RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பட்டாசு ஆலை "சரவெடி' : லஞ்சம் கொடுத்து வாங்கிய கமிஷன் அறிக்கை வெளியீடு

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 9:19 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: சட்ட ரீதியாக கேட்டு கிடைக்காத, ஒரு நபர் கமிஷன் அறிக்கையை, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வாங்கி வெளியிடுகிறோம்,'' எனக் கூறி, முதலிபட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்த, ஒரு நபர்
கமிஷன் அறிக்கையை, தமிழக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சங்க பொது செயலர், ஆசைதம்பி, துணைத் தலைவர், மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது:

சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி, "ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ்' ஆலையில், 2012 செப்., 5ம் தேதி, வெடி விபத்து நடந்தது. இதில், 40 பேர்
உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சைதன்ய பிரசாத் தலைமையில், ஒரு நபர் கமிஷனை, மத்திய அரசு நியமித்தது.

விபத்து குறித்து ஆய்வு செய்த, அந்த கமிஷன், தன் அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன், அரசுக்கு அளித்தது. அறிக்கையின் ஆய்வு முடிவு என்ன, அதன் பரிந்துரைகள் என்ன என்பதை, மத்திய அரசு, வெளியிடவே இல்லை. அறிக்கை விவரங்களை பலமுறை கேட்டும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, சைதன்ய பிரசாத் கமிஷனின் அறிக்கையைப் பெற்றோம். அதை தற்போது வெளியிடுகிறோம்.

கமிஷனின் ஆய்வில், வெடி விபத்து நடந்த, "ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ்' ஆலைக்கு, சட்டப் புறம்பாக, கட்டடம் வாடகைக்கு அளிக்கப்பட்டது தெரிந்தும், ஆலையை உடனடியாக தடை செய்யாமல், தொடர்ந்து இயங்க அனுமதித்துள்ளனர்.

"இந்த விபத்துக்கு, மத்திய அரசின் வெடி பொருள் துறையே காரணம்' என, கமிஷன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்த, 40 பேரில், ஆலை ஊழியர், மூவர் தான். அத்துமீறி விபத்து பகுதிக்குள் நுழைந்தவர்களே, உயிரிழந்தவர்களில் மீதம் பேர்.
பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய, 1958ல், சிவகாசியில் அமைக்கப்பட்ட, வெடிபொருள் துறை அலுவலகம், பட்டாசு ஆலைகளோடு, பட்டாசு விற்பனையகங்கள், காஸ் சிலிண்டர், பெட்ரோல் நிலையங்களையும் ஆய்வு செய்கிறது.

இது தேவையற்ற பணி. இதனால், வெடிபொருள் துறையினருக்கு, கூடுதல் பணி சுமை ஏற்பட்டு, பட்டாசு ஆலைகளை முறையாக ஆய்வு செய்ய முடியவில்லை.

பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள, விருதுநகர் மாவட்டத்தை, 15 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும், போதுமான அதிகாரிகளை நியமித்து, பட்டாசு ஆலைகளில் விபத்து நிகழாமல் இருக்க, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

இப்பரிந்துரைகள் மீது, 10 மாதங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், "பட்டாசு ஆலைகளைச் சுற்றி, சிமென்ட் நடைபாதைகளை அமைக்க வேண்டும்' என, வெடிபொருள் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

சிறு, சிறு பட்டாசு ஆலைகள், குவியலாக உள்ள நிலையில், ஒவ்வொரு பட்டாசு ஆலைக்கும், தனித்தனியாக சிமென்ட் நடைபாதை அமைப்பதால், விபத்து காலங்களில், தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ், பட்டாசு ஆலைகளுக்கு செல்ல முடியாது.

சிமென்ட் பாதைகளுக்கு இடையே பெரிய பள்ளம் ஏற்படுகிறது. இதில், நீர் தேங்கி, பட்டாசு உற்பத்தி பாதிப்பதோடு, வெடி விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதையெல்லாம், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு தெரிவித்தும், ஏற்க மறுக்கின்றனர்.

விபத்து தடுப்பு பற்றி, சைதன்யா பிரசாத் கமிஷன் அளித்த, பரிந்துரைகளை முழுமையாக அமல் செய்யாமல், இடைக்கால பரிந்துரையாக, அவசியமற்ற நடவடிக்கைகளை, வெடிபொருள் துறை எடுத்து வருவதை உடனடியாக கைவிட வேண்டும்.

வெடிபொருள் துறை மற்றும் மாநில தொழிற்சாலை ஆய்வுத்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும். அவர்கள் மீது, துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT