RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தை பிறந்தால் விழி திறக்கும்!

From: 'விஸ்தாரம்'

POST 116/1/2014, 12:54 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தை பிறந்தால் விழி திறக்கும்! Astro-articles-70

தை மாதம் பிறக்கப் போகிறது என்று எண்ணும்போதே நம் அனைவர் மனதிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். சுப விசேஷங்களைச் செய்வதற்காக தைமாதம் எப்போது பிறக்கும் என பலரும் காத்திருப்போம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் ஏதுமின்றி எல்லோரும் குடும்பத்துடன் பொங்கல் வைத்துக் கொண்டாடும் விழா நாளோடு தொடங்கும் மாதமிது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்டில் உழவர்களுக்கான திருநாளைக் கொண்டாடுவதும், காலமெல்லாம் நம்மோடு சேர்ந்து உழைக்கும் கால்நடைகளை சிறப்பிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் திருநாளும், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஒருவருக்கொருவர் ‘பால் பொங்கிடுச்சா...?’ என்று பரஸ்பரம் உபசரித்துக் கொள்ளும் பழக்கத்தை காணும்பொங்கலாகக் கொண்டாடுவதும், சீறி வரும் காளைகளை அடக்கத் தோள்கள் துடிதுடிக்க இளைஞர்கள் திமிறிப் பாயும் ஜல்லிக்கட்டு திருவிழாவும் தமிழ்த்திருநாட்டில் தை மாதத்தின் தனிச்சிறப்புகள் எனலாம்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்...” என்பது அனைவரும் அறிந்த சொல்வழக்கு. உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர். அறுவடை செய்த பயிரை விற்றுப் பணம் சம்பாதிப்பது தை மாதத்தில் என்பதால் தை மாதத்தில் திருமணம், வீடு கட்டுதல் முதலான சுபதிட்டங்களை மேற்கொள்ளலாம். கையில் பணமின்றி இந்தத் திட்டங்களைத் தள்ளி வைப்போருக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அர்த்தத்தில் கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள்.

தை முதல் ஆனி மாதம் வரையிலான காலகட்டம் உத்தராயணம் எனப்படும். இந்த ஆறு மாத காலத்தை எல்லா சமூகத்தினரும் உழைத்து சம்பாதிக்க வேண்டிய காலமாக வகுத்திருந்தனர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனும் ஆறு மாத காலத்தை தேவர்களைப் பூஜிப்பதற்கும், ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபடுவதற்கான காலமாகப் பிரித்தார்கள். வேத விற்பன்னர்கள்கூட ஆவணி அவிட்டம் நாள் முதல் வேத மந்திரங்களைக் கற்பதையும், தை மாதத்தில் இருந்து கற்ற மந்திரங்களின் துணை கொண்டு பணம் சம்பாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அனைத்து தரப்பினரும் உத்தராயணத்தில் சம்பாதித்த பொருளை தட் சிணாயனத்தில் செலவழித்தனர். கையிருப்பு கரைந்தவுடன் மீண்டும் தை மாதம் முதல் பொருள் தேடத் துவங்குவர். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாதமாக தை மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். யாகங்களைச் செய்து வரும் வேத விற்பன்னர்கள் சிராவண மாதம் பௌர்ணமியில் (ஆவணி அவிட்டம்) இருந்து மார்கழி மாத பௌர்ணமி வரை சர்ப்ப பலி எனும் யாக பூஜையைச் செய்வது வழக்கம். இதற்குக் காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாம்பு, தேள், மரவட்டை, பூரான், நத்தை, அட்டை, கம்பளிப்பூச்சி முதலான விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும்.



POST 216/1/2014, 12:57 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அக்காலத்தில் மனிதர்கள் செல்லும் பாதையில் இந்த விஷப்பூச்சிகளால் பலவிதமான தொல்லைகள் உண்டாவது வழக்கம். மனிதர்களால் இந்த ஜந் துக்களுக்கும், பூச்சிகளால் மனிதர்களுக்கும் பரஸ்பரம் எவ்வித பாதிப்பும் நேரக்கூடாது என்பதால் காட்டில் வசித்து வந்த ரிஷிகளும், சந்யாசிகளும் கூட ‘சாதுர்மாஸ்ய விரதம்’ என்று, தம் இருப்பிடத்தை விட்டு வெளியில் வராமல் விரதம் காப்பதை வழக்கமாகக் கொண்டிருந் தனர். தை மாதப் பிறப்பிலிருந்து இந்த ஜந்துக்கள் தங்கள் இருப்பிடத்தில் தஞ்சம் புகுந்து விடும் என்பதால் தை மாதத்தில் மனிதர்கள் செல் வதற்கு பாதை (வழி) நல்லபடியாக அமைந்தது.

தட்சிணாயனம் முடிந்தபின் தொடங்கும் உத்தராயணம், தை மாதம் முதல் தேதியில் ஆரம்பமாகிறது. சூரியன் தனது பாதையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாற்றிக் கொள்ளும் நேரம். தேவர்களைப் பொறுத்த வரை ஒரு வருடம் என்பது ஒரு நாள் அளவே. இதில் உத்தராயணம் என்பது பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது இரவு பொழுதாகவும் இருக்கும். ஜோதிட ரீதியாக சூரியனை வலது கண்ணாகவும், சந்திரனை இடது கண்ணாகவும் குறிப்பார்கள். தை மாதத்தின் முதல் தேதி தேவர்களுக்கு பகல் பொழுது துவங்குகிற காலம்.

தேவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்போது அவர்கள் முதலில் வலது கண்ணையும், அதனைத் தொடர்ந்து இடது கண்ணையும் திறக்கின்றனர். அதனால் தான் பொங்கல் நாளன்று சூரிய, சந்திரர் படம் வரைந்து பூஜிக்கிறோம். தட்சிணாயனம் முழுவதும் நமது பூஜைகளை ஏற்றுக் கொள்ளும் தேவர்கள் தங்கள் விழிகளைத் திறந்து நம் மீது அருட்பார்வை வீசுகின்ற நேரம். தை பிறந்தால் விழி திறக்கும் என்பது திரிந்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மாறியிருக்கலாம் என்பது ஜோதிட ஆராய்ச்சியாள ர்களின் கருத்து. தை பிறந்தால் தேவர்களின் விழி திறந்து மனிதர்களாகிய நமக்கு வழி பிறக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஜோதிட அறிவியலைப் பொறுத்தவரை உணவு, விவசாயம், நீர்வளம் ஆகியவற்றை வழங்கும் கோள் சந்திரன். முழு நிலவாக ஒளிவீசும் பௌர்ணமி நாள் தை மாதத்தில் வரும்போது மட்டுமே, தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். ஆகவேதான் கடும் வெயிலோ, அதிக வெப்பமோ, அல்லது அதிக மழையால் வெள்ளமோ இன்றி விவசாயத்திற்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலையை தை மாதத்தில் காண்கிறோம். பௌர்ணமியுடன் கூடிய தைப்பூச நாளன்று ஆங்காங்கே அன்னதானம் நடைபெறுவதைக் காண்கிறோம்.

சந்திரனுக்கு உகந்த அந்த நாளன்று அன்னதானம் செய்வோருக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாழ்வினில் வளம் பெருகும். தை மாதம் முழுவதும் சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பதால் இதனை மகர மாதம் என்றழைப்பர். மகர ராசியில் சூரியனின் கிரணங்கள் சேருவதால் தை மாதத்தின் முதல் நாளை மகர சங்கராந்தி என்று அனுசரிக்கிறோம். மகர மாஸம் எனும் தை மாதத்தின் முதல் நாள் அன்று சபரிமலையில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்று போற்றுகிறார்கள்.

இந்த மகரஜோதியை தரிசிக்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் தவமிருப்பதும் நாம் அறிந்ததே. சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், சரியான அளவில் மழையின்றி தவிக்கும் இந்த நேரத்தில், கடந்த ஆண்டினைப் போல் இல்லாது இந்தப் புத்தாண்டில் பிரதி மாதம் மும்மாரி பொழியவும், நீர்நிலைகள் நிரம்பி, விவசாயம் தழைத்து ஓங்கவும் தை மாதப்பிறப்பு அன்று சூரிய பகவானைப் பிரார்த்திப்போம். வளம் பெறுவோம்.

திருக்கோவிலூர் -K.B.ஹரிபிரசாத் சர்மா



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT