RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » சினிமா » சினிமா செய்திகள் » 4 நாட்களில் அஜீத்தின் 'வீரம்' வசூல் எவ்வளவு?

4 நாட்களில் அஜீத்தின் 'வீரம்' வசூல் எவ்வளவு?

From: 'விஸ்தாரம்'

POST 1on 15/1/2014, 5:17 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் அஜீத்தின் 'வீரம்' வசூல் எவ்வளவு? 15-1389766900-veeram-movie-review24-600

சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸானது. நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜீத் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார்.

படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கோவையில் படம் ரிலீஸான மறுநாள் கூடுதல் தியேட்டர்களில் வீரம் திரையிடப்பட்டது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் வீரம் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.

வார இறுதி நாட்களில் வீரம் படம் இந்தியாவில் மட்டும் ரூ.17.8 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

வீரம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது. வீரம் ரிலீஸான தியேட்டர்கள் முன்பு எல்லாம் அஜீத்தின் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
வார இறுதி நாட்களில் வீரம் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT