RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம்

சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம்

From: 'விஸ்தாரம்'

POST 1on 19/1/2014, 5:49 am

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...
டெல்லி:"எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று கடைசியாக ட்வீட் செய்துவிட்டு மரணத்திருக்கிறார் சுனந்தா.

சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம் 18-1390017944-shash-tharoor-sunanda-pushkar-wedding-600

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் இருவரின் பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.
மத்திய அமைச்சர் சசிதரூர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். அதே போல சுனந்தா புஷ்கரும் இருமுறை திருமணம் செய்தவர்.

மூன்றாவதாக திருமண வாழ்க்கை மூலம் இணைந்த சசிதரூர்-சுனந்தா ஜோடியின் மண வாழ்க்கையும் கசந்து கடைசியில் மரணத்தில் முடிந்திருக்கிறது.POST 2on 19/1/2014, 5:50 am

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...
[img]
சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம் 18-1390017604-sunanda-pushkar-shashi-tharoor3-600
[/img]

சசி தரூர் கேரளாவை சேர்ந்தவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 2009 தேர்தலில் சிபிஐ கட்சிக்காரரைத் தோற்கடித்து வெற்றிப் பெற்று, அமைச்சரானவர். முதலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஐபிஎல் சர்ச்சை-விவகாரத்தினால் பதவி பறிக்கப் பட்டது. அப்பொழுது தான், இவரை சுனந்தாவுடன் இணைத்துப் பேசப் பட்டது.

இந்த கிசுகிசுவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் 2010ல் சுனந்தாவை திருமணம் செய்து கொண்டார். ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. ஏராளமான பிரபலங்கள் திருமணத்திலும், வரவேற்பிலும் பங்கேற்றனர்.

இருவருக்குமே இது மூன்றாவது திருமணம்தான். முதல் இரண்டு திருமணங்களும் நிலைக்கவில்லை. 2009ல் துபாயில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சசிதரூரை பார்த்த போது அது நட்பாக மலர்ந்து வாழ்க்கையில் இணைத்துள்ளது. சசிதரூருக்கும் இது மூன்றாவது திருமணம்தான்.

1990ல் காஷ்மீரில் பொமை என்ற இடத்தில் இருந்த சுனந்தாவின் வீட்டை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொளுத்தினர். இதனால், அவர்கள் குடும்பம் வெளியேறியது. காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் ரைனா என்பவரை சுனந்தா திருமணம் செய்து கொண்டாலும், இரண்டே வருடங்களில் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு கேரளாவைச் சேர்ந்த சுஜித் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்து விட்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் சிவ், இப்பொழுது தாத்தாவோடு பாட்டியாலாவில் இருக்கிறார்.

சர்ச்சை நாயகன் சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு புதன்கிழமை கருத்து வெளியிட்ட நிலையில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.POST 3on 19/1/2014, 5:51 am

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...
[img]
சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம் 18-1390017623-shashi-tharoor-sunanda-pushkar-44-600
[/img]

பாகிஸ்தான் பெண்ணுடனான தொடர்பு பற்றியும், சுனந்தாவை விவகாரத்து செய்வது பற்றிய கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்த சசி தரூர், "தானும் தனது மனைவி சுனந்தாவும் மகிழ்ச்சிகரமான தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். சுனந்தாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் "ட்விட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.

விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, "கால்நடை வகுப்பு' என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர். தற்போது மனைவி சுனந்தாவின் மர்மமரணம் சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது

மரணத்திற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, "எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்." என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.POST 4

Sponsored content

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...« PREV  |  NEXT »Associated with other topics

SPONSORED CONTENT