RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

காணும் பொங்கல்: மெரீனாவில் 12000 போலீசார் குவிப்பு- பழவேற்காட்டில் படகு சவாரிக்கு தடை

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 5:51 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: காணும் பொங்கல் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பழவேற்காடு ஏரியிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

காணும் பொங்கல்: மெரீனாவில் 12000 போலீசார் குவிப்பு- பழவேற்காட்டில் படகு சவாரிக்கு தடை 15-pazhaverkadu-boating6-600

காணும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரீனா, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக படகு சவாரிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டும் இந்த தடை நீடிக்கிறது. அங்கு சிந்தாமணிஸ்வரர் கோவிலுக்கு படகு மூலம் செல்ல சிலர் முயற்சி மேற்கொள்வார்கள் என்பதால் காணும் பொங்கலையொட்டி படகில் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு கலங்கரை விளக்கம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில்களுடன் வருபவர்களை தடுக்கவும், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக 5 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் பொன்னேரி டி.எஸ்.பி. எட்வர்டு மற்றும் பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முருகன், பழனி, ரமேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் ஆயுதபடை போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற சோதனையில் 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பிடிபட்டதாக டி.எஸ்.பி. எட்வர்டு தெரிவித்தார். கடலில் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

காணும் பொங்கலையொட்டி பொது மக்களுக்காக பழவேற்காடு பகுதி முழுவதும் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.எஸ்.பி. எட்வர்டு தெரிவித்தார். எனவே போலீசாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருவதுடன் காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT