வேட்பாளராக இருக்கலாமாம்.

மதுரை

மதுரை தொகுதியில் சீனியரான ஜக்கையன் அல்லது வளர்மதி ஜெபராஜூக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்

தேனி

தேனி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் போட்டியிடாத நிலையில் ரவீந்திரநாத்குமார் வேட்பாளராக இருக்கலாம்.

விருதுநகர்

மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் எனக் கூறப்படும் விருதுநகரில் பஞ்சவர்ணம் அல்லது ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம்.

நெல்லை

நெல்லை தொகுதியில் சீனியரான பி.ஹெச்.பாண்டியன் அல்லது ஆர்.எஸ்.முருகனுக்கு வாய்ப்பு இருக்கிறதாம்

தூத்துக்குடி...

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற சி.த.செல்லப்பாண்டியன் அல்லது சின்னதுரைக்கு சான்ஸ்

கரூர்

அமைச்சர் செந்தில்பாலாஜி அல்லது செந்தில்நாதனை கரூரில் களமிறக்கினால் வெற்றி பெறுவது எளிது என்பது அதிமுக மேலிட கணக்கு

ஈரோடு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அல்லது ராமலிங்கம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு அதிமுக வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரியில் கே.பி.முனுசாமி அல்லது அன்பழகனை நிறுத்தினால் வெல்ல முடியும் என்பது அதிமுக கணக்கு

கிருஷ்ணகிரி:

கரூர் எம்.பியான தம்பிதுரையை கிருஷ்ணகிரியில் நிறுத்தலாம் என கணக்கு போடுகிறது அதிமுக. அவர் இல்லாத நிலையில் அன்பழகன் வேட்பாளராக இருக்கலாம்

திருவண்ணாமலை:

அமைச்சரவையில் இடம்பிடித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அல்லது கனகராஜ்க்கு வாய்ப்பு உண்டு

திருப்பூர்

திருப்பூர் தொகுதியில் சிவசாமி அல்லது உடுமலை ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக இருக்கலாம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தொகுதியில் ஜெயராமன் அல்லது சுகுமாருக்கு வாய்ப்பு இருக்கிறதாம்

ஆரணி

அமைச்சரவையில் இடம்பெற்ற சி.வி.சண்முகம் அல்லது குமாரசாமிக்கு சான்ஸ் உண்டு



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT