RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

குஜராத் மாடல், தமிழக மாடல்... நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி பேச்சு!

From: 'விஸ்தாரம்'

POST 112/6/2014, 2:22 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: குஜராத் மாடலைவிட தமிழகத்து நிர்வாகம் சிறந்தது என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி விஷயங்களில் போட்டிபோடுவது ஆரோக்கியமானது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி கடந்த திங்கள்கிழமை உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்களும் பேசினர். இதையடுத்து, தீர்மானத்தின் மீதான பேச்சுக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியாவின் சக்தியை உலகத்திற்கு காண்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரின் கடமையாகும். அரசு ஒரு குறிப்பிட்டவர்களுக்காக இயங்காது. இது ஏழைமக்களுக்கான அரசு. நாம் ஏழை மக்களை பற்றி கவலைப்படாவிட்டால் இந்த நாட்டு மக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

ஏழ்மையை ஒழிக்க இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் கல்வியறிவுதான். இந்த நாட்டு விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உருப்படியாக ஏதாவது செய்துள்ளோம் என்று நேர்மையாக நம்மால் கூற முடியுமா? கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, நல்ல கல்வி கிடைத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு கிராமங்களால் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிப்பதுதான் அரசின் குறிக்கோள். கிராமங்களில் பணியாற்ற ஆசிரியர்கள் விரும்பாவிட்டால், செயற்கைக்கோள் மூலமாக கிராம மாணவர்களுக்கு பாடம் கற்பிப்போம்.

ஏழைகள் மீண்டும் பசியால் வாடிவிடாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். உணவு பொருட்கள் வினியோகத்தில் பெரும் சிக்கல் உள்ளது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் நம்மை நாமே கேள்வி கேட்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

பலாத்காரங்களை உளவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டாம் என்று அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். பலாத்காரத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் நிறுத்த வேண்டும். பெண்களின் மாண்புடன் நாம் விளையாடக்கூடாது. பெண்களை மதிப்பதும், அவர்களை பாதுகாப்பதுமே இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.

இளைஞர்களின் திறமைகள் வளர்ச்சி பெற வேண்டும். ஊழல் இந்தியாவை முன்னிறுத்தாமல் இனிவருங்காலங்களில் திறமை மிக்க இந்தியா முன்னிறுத்தப்பட வேண்டும். பலமற்ற சமூகத்தினரால் சுயசார்பை பெற முடியாது. இஸ்லாமிய சகோதரர்கள் இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட நிலையில், வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை முன்னேற்ற நாம் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமியர்களை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சியை நினைத்து பார்க்க முடியாது.

மக்கள் இயக்கத்தால் நாட்டுக்கு மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்ததை போல மக்களுக்கான வளர்ச்சியை நாம் பெற்றுத்தர வேண்டும். காந்தியின் 150வது பிறந்த தின ஆண்டில் சுத்தமான, நேர்மையான இந்தியாவை அவருக்கு பரிசாக அளிப்போம் வாருங்கள். 2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களும் வீடு, கழிப்பிடம், மின்சாரம், குடிநீர் வசதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணிக்கையை வைத்து பாண்டவர், கவுரவர் என காங்கிரஸ் நண்பர்கள் பிரித்து பார்க்க வேண்டாம். உங்களை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சி இருக்காது. மாநிலங்கள் இடையே வளர்ச்சி குறித்த ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

குஜராத் மாடல் நிர்வாகம் சிறந்தது என்று நான் கூறிய நிலையில், தமிழ்நாடு மாடல்தான் சிறந்த நிர்வாகம் என்ற கூறுவதையும் நான் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு மாநிலங்களும் சில தனித்துவங்களை பெற்றுள்ளன. சில திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகின்றன. தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்தும் பெரிய அண்ணன் தோரணையில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு மோடி பேசினார்.

இதன்பிறகு குரல்வாக்கெடுப்பு மூலம் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT