RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கல்யாணராமன் டைட்டிலுக்கு அனுமதி கேட்கும் வெங்கட்பிரபு!

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:42 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டிருப்பதாக சினிமா மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், கதை வறட்சியை விட டைட்டில் வறட்சி அதைவிட கடுமையாக உள்ளதாகவே தெரிகிறது.

அதனால்தான் பாண்டிராஜ் இயக்கத்திலும், கெளதம் மேனன் இயக்கத்திலும் சிம்பு நடிக்கும் படங்கள், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என பல படங்கள் இன்னமும் டைட்டில் வைக்கப்படாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும், பில்லா-2, சிங்கம்-2வை தொடர்ந்து சில படங்கள் விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என ஏற்கனவே வெளியான டைட்டீல்களின் இரண்டாம் பாகங்களாக அதே டைட்டிலில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் வளரும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், மங்காத்தா, பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவைக்கொண்டு தான் இயக்கவிருக்கும் படத்துக்கு கமல் நடித்த கல்யாணராமன் என்ற டைட்டில் வைக்கும் முடிவில் இருக்கிறார்.

கல்யாணராமன் படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்ததுபோல் இப்படத்தில் சூர்யாவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதோடு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இதே தலைப்பை வைக்கலாம் என்று சூர்யாவும் சொல்லியிருக்கிறாராம்.

அதனால், கமல் நடித்த கல்யாணராமன் படத்தை தயாரித்த பஞ்சு அருணாசலத்திடம் டைட்டிலை மீண்டும் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதி கோரியுள்ளாராம் வெங்கட்பிரபு.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT