RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ரூ 1000 கோடியை அள்ளுமா ரஜினியின் கோச்சடையான்? - இதோ ஒரு கணக்கு!!

From: 'விஸ்தாரம்'

POST 14/2/2014, 2:22 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோச்சடையான் 6000 ப்ளஸ் அரங்குகளில் ரிலீஸ் என்றதும், மீடியாக்களும் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகளும் போடும் வசூல் கணக்குகள் அதிர வைக்கின்றன...

இவர்களின் கணக்குகளின்படி கோச்சடையான் குறைந்தபட்ச முதல்வார வசூல் மட்டும் ரூ 600 கோடி... அதிகபட்சம் ரூ 1000 கோடியாக இருக்கலாம்!

இந்தியாவைப் பொருத்தவரை இதெல்லாம் எந்த நடிகராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இமாலய வசூல். சர்வதேச அளவில் மிகச் சில இயக்குநர்களின் படங்கள் மட்டுமே இந்தத் தொகையை வசூலிக்க முடியும்.

படமே வர்ல.. அதுக்குள்ள வசூல் கணக்கா? இது அனிமேஷன் படம்தானே... பாபா மாதிரி ஆகும் என்றெல்லாம் விமர்சனக் குரல்கள் கேட்ட வண்ணம் உள்ளன.

ஆனாலும் இது ரஜினி படமாச்சே.. படம் எப்படி இருந்தாலும் முதல் வாரம் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்க்கத்தான் போகிறார்கள். அந்த மக்கள் மற்றும் கோச்சடையான் வெளியாகும் அரங்குகள் கணக்கை வைத்து பாக்ஸ் ஆபீஸில் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு தோராய வசூல் கணக்கை மீடியா வெளியிட்டுள்ளது.

இந்த தோராய வசூல் கணக்கே கேட்பவர்களை மலைக்க வைக்கிறது. இந்த கணக்குகளின்படி முதல் 5 நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் ரூ 400 கோடியிலிருந்து 500 கோடி வரை வசூலாகும் என தெரிய வந்துள்ளது.

படம் வெளியாகும் தினமான ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமையாகும். அன்றிலிருந்து ஏப்ரல் 14 வரை தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள். இந்த நான்கு நாட்களும் படம் எப்படியிருந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாகத்தான் ஓடும்.

இன்னொன்று ரஜினி படங்களுக்கு ஆகும் முன்பதிவு. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்தைப் பொருத்தவரை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு படம் வெளியாகும் அத்தனை அரங்குகளிலும் 100 சதவீதம் முன்பதிவு நடந்துவிடும்.

இந்தியாவில் மட்டும் 3500 அரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மால்களில் உள்ள தியேட்டர்களில் குறைந்தபட்சம் 300 இருக்கைகள், ஒற்றைத் திரை அரங்குகளில் குறைந்தபட்சம் 500 இருக்கைகள் என்பதுதான் இன்றைய நிலை. சராசரியாக ஒரு அரங்குக்கு 400 இருக்கைகள் எனப் பார்த்தாலும் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 3500 அரங்குகளில் 14000 காட்சிகள் நடக்கும். மொத்தம் 5,60,000 இருக்கைகள்.

ஒரு டிக்கெட் விலை ரூ 120 என்று வைத்துக் கொண்டாலும் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் வசூலாக ரூ 67 கோடியே 20 லட்சம் கிடைக்கும் கோச்சடையானுக்கு. 5 நாட்களில் ரூ 336 கோடிகள். இது இந்தியாவில் மட்டும்.

வெளிநாடுகளில் இன்னும் 3000 அரங்குகளில் வெளியாகப் போகிறது இந்தப் படம். அங்கெல்லாம் பெரும்பாலும் டாலர்களில்தான் கட்டணம். குறைந்தது 25 டாலர் தொடங்கி 50 டாலர்கள் வரை (எந்திரனுக்கு அமெரிக்காவில் வசூலிக்கப்பட்ட கட்டணம் 40 டாலர்கள்!) கட்டணம் வசூலிக்கப்படும். ஒரே ஒரு வாரம் ஓடினால்கூட வெளிநாடுகளில் ரூ 300 கோடியை இந்தப் படம் அள்ளும் என கணித்துள்ளனர்.

பெரும்பாலும் இந்தியாவில் முதல் நாளில் ரஜினி படத்தின் டிக்கெட் விலை ரூ 1000 வரைகூட வெளியூர்களில் விற்கப்படுகிறது. முதல் 5 நாட்களுக்கு தினசரி 5 அல்லது ஆறு காட்சிகளை ஓட்டுவதற்கு அனுமதியும் பெற்றுவிடுகின்றனர் தியேட்டர்காரர்கள். சென்னையிலேயே எந்திரனுக்கு 6 காட்சிகள் ஓட்டியதெல்லாம் நடந்தது நினைவிருக்கலாம்.

எனவே கோச்சடையான் படம் எப்படி இருந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும், அது முதல் வார வசூலைப் பாதிக்கப் போவதில்லை. முதல் வாரத்தில் மட்டுமே இந்தப் படம் குறைந்தது ரூ 600 கோடி முதல் 1000 கோடி வரை குவித்துவிடும் என எதிர்ப்பார்ப்பதாக பாக்ஸ் ஆபீசில் கணித்திருக்கிறார்கள். இதெல்லாம் ரஜினியால்.. அவரது படங்களால் மட்டுமே சாத்தியம். வேறு எந்த நடிகரும் கனவிலும் இதை நினைத்துப் பார்க்க முடியாது!

சந்திரமுகி என்ற படம் வெளியாகும் வரை ரூ 100 கோடி வசூல் என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் கற்பனைக்கெட்டாத சமாச்சாரமாக இருந்தது. சிவாஜி த பாஸ் வந்த பிறகுதான் நான்கைந்து நாடுகளோடு முடங்கியிருந்த இந்திய சினிமாவின் எல்லை 33 நாடுகளுக்குப் பரந்துவிரிந்தது. எந்திரன் வந்தபிறகுதான் 80 நாடுகளில் ஒரு இந்திய சினிமா பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான (3300) அரங்களுகளில் வெளியான அதிசயமும் நடந்தது!! எனவே 6000 ப்ளஸ் அரங்குகளில் வெளியாகும் கோச்சடையான் நிகழ்த்தவிருக்கும் வசூல் சாதனைகளைக் காண பாக்ஸ் ஆபீஸ் காத்திருக்கிறது ஆவலுடன்!



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT