RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா

From: 'விஸ்தாரம்'

POST 120/1/2014, 3:31 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சண்டிகர்: திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்து வரும் படம் ‘மான் கராத்தே'.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது.

‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா 19-1390105632-hansika-mot-600

அங்கு நிலவி வரும் கடும் மூடும்பனியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அப்படத்தின் கதாநாயகியான ஹன்சிகா குளிரையும் பொருட்படுத்தாது, லுங்கி மற்றும் சட்டை அணிந்து டான்ஸ் ஆடியுள்ளாராம்.

பார்வையையே மறைக்கும் அளவிற்கு கடும் மூடுபனியும், போக்குவரத்தை சீர்குலைக்கும் மோசமான வானிலையும் பஞ்சாபில் நிலவி வருகிறது. வானிலை தெளிவாக இல்லாத காரணத்தால் சண்டிகருக்கு வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் மூடுபனியால் எதிரில் இருப்பவற்றையே பார்க்கமுடியாத நிலை அங்கு நிலவுகின்றது. சண்டிகரிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே உள்ளது.

‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா 19-1390105520-hansika4334-600-jpg

ஆனால் இந்தத் திரைப்படக்குழுவோ சண்டிகரிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் குறைந்த அளவில் வீடுகளைக் கொண்ட கோதுமை வயல்களில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. தினமும் சண்டிகரிலிருந்து இந்தக் குழுவினர் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனும், ஹன்சிகா மோத்வானியும் அங்கு இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்களாம்.

இங்கு எடுக்கப்பட்டுவரும் ஒரு பாடல் காட்சிக்கு பிருந்தா மாஸ்டர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். இதில் ஹன்சிகா லுங்கி சட்டையுடன் நடனமாடும் காட்சி ஒன்று படமாக்கப் பட்டுள்ளதாம்.

‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா 19-1390105529-maan-karate-600-jpg

கடும் குளிரையும் பொருட்படுத்தாது, லுங்கி அணிந்து நடித்துக் கொடுத்துள்ள ஹன்சிகாவின் தொழில் பக்தியை பாராட்டினார்களாம் படக்குழுவினர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT