RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பகைவர்களும் நட்புடன் பழகுவர்

From: 'விஸ்தாரம்'

POST 116/1/2014, 1:05 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பகைவர்களும் நட்புடன் பழகுவர் Astro-articles-72

நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள்

சூரியன் தனது உத்திர திசையில் பயணிப்பதை (உத்திரம் என்றால் வடக்கு) உத்திராயணம் என்றனர் முன்னோர். மகரத்தில் சூரியன் அடி எடுத்து வைப்பதை மகர சங்கராந்தி என்று கொண்டாடினர். உழவர் தினம், தமிழர் திருநாள் என்றெல்லாம் மக்கள் மகிழ்ந்து போற்றி, இனிப்பு சுவை கொண்ட புது அரிசியை பொங்க வைத்து சூரியனுக்கு படைத்து மகிழ்ந்தனர். தை என்றால், லட்சுமிகரம், மகிழ்ச்சி, ஆனந்தம், கொண்டாட்டம் என்று பொருள். ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் சக்தி தை மாதத்திற்கு உண்டு.

இந்த மாத அமாவாசை நாள், பூச நட்சத்திர நாளில் செய்யப்படும் சிராத்தங்கள் அதிக பலனை கொடுக்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இம்மாதத்தில் வரும் ரதசப்தமி அன்று, திருமலை மலையப்பன் தரிசனம் சாலச் சிறந்தது. பீஷ்ம தர்ப்பணம் பாவம் நாசனம். குருவாரம் தை அமாவாசை பிண்ட, பித்ரு தோஷம் போக்கும். அன்று பரசுராமரை தியானிக்க சர்வ ஐஸ்வர்யங்களும் சித்திக்கும். வெள்ளிக்கிழமை தை பூசத்தில் மகாலட்சுமி பூசை, ஆறுமுக தியானம் சகல பீடைகளையும் அழிக்கும் என்று சித்தர் பாடலினால் அறியலாம்.

"விசயத் தய்யமாவாசை வியாழனிருப்ப
வித்தை கூடுமடுத்து அலைந்தாடுமாவி
வம் சத்தடங்குமன்றோ பரசானைபாடி
நிற்ப பொங்குமாஸ்தி பொய்யிலையே" -அகத்தியர்

"சுக்கரநாளது பூசமாக விசயத் தையெநுந்
திங்களதனிலே திருமகள் கடாட்சங்
கிட்டுமன்றோ வேலானை யாராதிக்க
வினைபல கட்டோழியுமே"
-சிவயோகமுனி

கிருத்திகை - உத்திரம்-உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"பாங்கான பயணமுந் தொல்லையாகுமே
குருதிவழி உறவினால் பாரங் கூடுமன்றோ
பெண்டிராலுண்டு யேற்றமாயினும்
பொருளுக்கு கேடுண்டாம் மேலோர்
தஞ் சொற்படி நடந்து தேற நன்மையுண்
டே: குலச் சாமியை கொண்டாட
குறையுஞ் சஞ்சலமே"
-சிவஞானபோதர்

மனத் தாங்கல் அதிகம் காணும் மாதம் இது. பயணங்கள் சொற்ப பலனையே தரும். பொருள் விரையத்தை குறைக்க பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பது நன்று. குலதெய்வ பூசை சாலச் சிறந்தது.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"கீர்த்திக்குக் குறைவில்லை வாக்குவலு
கூடுங் கொலோ! நூதன கூட்டு
பணியில் கூட பின்னைக் காலத்திற்கு
வசந்தமுண்டாக வித்திடுவீரே
அலைச்சலுமுண்டு ஆக்கமுமுண்டென்
போம் நவநாயகரைத் தொழுதே நிற்ப
பின்னை பேரின்பஞ் சேருமே."
-கொங்கண சித்தர்

நல்ல புகழ் உண்டாகும். வாய்ச்சொல்லுக்கு நல்ல மதிப்பு உண்டாகும். நல்லோருடன் கூட்டுப்பணி செய்ய ஒப்பந்தஞ் சேரும். அதிக அலைச்சல் ஏற்பட்டபோதும், முன்னேற்றம் உண்டு. நவகிரக பூசை தரிசனம் பெரிய மேன்மைகள் சிறக்கும்.

மிருகசீரிடம் - சித்தரை - அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"பெண்டிரால் பூசலுண்டாம் -விவாதந்
தனை யொதுக்கியே நிற்க பலமாகுமே
பாசத்தால் பின்னை நோவுண்டாம்
யீன்றோரும் பகையாகுங் காலமிது
பொருள் விரயமுண்டாயினுஞ் சஞ்சலமது
வழிபல வந்தண்ட தீர்க்கமான யாலோசனை
தன்னால் வழக்கிருந்து விடுபடலாகுமே.
கணநாதனை கைத் தொழுது பொறுத்துப்
போவதே புண்ணியர்க் கழகு."
- அகத்தியர்

வீண் விவாதமும், சண்டையும் விடுத்து எந்த புது தொழிலிலும் அடி வைக்காதீர். தீர ஆலோசனை செய்து எந்த காரியத்திலும் ஈடுபட நன்மை உண்டாகும் என்பதாகும்.

திருவாதிரை - சுவாதி - சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"ராசரால் மேன்மையுண்டாம்
குறையிலா இன்பங்கூடி நிற்குமன்றி
தனமது சேர்ந்து அகக் கவலையறுக்கு
மன்றோ பெண்டிராலுஞ் அகஞ்சேர
கூடாக் கருமங்கூட யின்பங்
கூட்ட திருமாலவன் தமையேத்தி
பேரின்பமெட்டலாகுமே."
-பாம்பாட்டி சித்தர்

தனவந்தர்கள், அரசாங்க நிர்வாகிகளினால் பெரிய நன்மை சேரும். மனம் சந்தோசப்படும். குதூகலத்தினால், மனக்கவலை மெல்லவே குறையும். பெண்களால் நன்மை உண்டாகும். பெருமாள் தரிசனம் மிகுந்த நன்மை பயக்கும் என்பதாம்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"தொடுத்த வாழ்வு பழுதறுபடுமே
பாங்கான யுறவும் பல மாகுமெனவறி
கைப் பொருள் விருத்தியுண்டாமே
தாமதமான சுபமெல்லாஞ் சடுதியிலே
நடந்திடப் பாரு, பிரிந்து நின்ற
வுறவும் பலமாகி கூட வாயு நிலை
யமர் காலனையுதைக்க காலனைப்பாடி"
-கோரக்கர்

இதுவரை வாழ்வில் ஏற்பட்ட தொய்வு, ஏமாற்றங்கள் விலகி சுகம் கிடைக்கும். செலவினங்கள் கூடுதலாக ஏற்பட்டாலும் நன்மையே கிட்டும். வீடு, வாகனம் போன்றன விருத்தியடையும். பலகாலம் கருத்து மாறுபாடு கொண்டு வாழ்ந்த உறவும் நட்பும் இனி அன்புடன் வாழ்வார்கள். சிவபெருமானின் வாயு அம்சத்தை திருக்காளத்தி நாதன், சிதம்பரம் பொற்சபை போன்ற தலங்களை தரிசிப்பது சிறப்பு என்பதாம்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"புஜபலமோங்க ஞானமேன்மையுஞ்சேர
மேலோர் நேசமுண்டா குமென்றறி
தடை பல வந்து தாமதமேயான கரும
மெலாம் தடையறுபட்டே மேலாகுங்
காணே கடனுபாதை யறுபட, வைரியர்
தம் பகை மறைய இறை சிந்தை யோங்க
இனிதே இனி வாழ யண்டமளந்தானை
ஆராதித்தே வர யென்ன குறையோது"
- குதம்பைச் சித்தர்

உடல் பலம் கூடி, ஆன்ம பலமுங்கூடும் இக்காலம். இதுவரை தடைபட்ட அனைத்து காரியங்களும் இனி சித்தி பெறும். கடன்கள் விடுபட்டு பகைவர்களும் நட்புடன் பழகுவர். உலகளந்த பெருமாளை ஆராதிப்பது சிறப்பு.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"பட்ட துயரெலாமினிப் படப் பாரு ஏணி
யென ஏந்தி நின்று கீர்த்தி கொண்டானே
இனி பொற்காலமென கூத்தாடு வம்பொடு
வழக்குஞ் செயலாகுமென்றறி. நூதனமாய்
பணி சேர தேச சஞ்சாரஞ் சேருமது
திரவியத்தை பின்னில் சேர்க்குமே
அம்மையப்பனை கோட்டூரில் கொண்டாடி
நிற்ப குறையிலா வாழ்வு இட்டுமே"
-புலிப்பாணி சித்தர்

பட்ட துயரெல்லாம் பட்டுப் போகும். எல்லோருக்கும் ஏணியைப் போன்றிருந்து உயர்த்திய உங்கள் வாழ்வில் இனி பொற்காலம் வரப் போகுது. வழக்குகள் சாதகமாகும். தூர தேச பயணம் சேரும். திருச்செங்கோட்டு மலையப்பனை, அம்மையப்பனை பூஜித்து சரணடைய அனைத்து குறைகளும் நீங்கும் என்பதாம்.

அசுவனி - மகம் - மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"பலவர்ணத்தாரோடு கலந்துறவாட
கனவெல்லாமீடேற கனியு மிக்கலாமென்
போமே பிறந்த காலந் தொட்டிருந்த
வில்லலெலாங் கரைந்தே தனி சாம்
ராஜ்யஞ் செயலாகும் பொறத்தே நில்
ஊரெலாமுனைப் போற்ற பெருங்
கீர்த்தியுமுன்னைச் சேர, பீடை
தனிலிருந்து மேனி
விடுபடப் பாரே படை வேடுறை
பரதேவதையை சரணஞ் செய பாரில்
இயலாதே துனக்கு யியம்பு"
-கபிலர்

பலவிதமான மக்களுடன் கலந்து உறவாடும் காலம் இது. இதுவரை நினைத்திருந்த காரியம் எல்லாம் கனிய இதுவே தருணம். நீண்ட நாள் பட்ட துயரங்கள் விலகிடும் காலமிது. பெரும்புகழ், தனம் சேர, தீராத பிணிகள் விலக இதுவே தக்க சமயம். படைவேடு ரேணுகாம்பாளை தொழ, மேம்படலாகும்.

பரணி - பூரம் - பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"உற்றாருறவினராலுஞ் சஞ்சல
முண்டாம் தீயோர் தம்மால்
தொல்லையுங் காணுமே அபகீர்த்தியுங்
கூட கீழோரும் மேலோராய்
நின்றேசப் பாரீர் குலத்தொற்றுமை
குன்றவே சிறுவிரயமாகி விழிநீர்
சிந்த தெளிந்த சிந்தையராகி சட்டமுனி
தன்னை சரணடைந்து சுக போக
மெய்தலாகுமன்றோ"
-அகத்தியர்

சொந்தங்களால், கெட்டவர்கள் தம்மால் மனக்கலக்கமடையும். மரியாதைக் குறைவு சற்று காணும். குலத்தில் கருத்து மாறுபாடு தோன்றி மறையும். திடமான மனத்தோடு இருந்து சிவபெருமானின் அம்சமான சட்டநாதனை தொழுதுவர சுகபோகக் குறைவு இன்றி பிற்காலம் வாழலாகும் என்பதாம்.

"மாரி பொய்க்குஞ் சூடேறும்
தன வரத்து மிகுத்திட மணியு
மதிப் பேறு மென்றறிவீரே குடி
களுக்கு சுபிட்சம் மெத்தவே
சேர பாலகுங் கலைவாணி
யருளால் ஞானி யென்றாக நிற்பரே"
-சட்டை முனி சித்தர்

மழை வரத்து குறைந்து வெப்பம் கூடும். பணப் புழக்கம் அதிகம் இருப்பினும் பொருட்கள் விலை மதிப்புடன் திகழும். சிறு வயது பாலகர்களும் பெரியவர்களுக்கு சமமான அறிவார்ந்த மொழி பேசுபவர்களாய் வாழ்வர் என்பதாம்.

நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT