சென்னை: பொங்கல் ரிலீசாக விஜய் - மோகன்லால் நடிப்பில் ஜில்லா படம் நேற்று முந்தினம் வெளியானது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘யப்பா மாமா டிரீட்டு' என்றப் பாடல், படத்தின் நீளம் கருதி குறைக்கப் பட்டது.
ஆனால், ரசிகர்கள் தியேட்டர்களில் அப்பாடலை சேர்த்து காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தற்போதைக்கு நீக்கப் பட்டுள்ள அப்பாடல் விரைவில் மீண்டும் படத்தில் சேர்க்கப் படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
முன்பு பொங்கலுக்கு பத்து படங்கள் வரை ரிலீசாகி அதில் இரண்டு அல்லது மூன்று வெற்றி பெறும் மற்றவை தோற்கும். இந்த முறை விஜய்யின் ‘ஜில்லா'‘, அஜீத்தின் ‘வீரம்' இரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகி இரண்டுமே மக்கள் வரவேற்பை பெற்றுள்ளன. நல்ல வசூலையும் கொடுக்கிறது.
இது தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு, தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ஜில்லா படத்தின் வசூல் விஜய்யின் முந்தைய படங்களை முறியடித்து வருகிறது.
படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருந்தது. இது ஒரு குறையாக கூறினர். அதனால் இடைவேளைக்கு பிறகு பத்து நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. காட்சிகளை மொத்தமாக நீக்காமல் காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்னதாக வரும் ‘யப்பா மாமா டிரீட்டு' பாடலும் நீளம் கருதிக் குறைக்கப் பட்டுள்ளது. ஆனால், சில திரையரங்குகளில் ரசிகர்கள் அப்பாடலை ஒளிபரப்ப ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போதைக்கு அப்பாடலை நீக்கியுள்ள நாங்கள் சென்சார் போர்டு அனுமதி வாங்கி மீண்டும் அப்பாடலை படத்துடன் இணைப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.