RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

சென்னை உலக கபடி போட்டிக்கு ரூ.1 கோடி நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

From: 'விஸ்தாரம்'

POST 116/1/2014, 1:39 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கபடி போட்டிக்கு தமிழக அரசு மானியமாக ஒரு கோடி ரூபாய் வழங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," முதல்-அமைச்சர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில் விளையாட்டிற்கென முதல்- அமைச்சர் தலைவராகக் கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று 2005ஆம் ஆண்டு விளையாட்டிற்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

மேலும் ஜெயலலிதா முதல் முறை முதல்-அமைச்சராக இருந்த போது தான் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. இது மட்டு மன்றி விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்க ஊக்கத் தொகை, மாவட்டம் தோறும் விளையாட்டரங்கங்கள் அமைத்தல், கிராம விளை யாட்டுக்களை ஊக்குவித்தல், உடற்பயிற்சி மையங்கள் அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், குறிப்பாக கிராம மக்களிடையே, மிகவும் பிரபலமான விளையாட்டு கபாடியாகும். இந்த விளையாட்டுக்கான உலக அளவிலான போட்டிகள் சென்னை மாநகரில் வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4வது வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஈரான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா, சைனீஸ் தைபே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி அணிகள் கலந்து கொள்ளும்.

சென்னையில் நடக்கும் இப்போட்டிகளை நடத்துவதற்கு அரசு மானியமாக 1 கோடி ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிக அளவில் உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டரங் கங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையி லான அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சர்வ தேச தரத்திலான ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் வருகிற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக 8வது உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் வாகையர் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, கிரேட் பிரிட்டன், ஹாங்காங், சீனா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, அயர்லாந்து, எகிப்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா, நைஜிரியா, ஸ்பெயின் மற்றும் நியுசிலாந்து ஆகிய 19 நாடுகளை சார்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். உலக அளவிலான இந்த போட்டிகளை சென்னையில் நடத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு மிகவும் அடிப்படை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் ஆகும். தினந்தோறும் செய் யும் உடற்பயிற்சியின் மூலமே இதனைப் பெறமுடி யும். எனவே இளைஞர் கள், சிறார்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கி யமாக வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை நகரில் ஜவஹர் லால் நேரு விளையாட்ட ரங்கம் மற்றும் மதுரை, திருவண்ணாமலை, கன்னியா குமரி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய 16 இடங் களில் உள்ள மாவட்ட விளை யாட்டரங்கங்கள் என 17 இடங்களில் 1,500 முதல் 2,000 சதுர அடி பரப்பளவில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க 1 கோடியே 50 லட்சம் ரூபாய், இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடியே 55 லட்சம் ரூபாய் என 4 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்", இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT