RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆம் ஆத்மியில் நடிகை நமீதாவா? மறுக்கும் தமிழக ஒருங்கிணைப்பாளர்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 11:22 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா இணைய உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது.

அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என நடிகை நமீதா கூறியிருந்தார்.

ஆம் ஆத்மியில் நடிகை நமீதாவா? மறுக்கும் தமிழக ஒருங்கிணைப்பாளர் 04-namitha-hot1-600

ஆம் ஆத்மியில் நடிகை நமீதாவா? மறுக்கும் தமிழக ஒருங்கிணைப்பாளர் இதையடுத்து நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறார் என்றும், அவருக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் லெனின் மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மற்ற கட்சியில் இருந்து பெரிய தலைவர்கள் வந்தாலும், திரையுலகில் இருந்து நடிகர்கள், நடிகைகள் வந்தாலும் கட்சியின் உறுப்பினராகத்தான் சேர்த்துக்கொள்வோம்.

கட்சியில் எந்தவித பொறுப்பும் வழங்க தயாராக இல்லை என்றார். தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை விரும்புபவர்கள் சிலர் கூறுகையில், நமீதா எங்கு போனாலும் ஹாய் மச்சான்ஸ் என்றுதான் பேசுவார். அவரை கட்சியில் சேர்த்தால், ஆம் ஆத்மி கட்சியை, ஹாய் மச்சான்ஸ் கட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டியதுதான்.

பணக்காரர்கள், பிரபலங்கள் எங்கள் கட்சியில் சேருவது தவறு அல்ல. அதனையும் நாங்கள் வரவேற்கிறோம். கட்சியில் சேர்பவர்கள் எதனை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரைவில் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சில குறிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT