RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்! - பஹத் பாஸில்

From: 'விஸ்தாரம்'

POST 122/1/2014, 6:21 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கொச்சி: என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது எந்த ஒரு பெண்ணுக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். அந்த வகையில் எனக்காக பெரிய தியாகம் பண்ணுகிறார் நஸ்ரியா என அவரை திருமணம் செய்யவிருக்கும் நடிகர் பகத் பாஸில் தெரிவித்துள்ளார்.

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்! - பஹத் பாஸில் 21-1390295758-fahad-fazil545-600-jpg

இயக்குநர் பாஸிலின் மகன் நடிகர் ஃபஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் நிக்காஹ் நிச்சயிக்கப்பட்டிருப்பதுதான் தற்போது தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் பரபரப்பான செய்தியாக பேசப்படுகிறது.

இந்நிலையில் என்னை மணப்பது மிகவும் அபாயம் என்று நடிகர் ஃபஹத் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளது, மேலும் பரபரப்பு கிளப்பியுள்ளது.

நஸ்ரியாவுடனான நிக்காஹ் குறித்து நடிகர் ஃபஹத் கூறுகையில், "ஆம்... எனக்கும் நஸ்ரியாவிற்கும் நிச்சயம் நடந்திருப்பது உண்மைதான். என்னை மணப்பது மிகவும் அபாயமானது. ஏனென்றால் என்னை மணப்பது ஒரு பெண் அவளது வாழ்க்கையையே தியாகம் செய்வதற்குச் சமம். நஸ்ரியா அந்தத் தியாகத்துக்கு தயாராக உள்ளார்.

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்! - பஹத் பாஸில் 21-1390295984-nazriya-nazim-12-600

நஸ்ரியாவை என் குடும்பத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. நஸ்ரியாவுடன் பேசத் துவங்கியதும் நானும் காதலில் விழுந்துவிட்டேன். இதில் எனக்கே ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நான் சம்பிரதாயமான நிக்காஹ்விற்கு ஒப்புக்கொண்டது தான்.

சத்தியமாக சொல்கிறேன் இந்த பெண் (நஸ்ரியா) என்னை மாற்றிவிட்டாள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் நஸ்ரியாவை கடைசி வரை நல்லமுறையில் பார்த்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்," என்று பதிவு செய்திருக்கிறார்.

பஹத் பாஸில் இப்படிச் சொல்ல காரணமிருக்கிறது. நிஜத்தில் அவர் கொஞ்சம் ப்ளேபாய் டைப். சில மாதங்களுக்கு முன் நானும் ஆன்ட்ரியாவும் காதலிக்கிறோம், கல்யாணமும் பண்ணிக்குவோம், என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த ஆன்ட்ரியா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே. அவர் லூஸ் டாக் விட்டுட்டார் என திட்டியது நினைவிருக்கலாம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT