RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம்

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:00 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிப்பு: நித்யா மேனன், க்ருஷ் சதார், நரேஷ், வித்யுலேகா
இசை: அரவிந்த் சங்கர்
ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளை
தயாரிப்பு: ராஜ்குமார் சேதுபதி
இயக்கம்: ஸ்ரீப்ரியா



22 பீமேல் கோட்டயம் என சிறந்த மலையாளப் படத்தை தன்னால் முடிந்த வரை கெடுத்து.. ஸாரி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீப்ரியா ரீமேக் என்ற பெயரில்!

ஒரிஜினல் படத்தில் கதை, அதன் திரைக்கதை, குறிப்பாக பிரதாப் போத்தன் நடிப்பு... சான்ஸே இல்லை. ஆனால் இந்த ரீமேக்கில் அதெல்லாம் சுத்தமாக இல்லை!

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நர்ஸ் நித்யா மேனன் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். வேலைக்காக கனடாவுக்குப் போக முயற்சிக்கிறார். அப்போதுதான் க்ரிஷ்ஷைச் சந்திக்கிறார். விசா ஏற்பாடு செய்து தருவதாக அவர் தரும் வாக்குறுதியை நம்புகிறார். க்ரிஷ் ஒரு பிம்ப் என்பது தெரியாமல் காதலில் விழுகிறார் நித்யா. அதன் விளை மகா கொடுமை...

எங்கு பார்த்தாலும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்படும் ஒரு மோசமான தருணத்தில், இது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் தேவை என்பது உண்மை என்றாலும், இந்தப் படத்தில் ஒரு காட்சி கூட உயிர்ப்புடன் அல்லது குறைந்தபட்ச ஈர்ப்புடன் இல்லை என்பதுதான் சோகம்.

காட்சிகளில் ஏக சொதப்பல்கள்... இதற்கு நிச்சயம் இயக்குநர் ஸ்ரீப்ரியாதான் பொறுப்பு. காதலனாக வருபவன் ஒரு பிம்ப்... பக்கா மாமா பையன் என்பதுதான் பார்வையாளர்களுக்குப் புரிந்துவிடுகிறதே... அந்த இடத்தில் எதற்காக இரண்டு சோகப் பாடல்கள்... காதலி என்ற பலியாட்டுக்காக அவன் உருகுவது போன்ற சித்தரிப்புகளெல்லாம் எதற்கு?

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம் 24-malini-22-palayamkottai-s--

நித்யா மேனன் எப்படிப்பட்ட பாத்திரம் என்பதுகூட சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. குழந்தைத்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, கைகளை நீட்டி காதலனை அணைக்கக் கூப்பிடுகிறார் அடிக்கடி. இப்படிப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்க உறுதிமிக்க பெண்ணாக மாறும் விதத்தை எத்தனை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்...

ம்ஹூம். ஜெயிலில் திடீரென்று நான் கொல்லப் போறேன் என்று சொல்கிறார்.

உடனே சக கைதியின் ஏற்பாட்டில் ஒரு வண்டி வந்து அழைத்துப் போகிறது. அடுத்த காட்சியில் முக்கிய வில்லனைக் கொல்கிறார். இந்தக் காட்சிகளில் படம் சுத்தமாகப் படுத்திவிடுகிறது.

நித்யா மேனனுக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற வேடம். அவராலும் இந்த கனமான பாத்திரத்தைச் சுமக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

நித்யாவின் காதலனாக நடித்துள்ள க்ரிஷ்ஷைப் பார்த்தால், தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு பிரசன்னா என்றுதான் தோன்றுகிறது. முகமும் உடல்மொழியும் அப்படித்தான் உள்ளன.

மலையாளத்தில் பிரதாப் போத்தன் கலக்கிய அந்த வில்லன் வேடத்தில் தெலுங்கு நடிகர் நரேஷ். ஒரு ரீமேக் படம் எனும்போது, பல நிலைகளிலும் ஒப்பீடு இருக்கவே செய்யும். அந்த வகையில் நரேஷ் பாத்திரம் ஒரு மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு ஓகே. அரவிந்த் சங்கரின் இசை, ஏதோ தொலைக்காட்சித் தொடருக்கான எபெக்டைத் தருகிறது.

கிடைக்கிற மேடைகளிலெல்லாம் தமிழ் சினிமாவில் ஆபாசமும், டாஸ்மாக் காட்சிகளும் பெருகி விட்டதே என்று கவலைப்படுபவர் இயக்குநர் ஸ்ரீப்ரியா. ஆனால் அவர் எடுத்துள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்...

நிறைய இடங்களில் நேரடி ஆபாச வசனங்கள், மதுகுடிக்கும் காட்சிகள், பார் நடனங்கள், பெண்களும் சரக்கடிக்கும் காட்சி... ஒரு கட்டத்தில் வில்லன் நேரடியாக கேட்கிறார் 'கேன் ஐ ஹாவ் செக்ஸ் வித் யு?' என்று ஹீரோயினிடம்.. ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் புணர வேண்டும் என்பதை அத்தனை பச்சையாக வர்ணிக்கிறார்...

ஆனால் சென்சாருக்கு காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை... க்ளீன் யு சான்று கொடுத்திருக்கிறார்கள்!



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT