RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விளையாட்ட விளையாட்டா நினைக்காதீங்க

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 10:21 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விளையாட்டா அப்டின்னா? அப்படி கேட்குற பிள்ளைகள் தான் இப்ப அதிகம். காலை எழுந்தவுடன் படிப்புன்னு சொன்ன பாரதியார், மாலை முழுதும் விளையாட்டுன்னும் சொல்லியிருக்கார். வெளியில் போய் விளையாடுறதுன்னா என்ன என்பதே இப்ப இருக்கிற பிள்ளைங்களுக்கு சுத்தமா தெரியறதில்லை.

விடுமுறை விட்டாச்சா பாட்டி வீடு, மாமா வீடுன்னு எதாவது கிராமத்துக்கு போனோமா, கழனியில் குதிச்சு விளையாடுனோமா ஆலமரத்து விழுதை பிடிச்சுத் தொங்கினோமா, கண்ணாம்பூச்சி விளையாடினோமான்னு கழிச்ச போன தலைமுறை மலையேறிவிட்டது. காலையில் ஸ்கூல், அப்புறம் டியூசன், செஸ், டிராயிங், கோச்சிங் கிளாஸ், பத்தாம் வகுப்பு செல்லும் முன்பே அதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது என்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

அவர்கள் பொழுது போக்குக்காக தேடுவது வீடியோ கேம், ஆண்ட்ராய்டு செல்லில் கேம் விளையாடுறதை தான். இப்படித்தான் போகுது இப்ப இருக்கிற பசங்களோட டைம். பத்து வயசு பசங்க கூட அம்மா அப்பா தர பாக்கெட் மணியை ப்ரவுஸிங் சென்டர் போய் கேம் விளையாடறதில் கரைக்கறாங்க.

குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி:

விளையாட்டுத்தான். விளையாட்டு மனதுக்கும் மூளைக்கும் ரிலாக்ஸ் தருவதுடன் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். ஆனால் இப்ப இருக்குற பசங்க நல்லா விளையாடுறதில்ல அதனால் அவங்களுக்கு மிஞ்சுறது ஊளைச்சதை தான்.

அதனால தான் இப்ப இருக்கிற பெரும்பான்மையான பசங்க ஙிவிமி ஏடாகூடமா இருக்கு. குழந்தைங்க கொழுகொழுன்னு இருந்தா அழகு தான். ஆனால் அளவுக்கு மீறின கொழுகொழுப்பு ஆபத்து தான் எப்போதும்.

முன்பெல்லாம் நீதி போதனை என்று ஒரு பீரியட் இருக்கும். அந்த பீரியட்டுக்கு வரும் ஆசிரியர் சின்னச் சின்னக் கதைகள் சொல்வார். ஆனால் இப்போது அந்த பீரியட் பேருக்கு மட்டுமே உள்ளது. எக்ஸ்ட்ரா பாடங்கள் எடுக்க பயன்படும் ஒரு பீரியட் ஆகிவிட்டது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்பே இல்லை. அதனால் ரிலாக்ஸேசனுக்காக அவர்கள் வீடியோ கேம், செல் கேமில் கவனம் செலுத்துகின்றனர்.

முன்பெல்லாம் பள்ளி நேரம் முடிஞ்சதும் குறைஞ்சது ஒரு மணி நேரமாவது பசங்க விளையாடுவாங்க. இப்ப அதுவும் கிடையாது. ஸ்கூல் டைம் முடியறதுக்கு 5 நிமிசத்துக்கு முன்னாடியே ஸ்கூல் வேனில் ஏறியாகணும். அதிக உடல் பருமன் சிறிய வயதிலே சர்க்கரை நோய் ஏற்படக் காரணமாயிருக்கு.

வீடியோ கேம் விளையாடறதால சின்ன வயசிலே பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி போட்டுக்க வேண்டிய நிலைமை வருது. குழந்தைங்க விளையாட்டு விஷயத்தில் பெத்தவங்க கொஞ்சம் கேர் எடுக்கிறது நல்லது.


தொடர் செல்போன் விளையாட்டுகளால் புத்தி மந்தமாகும். டாக்டர் எச்சரிக்கை

குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன், கூறுகையில், ‘‘இந்த காலத்து குழந்தைகள் அதிக பருமன் ஆவதற்கு 2 முக்கிய காரணங்கள். ஒன்று கொழுப்புச் சத்து அதிகமான, நார்ச்சத்துக் குறைவான உணவுகள் சாப்பிடுவது.

இரண்டாவது உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கிறது. குழ்ந்தைகள் எந்நேமும் டிவி, வீடியோகேம், கம்ப்யூட்டர் பார்த்துக்கிட்டு இருக்கிறதால மற்ற குழந்தைகளோடு பழகும் தன்மை குறையுது.

ஸ்போர்ட்ஸ் நமக்கு கத்துத்தர முக்கியமான விஷயம் குழு மனப்பான்மை. அது இல்லாம போகும் போது ஒருத்தரை ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற குணமே வராது. நிறைய பசங்களுக்கு பொதுவா நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ எப்படி பேசறது, பழகுறதுன்னு கூட தெரிவதில்லை.

தங்களை சுத்தி என்ன நடக்குது என்று கூட தெரிவதில்லை. தனக்கே என்ன நடக்குதுன்னு கூட அவங்களுக்கு தெரிவதில்லை. வயலண்ட்டான விஷயங்கள் பார்க்கும் குழந்தைகளிடம் வன்முறை குணம் வளர்ந்துவிடும் அபாயமும் இருக்கு.

உடல் செயல்பாடுகள் அதிகம் இருந்தால் தான் மூளை நல்லா வேலை செய்யும். புத்தி கூர்மையா இருக்கும். இந்த மாதிரி எந்நேமும் டிவி, வீடியோகேம் பார்த்துக்கிட்டு இருப்பதால் உடல்பருமன்தான் அதிகரிக்கும்.

இப்படி சின்னவயசுல ஏற்படும் அதிகப்படியான கொழுப்பு அவர்களுக்குப் பெரிதானாலும் குறையாது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் சின்ன வயசில் பருமனான உடல் இருக்கும் பிள்ளைகளுக்கு பெரிதானால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் அபாயம் இருக்கு. தைராய்டு பிரச்சனையும் வரலாம்.

சிலீப்அப்னியா எனும் பிரச்சனையும் வர வாய்ப்பிருக்கு. தொடர்ந்து டிவி, வீடியோகேம், கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்களில் அழுத்தம் ஏற்படலாம்.

பீட்சா, நூடுல்ஸ், பர்கர் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுவகைகளைக் குறைக்கணும். டிவி, வீடியோகேம், கம்ப்யூட்டர் பார்க்கும் நேரத்தைக் குறைத்து நிறைய நேரம் விளையாட விடணும்.

டிவி, செல்போன், கம்ப்யூட்டரில் அவங்க என்ன பார்க்கறாங்க என்பதை கவனிக்கணும். கம்யூட்டரில் சில விஷயங்களை அவங்க பார்க்க முடியாதபடி உங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்க சில வழிமுறைகள் உள்ளன.

அதை பயன்படுத்தி அவர்கள் பார்க்கக்கூடாத விஷயங்களை தடை பண்ணி வைங்க. பிள்ளைகளோடு நட்போடு இருந்து அவங்களோட கலந்து பேசி பழக நேரம் ஒதுக்கணும். அப்பதான் அவங்க என்னென்ன பண்றாங்க என்பதை உங்களால் கவனிக்க முடியும்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT