RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

Go to page : 1, 2  Next

நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி. மகேந்திரா

From: 'விஸ்தாரம்'

POST 15/1/2014, 8:45 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
"சிவாஜியை பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? அவருக்கும், எனக்கும் என்ன உறவு? உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், சிவாஜி என்கிட்டே, ஒரு எதிர்மறையான பாதிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறார்!'

- சிவாஜியோட பெரிய ரசிகன், சிவாஜி வெறியன் என்று, தன்னை சொல்லிக் கொள்ளும், ஒய்.ஜி.மகேந்திராவா இப்படி சொல்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
அவரே காரணத்தையும் சொல்கிறார்:
ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும் போது தான், முழுமை பெறுகிறான். எல்லாரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பை பார்த்த பின், வேறு யாரையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படியே ரசித்தாலும், அவர்களுக்குள், சிவாஜியின் வடிவத்தையே பார்க்கிறேன். அனுமானுக்கு எதைப் பார்த்தாலும், ராமன் தெரிகிற மாதிரி.

பாரதியார், "எங்கெங்கு காணினும் சக்தியடா...' என்று பாடினார். என்னைப் பொறுத்த வரை, எங்கெங்கு காணினும் சிவாஜியடா!



POST 25/1/2014, 8:46 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
"சிவாஜியை, கடவுளாக நினைக்கிறீர்களா ...' என்று, என்னை கேட்டால், "ஆமாம்' என்று தான் சொல்வேன். நம்மை கடந்து, நமக்குள் இருப்பவர் தானே கடவுள். சிவாஜி நடிப்பினால், நம் எல்லாரையும் கடந்தும், ஒரு பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார். எனக்கு இவர், நடிப்பின் கடவுள். ஒரு பக்தன் என்ற முறையில், என்னுடைய காணிக்கையே, இக்கட்டுரைத் தொடர்.

ஜூலை, 21, 2001க்கு பின், (சிவாஜி அமரரான நாள்) உயிருடன் வாழ எனக்கு பிராண வாயு எவ்வளவு முக்கியமோ, அதே போல், சிவாஜியின் நினைவுகளும் முக்கியம்.
ஆண்டு, மாதம், தேதி வரிசைப்படி, நடந்த நிகழ்வுகளை, இந்த தொடரில் நான் சொல்லப் போவதில்லை. காரணம், மகா விஷ்ணுவின் தசாவதாரம் பற்றி பேசுகிறோம். ராமனைப் பற்றி பேசுகையிலே, கிருஷ்ணனைப் பற்றியும், நரசிம்ம அவதாரம் குறித்தும் பேசுவோம். சிவாஜி நடிப்பினால், கடவுள் விஷ்ணுவை விட, நிறைய அவதாரம் எடுத்திருக்கிறார். எந்த இடத்தில் பொருத்தமாக இருக்கிறதோ, அங்கே, அதை பற்றி சொல்கிறேன்.

கடந்த, 2001க்கு பின், நான் மேடை ஏற்றிய, என் எல்லா நாடகங்களிலும், சிவாஜி பற்றிய தகவல் நிச்சயம் இருக்கும். 2012ல் அரங்கேறிய என், "நாடகம்' என்ற நாடகத்தில், (நாடகத்தின் தலைப்பே "நாடகம்' தான்) 1975ம் ஆண்டில், நாடகத்தின் கதை, நடப்பதாக, ஒரு காட்சி வரும்.
நாடக நடிகரான நான், சிவாஜியோடு, டெலிபோனில் பேசுவதாக, ஒரு காட்சி. அதில்,
"நீங்க, நேரிடையாக என் கூட பேசறது, எனக்கு என்னமோ, இமயத்தை தொட்டு வந்த மாதிரி, ஒரு பீலிங் வருகிறது...' என்பேன்.

எதிர்முனையில் சிவாஜி குரல் ஒலிக்கும்... "ரொம்ப ஐஸ் வைக்காதேடா, நீயும் நடிகன், நானும் நடிகன். நமக்கெல்லாம், பீச்சிலே காந்தி மாதிரி, சிலை வைக்கவா போறாங்க?' என்று, கேட்பார்.
"ஏன் சார்... யார் கண்டாங்க... எதிர்காலத்திலே, காந்திக்கு, எதிரிலேயே உங்களுக்கு சிலை வைச்சாலும் வைப்பாங்க...' என்று, நான் பதில் சொல்வேன்.

இதைச் சொன்னதும், தியேட்டரில் பயங்கர கை தட்டல் மற்றும் ஆரவாரம் எழும்.
நாடகத்தை பார்க்க வந்திருந்த, சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அவரது மனைவி கண்ணம்மா, சிவாஜியின் மகள்கள் தேன்மொழி, சாந்தி போன்றோர், அதை கேட்டு அழுது விட்டனர். நடிகர் சின்னி ஜெயந்த், சிவாஜி மாதிரியே தத்ரூபமாக பேசியிருப்பார்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும், அவரது பிறந்த நாளை ஒட்டி, இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். சிவாஜி நடித்த படங்களிலிருந்து, சிவாஜி பாடியிருக்கும் பாடல்களை மட்டும், "ஒன்லி சிவாஜி சாங்ஸ்' என்று பாடுவோம். சம்பந்தப்பட்ட படங்களின் காட்சிகளை, அப்போது திரையிடுவோம்.

ரசிகர்கள், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போய் விடுவர். "ஒய்.ஜி.மெலடி மேக்கர்ஸ்' என்ற குழு நடத்தும், இந்நிகழ்ச்சியில், நான் டிரம்ஸ் வாசிப்பேன். அந்த விழா மேடையில், நடிகர் திலகம் சிவாஜியுடன் நடித்த, சமகால கலைஞர்களை அழைத்து, பாராட்டி, கவுரவித்து, "சிவாஜி அவார்ட் ஆப் எக்சலன்ஸ்' என்ற, விருது வழங்குவதை, வழக்கமாக கொண்டுள்ளோம்.



POST 35/1/2014, 8:49 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விருது வாங்கியவர்களில், வி.கே.ராமசாமி, நாகேஷ், கே.பாலாஜி, டைரக்டர்கள் ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, வைஜெயந்திமாலா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, எஸ்.வரலட்சுமி, எம்.சரோஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, சச்சு, மனோரமா, காக்கா ராதாகிருஷ்ணன், ஜேசுதாஸ், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, லட்சுமி, பத்மினி என, பெரிய பட்டியல் இன்றும் தொடர்கிறது.

இந்த விருது பெற்ற அனைத்து கலைஞர்களும், நடிகர் திலகத்தின் நடிப்பை ரசித்து, வியந்தவர்கள். அவரோடு இணைந்து பணியாற்றியதை, வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக கருதி, பெரிதும் மகிழ்பவர்கள்.

இது குறித்து, ஓரிரு மெய் சிலிர்க்கும் அனுபவங்களையும், நான் உங்களோடு, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

"சிவாஜி அவார்டு ஆப் எக்சலன்ஸ்' விருது வழங்குவது என்று, 2002-ம் ஆண்டு, முடிவு செய்த போது, எனக்கு, முதலில் நினைவுக்கு வந்த பெயர் வி.கே.ராமசாமி தான். காரணம், சிவாஜிக்கும், அவருக்கும் உள்ள நெருக்கத்தை, நேரில், ஷூட்டிங்கில் பல முறை பார்த்திருக்கிறேன். பேச்சுத் துணை தேவைப்படும் போது, "ராமு இங்கே வா...' என்று, உரிமையோடு அழைத்துப் பேசுவார். வி.கே.ராமசாமிக்கும், சிவாஜி என்றால் உயிர். "சிவாஜி விருது' பெற்ற ஒரு சில மாதங்களுக்கு பின், டிச.,24, 2002ல் வி.கே.ராமசாமி காலமானார். இறுதி மரியாதை செலுத்த, என் மனைவி சுதாவும், நானும் சென்றிருந்த போது, இந்த சிவாஜி விருதை, அவரது உடலுக்கு அருகே வைத்திருந்தனர். அவரது மனைவி ரமணி அம்மாள் தழுதழுத்த குரலில், "அவர், கடந்த ஐந்து மாதமாக, தினம் ஒரு முறையாவது, நீங்க கொடுத்த இந்த விருதை பற்றியும், உங்களை பற்றியும், முக்கியமாக, சிவாஜியோட அவரது அனுபவங்களையும் பேசிக் கொண்டே இருப்பார்...' என்று சொன்னார்.

*ராம்குமாரின் மகன் துஷ்யந்தின், திருமண நிச்சயதார்த்தத்திற்கு, எப்படியோ எனக்கு அழைப்பிதழ், விட்டுப்போய்விட்டது. நிகழ்ச்சி நடந்த பின், நண்பர் ஒருவர், "நீங்க ஏன் வரவில்லை' என்று கேட்டதும் தான், எனக்கு விஷயம் தெரிந்தது. உரிமையாக, ராம்குமாருக்கு அலைபேசி மூலம், குறுந்தகவல் அனுப்பினேன். பொதுவாக, ராம்குமார், எதற்கும் உடனே பதில் சொல்லும் பழக்கம் உடையவர். ஆனால், என்னுடைய, எஸ்.எம்.எஸ்.,க்கு பதிலும் வரவில்லை; போன் அழைப்பும் வரவில்லை. எங்களின் பொது நண்பரான, டாக்டர் சுதா, "நான் ஊரில் இருக்கிறேனா, எங்கே இருப்பேன்' என்று, விவரம் கேட்டார். அவருக்கு பதில் சொன்னேன்.
சிறிது நேரத்தில் ராம்குமார், அவரது மனைவி கண்ணம்மா மற்றும் டாக்டர் சுதா மூவரும், என்னுடைய ஆபீசுக்கு வந்துவிட்டனர். எனக்கோ, இன்ப அதிர்ச்சி! "சாரி மஹி... (அப்படித்தான் ராம்குமார் என்னை அழைப்பார்) எப்படியோ தவறு நடந்து போச்சு. இவ்வளவு நெருக்கமாக இருக்கிற, உன்னை நிகழ்ச்சிக்கு கூப்பிட மறந்தது தப்பு தான். இதை போனிலேயே சொல்லியிருக்கலாம். ஆனாலும், நேரிலே வந்து விளக்குவது தான் சரி என்று நினைத்தேன். அதுதான் வந்து விட்டோம்...' என்றார்.

பத்திரிகை வராததை குறிப்பிட்டு, அவர்களை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று, எனக்கு வருத்தமாயிற்று. சிவாஜி குடும்பத்தினர் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு, நான் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?



POST 45/1/2014, 8:54 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
என்றும் மனதில் நிலைத்து நிற்கும், பல அற்புதமான படங்களில், சிவாஜியோடு நடித்த பத்மினி. சிவாஜி மீது, மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். அமெரிக்காவில் வசித்த அவர், சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, "சிவாஜி பெயரில் அளிக்கப்படும் விருதை, நேரில் வந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டேன்.
"நிச்சயமாக வருவேன். சிவாஜி பெயரில் இருக்கற விருது, எனக்கு கிடைப்பதென்றால், பெருமை தானே...' என்றார் பத்மினி. ஆனால், விதி, சதி செய்து விட்டது. நிகழ்ச்சி நடக்கும் ஒரு சில நாட்களுக்கு முன், அவருக்கு, திடீரென்று, உடல்நலம் மோசமாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஸ்ட்ரெச்சரில், அவரை அழைத்துச் செல்லும் போது, உடன் இருந்த நடிகை ஷோபனாவிடம், "என்னை சீக்கிரம் குணப்படுத்தி அனுப்ப சொல்லு. மகேந்திரன் என்னை கூப்பிட்டிருக்கான். சிவாஜி பேராலே விருது தந்து கவுரவிக்குறாங்க. கண்டிப்பாக நான் போகணும்...' என்று, பத்மினி கூறியுள்ளார். ஆனால், சிகிச்சை பயனளிக்காமல், அமரராகி விட்டார்.

பொதுவாக, திரைப் படங்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, பத்மினியின் மகன் பிரேம் வருவதில்லை. ஆனால், தாயார் இறந்த சில தினங்களில், எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து, "என் தாயார், இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று, ஆவலாக இருந்தார். இன்று, அவர் நம்முடன் இல்லை. அவர் சார்பில், நான் இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன்...' என்று குறிப்பிட்டார். உடல் நலம் மோசமாக இருந்த போதும், பத்மினி, நடிகர் திலகத்தின் மீது, வைத்திருந்த மரியாதை, பாசம், என்னை நெகிழ வைத்தது. "தன் உடல் நிலையை பற்றி கூட நினைக்காமல், உங்கள் விழாவை பற்றி, பப்பி அம்மா @பசிட்டிருந்தாங்க...' என்றார் ஷோபனா.
அன்னை இல்லத்தில், நடிகர் திலகத்தின் உடல், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது. கலை உலகமே, கண்ணீரோடு நின்றது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டுப்@பாட்டு வந்த நாகேஷை, நான் உள்ளே அழைத்துச் சென்@றன். சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர், திடீரென்று, "சார்... என்ன சார் இப்படி செய்துட்டீங்க! டேய்... (என்னைப்பார்த்து) இவர் இல்லைன்னா, தருமி இல்லடா...' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதற்கு மேல், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக வெளியே சென்றார்.

நடிகர் திலகத்துடன், பராசக்தி படத்திலிருந்து கூடவே நடித்து, நெருங்கி பழகிய, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், "ஷூட்டிங்கிற்கு, நான் லேட்டாக வரும் போதெல்லாம், "ராஜு, டயத்துக்கு வாயேன். சரியான நேரத்துக்கு வரணும்'ன்னு சொல்லுவேய்யா... இப்போ நான் டயத்துக்கு வந்திருக்கேன்யா. பாராட்ட நீ இல்லேய்யா...' என்று கதறினார்.



POST 55/1/2014, 8:55 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அவரோடு நடித்த எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அவரிடம், ஒரு ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும். காரணம், அவரோடு நடித்த, எந்த நடிகர், நடிகைகளை வேண்டு மானாலும் எடுத்துக்கொண்டால், அவர்களின் கலைப் பயணத்தில், மெகா வெற்றி பெற்ற மூன்று படங்கள் என்று எடுத்தால், அதில் சிவாஜியுடன் நடித்த ஒரு படம், கண்டிப்பாக இருக்கும். ஏன், சிலருக்கு இரண்டு படங்கள் கூட இருக்கலாம்.

தனக்கு மட்டும் பெயர் வந்தால் போதாது; கூட நடிக்கிறவங்களும் சமமாக பெயர் கிடைக்க @வண்டும், அப்போது தான் படம் நிற்கும் என்பதில், சிவாஜி எப்போதுமே தெளிவாக இருந்தார்.
கடந்த, 1960ல், சென்னை எழும்பூரில் உள்ள, டான் பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம். வீட்டுக்கு அருகே ஸ்கூல்.

என் தாயார் ஒய்.ஜி.பி., பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள். பள்ளி ஆண்டு விழாவிற்கு, சிவாஜி கணேசன் வந்திருந்தார். அவர்தான் தலைமை. மாணவர்கள், பெற்றோர் எல்லாரும் பெஞ்ச்களிலும், தரையிலும் உட்கார்ந்திருந்தனர். நான் சிவாஜி சாரை, முதல் முறையாக அன்று தான் பார்த்தேன்.

என் தாயார், சிவாஜியை வரவேற்று பேசும்போது, "கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர். எங்களுக்கு கூரை கூட இல்லை. தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள் வோம்...' என்றார்.

விழாவில், சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும், கூரை போட முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த, 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளி கட்டட நிதிக்கு, நன்கொடையாக அளிக்கிறேன். இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்...' என்று, வாழ்த்தினார். அவருடைய வாழ்த்து பலித்தது. இன்று, என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.

தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் சிவாஜி. அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை, விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அதுதான் அவருடைய உண்மையான குணம்.

சிவாஜியின் தம்பி சண்முகத்தின் மகன் முரளி, எங்கள் பள்ளியில் தான் படித்தார். என் பெற்றோருக்கு, நெருக்கமாக இருந்தாலும், சிவாஜி என்றுமே ஸ்பெஷல் சலுகைகள் கேட்டதில்லை. என் தாயார் இந்த பள்ளியை, மிகுந்த கட்டுப்பாட்டோடு, ஒழுக்கமாக நடத்துகிறார் என்பதால், சிவாஜிக்கு, என் தாயார் மீது மிகுந்த மரியாதை உண்டு. எப்போதாவது, மாணவர் சேர்க்கை பற்றி பேச வேண்டியிருந்தாலும், என்னிடமோ, அப்பாவிடமோ தான் பேசுவார். "டேய் உங்கப்பாவே, ராஷ்மியிடம் கேட்கிறதுக்கு, பயப்படுவாரு; நீ கேட்டு சொல்லு...' என்பார்.

எங்கள், "யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனத்தில், மேடையேற்றிய நாடகம், "கண்ணன் வந்தான்!' அது தான் சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, கவுரவம் படம். அந்த நாடகத்தை, சிவாஜி ஒரே ஒரு முறை மட்டும் தான் பார்த்தார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நாடகத்தில் செய்த என் தந்தையிடம், "ஒய்.ஜி.பி., நல்லா பண்ணியிருக்கே. ஆனால், இதை எங்க கொண்டு போகிறேன் பாரு...' என்றார் சிவாஜி.
"பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நான் öŒ#து, ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் ரோலுக்கு சிவகுமாரையோ, முத்துராமனையோ நடிக்க சொல்லலாம். "நீ கொஞ்சம் கம்மியாக நடி, அப்போ தான் பாரிஸ்டர் கேரக்டர் நிக்கும்'ன்னு கேட்க முடியுமா... அவங்க மனசு புண்படாது... நானே இரண்டு பாத்திரங்களிலும் நடித்தால், கண்ணன் ரோலை, அன்டர் பிளே செய்வேன். பாரிஸ்டர் கேரக்டரை, ஞாபகத்தில் வைத்து நடிப்பேன். மொத்தத்தில் ஆடியன்ஸ் மனசுல, அந்த கேரக்டரும், படமும் நிற்கணும்...' என்றார். அவரது தொழில் பக்தியை நினைத்து, வியந்து போனேன்.

* ஜெயா "டிவி'யில் ஒளிப்பரப்பாகும், "ஆல்பம்' நிகழ்ச்சியில், நடிகர் பிரபு பேட்டி அளித்தார். சிவாஜி, பிரபு மற்றும் நான் மூவரும் இருந்த படத்தை, அவருக்கு காட்டி அதுபற்றி கேட்டனர். "என் தந்தையைப் பற்றிய விவரங்கள், அவரது நடிப்பு மற்றும் நடிப்பின் நுணுக்கங்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அண்ணன், "ஒய்.ஜி.மகேந்திராவை கேளுங்கள். எங்களுக்கு (ராம்குமார், பிரபு) தெரியாததையும், அவர் சொல்வார். எங்கள் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரா...' என்று, குறிப்பிட்டார்.



POST 65/1/2014, 8:57 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
"கண்ணன் வந்தான்' நாடகத்திலும், கவுரவம் படத்திலும், மாதிரி கோர்ட் சீன் ஒன்று வரும். டிராமாவில், அந்த சீனில், நான் கிடையாது. ஆனால், படத்திற்கு அந்த காட்சி எடுக்கும் போது, "மகேந்திரனும் இந்த காட்சியில் இருக்கட்டும். அவனுக்கு டிராமா முழுவதும், மனப்பாடம். நாம ஏதாவது விட்டாலும், அவன் சொல்வான்...' என்றார் சிவாஜி.

சிவாஜி, தன் வாதத்தை முடிக்கும் போது, நீண்ட ஆங்கில வாக்கியத்தை, ஸ்டைலாக பேசி, "தட் இஸ் ஆல் யுவர் ஆனர்' என்று, முடித்தார். செட்டில் இருந்த அனைவரும், அவரது நடிப்பை, வசன உச்சரிப்பை வியந்து, மெய்மறந்து கை தட்டினர். சிவாஜி என்னை பார்த்தார். செட்டில் இருந்த நாகேஷûம், நானும் மகிழ்ச்சியை காட்ட வில்லை.

எங்கள் இருவரின் தோளிலும், கையை போட்டு, தனியாக அழைத்துச் சென்று, "நீங்க ரசிக்க மாட்டீங்களா?' என்று கேட்டார், கேலியாக. "நீ சொல்லு' என்றார் நாகேஷ். "இல்ல... நீங்க சொல்லுங்க...' என்றேன் நான். சற்று தயக்கத்துடன், நாகேஷ் சொன்னார்: "கடைசியாக நீங்க பேசின டயலாக்கிலே, ஆங்கில உச்சரிப்பு, சரியாக இல்லை யென்று, நாங்க, "பீல்' பண்றோம்...' என்றார் நாகேஷ்.

எங்களை முறைத்துப் பார்த்தார் சிவாஜி. கவுரவம் படம் தான் எனக்கு, அவரோடு முதல் படம். இதுவே, முதலும், கடைசியுமான படம் ஆகிவிடுமோ, என்ற பயம் வந்து விட்டது.
"ஏன்டா... இதை சொல்லக் கூடாதா? நான் என்ன கான்வென்ட்டிலா படிச்சேன்! இல்ல, இவங்க அம்மா (ராஷ்மி) எனக்கு பத்மா சேஷாத்ரி, பள்ளியிலே, "அட்மிஷன்' தந்தாங்களா? எனக்கு பழக்கத்துல வந்த, ஆங்கிலத்தை வைத்து பேசினேன்...' என்றார்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டை கூப்பிட்டு, "இந்த ஷாட்டை, ரீ-டேக் செய்துடுப்பா...' என்றார்.
"அண்ணே, எந்தினா... நன்னாயிட்டு இருக்கு ஷாட்டு...' என்று, மலை யாளம் கலந்த தமிழில் அவர் சொன்னார்.

"என்னுடைய மூவ் மென்ட், நான் நடந்து வந்தது, சரியாக வர வில்லை என்று நினைக் கிறேன். ஒன் மோர் டேக் ப்ளீஸ்...' மீண்டும், அந்த காட்சியை நடித்து, எங்களை நோக்கி, "சரியா' என்கிற மாதிரி பார்த்தார்.

நாங்கள் இருவரும், "தம்ஸ் அப்' பாணியில், கட்டை விரலை உயர்த்தி காண்பித் தோம். 150 படங்களில் நடித்து, மாபெரும் நடிகர் என்று பெயர் வாங்கிய பின்னரும், ஒரு காட்சிக்கு தானே, மீண்டும், ரீ-டேக் கேட்டு நடிக்கும் நடிகரை, உலக அளவில், விரல் விட்டு எண்ணி விடலாம்.



POST 75/1/2014, 8:57 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இப்போது சொல்லுங்க, நான் சிவாஜி பித்தனாக இருப்பதில் தவறு இருக்கிறதா... அகில இந்திய சிவாஜி மன்றம், கடந்த ஜூலை மாதம், பாசமலர் டிரெயிலர் வெளியீட்டு விழா அழைப்பிதழில், என் பெயரை, "சிவாஜி பித்தன்' என்று போட்டிருந்தனர். நான் சிவாஜி பித்தன் தான் என்பதை, பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.

கவுரவம் படத்தின், முதல் நாள் படப்பிடிப்பு. இந்த காட்சி, டிராமாவில் இல்லாதது. அவருக்கு எல்லாமாக இருந்த மகன் போன்ற கண்ணன், அவரை விட்டு பிரிந்து போய் விடுகிறான். இந்நிலையில், அவர், தனக்கு தானே பேசிக் கொள்ளும் காட்சியை, முதலில் எடுத்தனர். சிவாஜி வசனங்களை நன்றாக பேசி நடித்தாலும்,"ஏண்டா... ஒரு கட்டபொம்மன், வியட்நாம் வீடு என்றால், பல முறை நடித்த நாடகம். என் கேரக்டர் முழுமையாக தெரியும். எடுத்த எடுப்பிலே, எந்த சீன் வேண்டுமானாலும் நடிக்கலாம். இந்த நாடகத்தை, நான் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். படத்தின் கிளைமேக்சுக்கு முன் வருகிற, ஹெவியான சீனை, முதல் ஷாட்டாக எடுக்குறீங்களே... கேரக்டரின் மூடு, பாவத்திற்குள் நான் வர வேண்டாமா? சிவாஜி கணேசன் என்றால், என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவான்... அவன் தலையிலே, பாரத்தை போடலாம் என்று எடுக்குறீங்களா.... எடுங்க எடுங்க. இதை சவாலா எடுத்து, செய்து காண்பிக்கிறேன்...' என்றார்.

கவுரவம் பட ஷூட்டிங்கின் போது, சில நாட்கள், காலையில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பர். மதியம், ஜூனியர் அட்வகேட் கண்ணன் வரும் காட்சிகளை எடுப்பர். காலையில், மேக் - அப் போட போகும் போதே, சிவாஜி கம்பீரமாக, மிடுக்காக போவார். அப்போதிலிருந்தே, அந்த கேரக்டருக்குள் நுழைந்து விடுவார். அதே போல மதியம், மேக்-அப் போட போகும் போது அடக்கமாக, சாந்தமாக இருப்பார். இதை நாகேஷ் கவனித்து, என்னிடம் சொல்வார். நானும், அதை கவனித்து வியந்திருக்கிறேன்.

கவுரவம் படத்தில் வரும், "நீயும், நானுமா' பாடல் காட்சியில், இரு சிவாஜிகளும், அரச உடையில் வருவர். இங்கிலாந்து அரசர், ஐந்தாம் ஜார்ஜ் போன்ற தோற்றத்தில், சிவாஜி கம்பீரமாக இருப்பார். அந்த காஸ்ட்யூம் அவருக்கு மிகவும் பிடிக்கும். கவுரவம் படத்தின் விளம்பரங்களில், அந்த தோற்றம் நிறைய உபயோகிக்கப்பட்டது. "அன்னை இல்லம்' வீட்டில், மாடிப்படி ஏறுமிடத்தில், ஜார்ஜ் மன்னன் தோற்றத்திலுள்ள, அவரது, பெரிய படம் மாட்டப்பட்டிருக்கும். பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரை எடுக்கும் போது மட்டும், சிவாஜியிடம், ஒரு தனி ஸ்டைல் இருக்கும். இடது கையால் ஒரு சொடுக்கு போட்டு, கேஸ் கட்டை எடுப்பார். பல பக்க வசனங்கள் சொல்ல முடியாத அர்த்தங்களை, அந்த, ஒரு சொடுக்கு, எடுத்துக் காட்டும்.



POST 85/1/2014, 8:58 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
*சென்ற நூற்றாண்டின், மிகச் சிறந்த அறிவாளி என்று, கருதப்படும் ராஜாஜி, சினிமா பார்ப்பதில், விருப்பம் இல்லாதவர். ஆனாலும், சம்பூர்ண ராமாயணம் படத்தை, அவரை பார்க்க வைத்தனர். அப்படத்தில், ஒரு சில காட்சியில், கவுரவ நடிகராக, பரதன் வேடத்தில், சிவாஜி நடித்திருப்பார். ராமன் காட்டுக்கு சென்றதும், வெறிச்சோடியிருக்கும் அயோத்தி நகரத்தின் காட்சி, தன் தாய் கைகேயியை, கோபித்துக் கொள்ளும் காட்சி, ராமரை கூப்பிட, காட்டுக்கு செல்லும் காட்சி என, சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், படத்தில் சிவாஜியின், பரதன் பாத்திரம் தான் நிற்கும். படம் பார்த்த பின், ராஜாஜியிடம், படத்தை பற்றிய விமர்சனம் கேட்டனர்.

"பரதனுக்கு என் பாராட்டுகள்' என்று, ஒரே வரியில் கூறினார் ராஜாஜி. அவர், படத்தில், சிவாஜியை பார்க்கவில்லை. பரதனை மட்டும் தான் பார்த்திருக்கிறார்.

*சென்னை கமலா தியேட்டர் அதிபர், காலம் சென்ற, வி.என் சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பரும், ரசிகரும் ஆவார். நாங்கள் நடத்தும், சிவாஜி நினைவு நிகழ்ச்சிகளுக்கு, டிக்கெட் வாங்கி வந்து, பார்த்து, ரசிப்பார். அவர், சிவாஜியை, புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். புட்டபர்த்தி சென்ற போது, பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம், அவர்களை உட்கார வைத்து, பின், அழைத்து சென்றனர். நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக வழி வழியாக, உள்ளே செல்ல அனுமதிப்பர் என்று தான், சிதம்பரம் நினைத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.

புட்டபர்த்தி சாய்பாபாவிடம், இருவரும் சென்ற போது, பாபா தெலுங்கில், "மெயின் நுழைவு வாயிலிலிருந்து, நடக்க வைத்து விட்டேனே என்று, கோபம் தானே உனக்கு... சிவாஜியின் நடிப்பில், ரொம்ப ரசிக்கத் தக்கது, அவருடைய நடை தான் என்று, எல்லாரும் சொன்னாங்க. எனக்கு உன் நடையை பார்க்கணும்ன்னு ஆசை. அதனாலதான், உன்னை இவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்...' என்றார். சிவாஜிக்கு, தெலுங்கு நன்றாக புரியும். பாபா சொன்னதைக் கேட்டு, நெகிழ்ந்து விட்டார்.



POST 95/1/2014, 8:59 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பத்மா சேஷாத்ரி பள்ளி விழாவில் தான், முதன் முறையாக, சிவாஜியை பார்த்தேன். "இவர் தான் நடிகர் சிவாஜியா... வெள்ளை வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக் கிறாரே...' என்ற எண்ணம் தான், எனக்கு, அப்போது தோன்றியது. சிறுவன் என்பதால், எனக்கு, கத்திச் சண்டை நிறைந்த "அட்வெஞ்சர்' படமும், லாரல் ஹார்டி காமெடி படங்களும் பிடிக்கும். என் தந்தை நடத்தி வந்த, "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழுவினர், சிவாஜி படங்களைப் பற்றி, காரசாரமாக விமர்சிப்பர். வியந்து கவனிப்பேன்.

நுங்கம்பாக்கத்தில், பாலா டூரிஸ்ட் கம்பெனி பின்புறம் உள்ள, சந்திரலேகா முத்துசாமி தெருவில் தான் எங்கள் வீடு இருந்தது. கூரை வேய்ந்திருந்த மொட்டை மாடியில் தான், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆரம்பமானது. காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வகுப்பும், பின், யு.ஏ.ஏ., நாடக குழுவின், நாடக ஒத்திகை மற்றும் நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் கூட்டங்கள் என, எல்லாமே, அங்கு தான் நடக்கும்.

அங்கே, நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் அங்கத்தினர்களுக்காக, 16 எம்.எம்.மில்., படிக்காத மேதை படம் திரையிட்டனர். 16 எம்.எம்., ரீல்கள் என்பதால், ஒவ்வொரு ரீல் முடிந்த பின், கழற்றி, மறு ரீல் போட்டு, பல இன்டர்வெல்களுடன் படம் ஓடும்.

அதுதான், நான், முதன்முதலில் பார்த்த சிவாஜி படம். அப்போது, எனக்கு பத்து வயது இருக்கும். அந்த படம், என்னை முழுமையாக உலுக்கிவிட்டது. முரட்டுத் தனம், வெகுளித்தனம், யதார்த்தம் இவற்றின் கலவையாக அமைந்திருந்த ரங்கன் கதாபாத்திரம், என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது.



POST 105/1/2014, 9:00 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
என் தந்தை ஒய்.ஜி.பி.,யிடம், "ரங்கனாக வந்த அதே ஆள் தானா, இந்த சிவாஜி...' என்று கேட்டேன். அதற்கு அவர், "அதுதான்டா நடிப்பு; அவர்தான்டா சிவாஜி...' என்றார். இப்படம், தியேட்டரில், மறுபடியும் ரிலீசான போதும், வீட்டிலும் பல முறை, அந்த படத்தை பார்த்திருக்கிறேன்.

ஒரு நேர்மையான, விசுவாசமான வேலைக்காரரின் பிரதிபலிப்பே ரங்கன். அதில் ஒரு காட்சி, என்னை, வியக்க வைத்தது.

ஈ.வி.சரோஜாவை, பெண் பார்க்க வருவர். மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சிவாஜி நேராக சென்று, மாப்பிள்ளையின் புஜங்களைத் தொட்டுப் பார்த்து, "ஸ்ட்ராங்கான ஆள் தான்' என்று, செய்கையிலும், தன் கண்களாலும் உறுதிபடுத்துவார். அந்த வீட்டில், ரங்கன் எடுத்துக் கொள்ளும் உரிமையை, இந்த ஒரு ஆக்ஷனில் வெளிப்படுத்துவார்.

ரங்கன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வேலைக்காரனாகவே கடைசி வரை இருக்க கூடாது என்று, ரங்காராவ் தீர்மானித்து, "தனிக்குடித்தனம் செல்லுங்கள்...' என்று சொல்லுவார். அந்தக்காட்சியில், ரங்காராவ் - சிவாஜி இருவரின் முகபாவம், குரலை, ஏற்றி - இறக்கி பேசுவதில் காட்டும் வித்தியாசம்... எல்லா நடிகர்களுக்கும், அது, ஒரு பெரிய பாடம்.
படிக்காத மேதை படத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும், "ரீ-மேக்' செய்யலாம்; சிவாஜி செய்த ரங்கனை, "ரீ-மேக்' செய்ய முடியாது. சிவாஜியே, மறுபடியும் பிறந்து வந்து தான் செய்ய முடியும்.

சிவாஜி, ரங்காராவிற்கு மட்டுமல்ல, இயக்குனர் பீம்சிங்கிற்கும் இது நிகரற்ற படம். உள்ளத்தை நெகிழச் செய்யும், கருத்துள்ள வசனங்கள் எழுதிய, கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கும், அப்படம், ஒரு மைல் கல்.

கீழ்வானம் சிவக்கும் படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்து கொண்டிருந்தது. முக்தா சீனிவாசன் என்னிடம், "டேய்... என்னிடம், அண்ணனுடைய டேட்ஸ் இருக்கு. உன்னுடைய, "பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தை, அவரை வைத்து செய்தால், நன்றாக இருக்கும்...' என்றார்.
மேட்டரை சிவாஜியிடம் சொன்ன போது, என்னைப் பார்த்து, அவருக்கே உரித்தான நக்கலோடு, "ஆஹா... சார் கதை சொல்லப் போகிறாரா... கதை சொல்வதிலே, சார் பெரிய ஆள் ஆச்சே... சரி, நாளை காலை, 7:00 மணிக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில், என்கிட்ட கதை சொல்லு...' என்றார்.

மறு நாள் காலை, 7:00 மணிக்கு, நான் செல்லும் போதே, 9:00 மணி ஷூட்டிங்கிற்கு, "மேக் - அப்' போட்டு, தயாராக இருந்தார். கலைவாணியை வேண்டி, என் வாக்குத் திறமையை திரட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், என் நாடக கதையை கூறினேன். கதை கேட்டு முடித்ததும், என்னிடம், "நாளைக்கு இதே நேரத்திற்கு வா. அப்போது சொல்றேன்...' என்று சொல்லி, படப்பிடிப்பு வேலையை, கவனிக்க சென்று விட்டார்.



POST 115/1/2014, 9:00 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அடுத்த நாள், காலை 7:00 மணி. அதே லொகேஷன். சிவாஜி என்னைப் பார்த்து, "டேய்... நேற்று, நீ சொன்ன கதையிலே, என்னுடைய கேரக்டர், நரசிம்மாச்சாரியை பற்றி, நான் புரிந்து கொண்டதை சொல்றேன். சரியா இருக்கா பாரு...' என்று கூறி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அவர், எனக்கு கதாபாத்திரத்தை விளக்கினார். எனக்கே பிரமிப்பாக இருந்தது. நாங்கள், நாடகத்தில் காண்பித்த நரசிம்மாச்சாரியை விட, ஒரு படி மேலேயே போய் விட்டார்.

நடிப்பின் மீது, எவ்வளவு பற்றுதல் இருந்தால், ஒரே நாளில், தன் கேரக்டரை புரிந்து கொண்டிருப்பார். அது மட்டுமில்லாமல், "சரியாக இருக்கா சொல்லு' என்று, என்னிடம் கேட்கிறாரே என்று, நெகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி, கதையை, "ஓ.கே'., செய்த பின்பும், சிறு தயக்கத்துடன், நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அதைப் புரிந்து கொண்ட அவர், லேசான புன்முறுவலுடன், "கவலைப்படாதடா பரதேசி. நீ தான் வரதுக்குட்டி...' என்று சொன்னாரே பார்க்கணும். என் மனதிற்குள், மங்கள வாத்தியங்கள் முழங்கின. எங்களுடைய, யு.ஏ.ஏ.,வின், நான்கு நாடகங்கள், சிவாஜியை வைத்து, திரைப்படங்களாக தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அவை, அறிவாளி, பார் மகளே பார், கவுரவம், பரீட்சைக்கு நேரமாச்சு. நான்கிலும், என் தந்தை ஒய்.ஜி.பி., நாடகத்தில் செய்த பாத்திரங்களை. சிவாஜி, மேலும் மெருகூட்டி, திரைப்படத்தில் நடித்திருந்தார்.

* ஒரு முறை, காஞ்சி மகா பெரியவர், சென்னை தாம்பரத்திற்கு, விஜயம் செய்த போது, திருவருட்செல்வர் திரைப்பட போஸ்டர்களை பார்த்து, "என் போட்டோ போட்டு, சினிமாக்காரங்க ஏன் போஸ்டர் அடிச்சிருக்காங்க?' என்று கேட்டார். "திருவருட்செல்வர் என்ற படத்தில், சிவாஜி கணேசன், அப்பர் சுவாமி வேஷத்தில் நடிச்சிருக்காரு. அந்த போஸ்டர் தான் இது...' என்று, அவருக்கு விளக்கம் தரப்பட்டது. மகாபெரியவரை, மனதில் வைத்து தான், அப்பர் கதாபாத்திரத்தில், நடித்திருந்தார் சிவாஜி. "கண்மேலே கை வைத்து பார்ப்பது, முகத்தோற்றம் எல்லாம், தன்னை மாதிரியே செய்திருப்பதாக சொல்லி, சிவாஜியை, மடத்தில் வந்து, தன்னை பார்க்கும்படி' முக்தா ஸ்ரீனிவாசன் மூலமாக, சொல்லி அனுப்பியிருந்தார் மகாபெரியவர். முக்தாவும், சிவாஜியும் மடத்திற்கு சென்று, மகா பெரியவரை தரிசனம் செய்தனர். கொஞ்ச நேரம், அப்படியே சிவாஜியை பார்த்து விட்டு, ஆசிர்வாதம் செய்தார். "ஒரு வினாடியாவது, மகாபெரியவர் தரிசனம் கிடைக்காதா' என்று, எண்ணற்ற பக்தர்கள் ஏங்கும்போது, மகாபெரியவரே, சிவாஜியை அழைத்து, ஆசிர்வாதம் செய்துள்ளார் என்றால், அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

*சிவாஜி, கோவில்களுக்கு, யானைகளை தானமாக கொடுப்பதை, மகாபெரியவர், பாராட்டி, "யானையை தானம் செய்றது, மிகச்சிறந்த தானம்...' என்று, சொன்னார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வெள்ளையம்மா என்ற குட்டி யானையை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, புன்னை மாரியம்மன் கோவிலுக்கு, தானமாக கொடுத்திருந்தார் சிவாஜி. சில ஆண்டுகளுக்குப் பின், அந்த யானை, தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில், வெள்ளையம்மா யானை (வயது 63) மரணமடைந்த செய்தியை, பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.

*தகுதியுள்ள புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும், தான் இதுவரை பணிபுரியாத இயக்குனர்களோடு, இணைந்து படங்கள் செய்வதிலும், சிவாஜிக்கு, எப்போதுமே ஆர்வமுண்டு; விரும்புவார். முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்த, 288 படங்களில், 90 இயக்குனர்களுடன், அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது, வியப்பான செய்தி.



POST 125/1/2014, 9:01 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில், மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ஊமைக்குயில், (மலையாளம்) மற்றும் உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில், நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாலு நல்ல நண்பர். சினிமாவில் புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியவர். ஒரு சமயம், பாலுவிடம் பேசும் போது, சிவாஜி பற்றிய, பேச்சு வந்தது. அப்போது அவர், "நான் சிவாஜியின் ரசிகன், சிவாஜியின் பல படங்களை மிகவும் ரசித்திருக்கிறேன், சிவாஜியை ஒரு படத்திலா வது இயக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு' என்று கூறினார். இதைக் கேட்ட எனக்கு, இன்ப அதிர்ச்சி. "சிவாஜியை சந்திக்க, ஏற்பாடு செய் கிறேன்...' என்று கூறினேன்.

அப்போது, சிவாஜி யுடன் பல படங்களில், நடித்துக் கொண்டிருந்ததால், தினமும், அவரை சந்தித்து வந்தேன். கவுரவம் படத்தில் ஆரம்பித்து, அன்புள்ள அப்பா வரை, 35 படங்களில், சிவாஜியுடன் நடித்திருக் கிறேன். சிவாஜியிடம், பாலு மகேந்திராவை, நான் சந்தித்ததை பற்றி சொன் னேன். "அவரை வரச் சொல்லுடா. தோட்டத்தில், லஞ்ச் சாப்பிட்டபடியே, பேசலாம்...' என்றார்.

பாலு மகேந்திராவை, சிவாஜியின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். "உங்க படங்களை பார்த் தேன். பிரமாதமா செய்றீங்க...' என்று பாராட்டி, பாலு மகேந்திராவை, வரவேற்றார் சிவாஜி. பாலு, இதை எதிர்பார்க்கவில்லை.

தன் படத்தின் கதையை பற்றி பேச வந்தவரை, சிவாஜி, "முதலில் சாப்பிடலாம். பின், கதை டிஸ்கஷன்...' என்றார். சாப்பிட்ட பின், கதையை கேட்டார். காணாமல் போன, தன் மகளை, தேடிக் கொண்டு போகும் தந்தை. சந்தர்ப்பவசத்தால், விபசார விடுதியில், மகளை சந்திக்கிறார். இதற்கு பின், தந்தையின் மனப் போராட்டம் தான் இந்தக் கதை. இக்கட்டத்தை, பாலு விவரித்த போது, நாங்கள், எங்கள் எதிரில் உட்கார்ந்திருந்த சிவாஜியை, பார்க்கவில்லை. அவர் முகத்தில், பெண்ணின் அவல நிலையை நினைத்து, பரிதவிக்கும், அந்த தந்தையை தான், பார்த்தோம்.



POST 135/1/2014, 9:02 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
"மகள் ரோலுக்கு, ஸ்ரீதேவியை கேட்கலாம்' என்றார் பாலு. படத்தில் உள்ள மற்றொரு முக்கிய பாத்திரத்தை, நான் செய்ய வேண்டும் என்று, சிவாஜியே கூறினார்.
"சார்... இப்போது நீங்க இருக்கிற மாதிரியே இருந்தால் போதும். "மேக்-அப்' இல்லாமல், படத்தை எடுக்க விரும்புகிறேன்... ' என்றார் பாலு. சிறிதும் யோசிக்காமல், "அப்படியே செய்யுங்க...' என்றார் சிவாஜி. பாலு சொன்ன கதை, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.
இந்தப்படம், சிவாஜி - பாலு மகேந்திரா காம்பினேஷனில் வெளி வந்திருந்தால், சரித்திரம் படைத்திருக்கும். யார் காரணம் என்று தெரிய வில்லை. அந்த, "ப்ராஜெக்ட்' நின்று போனது.
சிவாஜி, சினிமாவில் ரொம்ப பிசியாக இருந்த போதும், அவர் வீட்டி லிருக்கும் போது, போன் மணி அடித்தால், அவரே தான் போனை எடுப்பார். அவர், "ஹலோ' என்று சொன்னதுமே, நமக்கு, "யார் பேசுவது' என்று தெரிந்து விடும். தமிழர் கள், கேட்டு கேட்டு, நன்கு பழக்கமான சிம்மக் குரலாயிற்றே. நான் போன் செய்து, அவரே எடுத்து, பதில் சொல்லிய அனுபவம், எனக்கு, நிறைய தடவை நடந் திருக்கிறது.

சென்னையில், வீடியோ கேசட் பிளேயர் வந்த சமயம். சிவாஜியின் பழைய படங்களை, வீடியோ கேசட் மூலம், பார்த்து ரசிப்பதோடு, வீடியோ கேசட்களை சேகரிப்பதிலும், எனக்கு ஈடுபாடு உண்டு.

ஒரு மாலை பொழுதில், சிவாஜியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.

"நான் தான் பேசறேன்...'
"சொல்லுங்க சார்...'
"என்ன... நீ, நிறைய வீடியோ டேப்ஸ் எல்லாம் வச்சிருக்கியாமே...'
"ஆமாம்... எங்க சிவாஜிங்கிறவர் நடித்த, படங்களுடைய, வீடியோ டேப்ஸ் வைச்சிருக்கேன்...'
"அப்படிங்களா... அந்த, உங்க சிவாஜிங்கிறவர் நடித்த, புதிய பறவை வீடியோ டேப் கொடுடா. பார்க்கணும் போல இருக்கு... 'என்றார். உடனே, ஒரு மணி நேரத்திற்குள், அவர் கேட்ட, புதிய பறவை, வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன்.
நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம், பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான, சாந்தி தியேட்டரில், அப்படம் ஒடிக் கொண்டிருந்தது. என் பாட்டி அலமேலு அம்மாள், "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம். எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி, அழைத்துச் சென்றார். என் பாட்டி, ரொம்ப ஆச்சாரமானவர். சினிமா அதிகம் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.

படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று, அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.
படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.
இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.
நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன். படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே, துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி. அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை, வெளிப்படுத்தியிப்பார்.

ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும் காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர் ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும், ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து, உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங் செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன். என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு சென்றான்.

மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம். "என்கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது. தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர், என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை, படத்தை பார்த்த பின், உணர முடிந்தது. படம் முழுவதும் வருகிற கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை, ஏற்று நடித்திருக்கிறார். மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே, அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.

* ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் திருப்பூர் குமரன், பகத்சிங்; ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி, ரத்த திலகம் படத்தில் ராணுவ வீரன், கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார் (பாடல் காட்சியில் மட்டும்) சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சி நாதன், தச்சோளி அம்பு (மலையாளப்படம்) போன்று பல படங்களில், தேச பக்தியை வெளிப்படுத்தும் பல ஓரங்க நாடகங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி. அப்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு, நம் தேச பக்தி வீரர்களை அதிகமாக அறிமுகப்படுத்தி வைத்தது, சிவாஜியாகத் தான் இருக்க முடியும்.



POST 145/1/2014, 9:03 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.,யும், கண்ணதாசனும் பெரிய ஜீனியஸ்கள். சிவாஜி படங்களுக்கு பணிபுரியும் போது, இருவரும் சேர்ந்து தங்கள் திறமைகளை கொட்டி, பாட்டு அமைத்து, இதில், சிவாஜி எப்படி நடிக்கிறார், பிரத்யேகமாக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்க, சவால் மாதிரி, சில பாட்டுக்களைக் கொடுப்பர்.

'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்...' என்ற பாடலில், ஒரே பிரேமில், சிரிப்பது, அழுவது, அழுது கொண்டே சிரிப்பது, பாடிக் கொண்டே நடந்து வருவது என, நான்கு வித உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்தக் காட்சியின் சிறப்பு குறித்து, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா, எம்.எஸ்.வி.,யை பாராட்டுவதா, டி.எம். சவுந்திரராஜனை பாராட்டுவதா, பொருள் நிறைந்த வார்த்தைகளை கொடுத்த கண்ணதாசனை பாராட்டுவதா என்று யோசிக்கும் போது, எனக்கு தோன்றுவது ஒரே பதில் தான். இந்த நால்வருக்கும், சிவாஜியின் நடிப்பின் மீது உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இக்காட்சி.
நீதி அரசர் இஸ்மாயில், கம்பராமாயணம் குறித்து, ஆற்றிய சொற்பொழிவுகள் அனைவருக்கும் தெரியும்.

பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக நடித்த போது, சிவாஜிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது, சுத்தமான தமிழில் பேச வேண்டுமா அல்லது முஸ்லிம் என்பதால், 'ஸ்லாங்' பேச வேண்டுமா என்பது. (எதற்கு என்பதை, என்னாத்துக்கு என்பது போல) இது குறித்து, நீதி அரசர் இஸ்மாயிலிடம் கேட்டார்.

அதற்கு அவர்,'முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும் போது, நல்ல தமிழிலேயே பேசலாம். 'ஸ்லாங்'க்கு மாற வேண்டாம். நீங்கள், நல்ல தமிழில் பேசுவது தான், எங்கள் சமுதாயத்திற்கு, நீங்கள் செய்கிற பெருமை...' என்று பதில் கூறியிருக்கிறார்.



POST 155/1/2014, 9:05 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சத்தியமாக சொல்கிறேன், பாவ மன்னிப்பு படத்தை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, நம் முஸ்லிம் சகோதரர்கள் ஒவ்வொருவர் மீதும், நமக்கு மதிப்பும், பாசமும் கண்டிப்பாக வரும். மூன்று பெரிய சமயங்களை சேர்ந்தவர்களிடையே, நல்ல ஒரு பிணைப்பு வரும்.

நான் படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, எனக்கு அதிகமான கடிதங்கள், இ-மெயில்கள் மின்னஞ்சல்கள் வருவது இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து தான். என் மனைவி சுதா, கீழக்கரையில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது, முஸ்லிம் அன்பர்கள், 'எங்க வீட்டு மாப்பிள்ளை வரவில்லையா?' என்று உரிமையாக கேட்டுள்ளனர். எங்கள் நாடக குழு, யு.ஏ.ஏ.,விற்கு, முதல் தலைவர், சங்கு மார்க் லுங்கி அதிபர் அப்துல் காதர் தான்.

தேசிய ஒருமைப்பாட்டின் மேல், மிகுந்த அக்கறை கொண்டவர் சிவாஜி. தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரம் என்றால், 'மாட்டேன்...' என்று சொல்ல மாட்டார். என் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சேரனின் அனுபவத்தை, இங்கே நான் குறிப்பிட வேண்டும்.

சேரனின், தேசிய கீதம் படத்தில், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பெரியவர் பாத்திரத்தில், சிவாஜியை நடிக்க வைக்க, அவர் விரும்பினார்.

கதை கேட்பதற்கு, காலை, 7:00 மணிக்கு வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் சிவாஜி. சேரன் 6:45க்கு அங்கு சென்ற போது, சிவாஜி, 6:30 மணிக்கே தயாராகி, சேரனுக்காக காத்துக் கொண்டிருந்தார். கதை கேட்கும் போதும், அவருடைய பாத்திரத்தை விவரிக்கும் போதும், முகத்திலே அதற்கு தேவையான உணர்ச்சிகளை கொண்டு வந்ததைப் பார்த்த சேரன், வியந்து போனார். சேரனும், சிவாஜியும் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியின் மகளும், அவரது கணவரும் உள்ளே வந்தனர். 'நான் கதை கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஏன் தொந்தரவு செய்றீங்க...' என்று, அவர்களை அனுப்பி விட்டார் சிவாஜி. தன் தொழில் மீது, எவ்வளவு பக்தி இருந்தால், தன் மகள், மாப்பிள்ளையிடம் இப்படி சொல்ல முடியும்!

கிளைமாக்ஸ் பற்றி, சேரன் சொல்லிக் கொண்டிருந்த போது, 'இப்படி செய்தால் எப்படி இருக்கும்...' என்று கேட்டு, சிவாஜி நடித்தே காண்பித்தாராம். படத்தின் கதையும், அவர் பாத்திரமும் மிகவும் பிடித்துப் போய், சிவாஜி, 'ஓ.கே.,' சொல்லி விட்டார். ஆனால், 'படப்பிடிப்பு எல்லாம் அவுட்டோரில் தான்...' என்று சேரன் கூறினார். உடல்நிலை காரணமாக, டாக்டர்கள் ஆலோசனைப்படி, அவரால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. சிவாஜியை இயக்கும் வாய்ப்பு, தனக்கு அமையவில்லையே என்று, இன்றும் வருந்துகிறார் சேரன்.

எத்தனையோ தேசிய தலைவர்கள், சரித்திர நாயகர்களை தன் நடிப்பின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார் சிவாஜி. பாட்டி மடியில் உட்கார்ந்து கேட்ட புராண, இதிகாச பாத்திரங்களை, என் போன்றோர், கண்கூடாக பார்த்தது, சிவாஜி மூலமாக தான்.



POST 165/1/2014, 9:05 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்திருப்பதுடன், மேடை நாடகத்தையும் மிக அருகே இருந்து ரசித்திருப்பது தான். சிவாஜி, மேடையில் பேசிய, தீக்கனல் தெறிக்கும் வசனத்தின் சூட்டை, நான் உணர்ந்திருக்கிறேன். நாடகத்தோடு அவர் நிறுத்தியிருக்கலாம். ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வீரனை பற்றி, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த எண்ணத்தோடு படத்திலும் நடித்தார். நாடகத்திலும், திரைப்படத்திலும் வரும் ஒரு அற்புதமான காட்சியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கட்டபொம்மனிடம், ஒற்றன் வந்து, கும்பினிக்காரர்கள் சொன்ன விஷயங்களை சொல்வான். இவர், ஒரே வார்த்தையில், 'அதாவது' என்று மட்டும் சொல்வார். அந்த ஒரே சொல்லை, அடுத்தடுத்து, ஏழு முறை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும், மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவார். தியேட்டரில் கை தட்டல், விண்ணை முட்டும்.

தர்ம காரியத்திற்காக நிதி திரட்ட, என் தந்தை ஓய்.ஜி.பி., ஒரு நட்சத்திர கலை விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் கடைசி நிகழ்ச்சியாக, கட்டபொம்மன் நாடகத்தின், கிளைமாக்ஸ் காட்சியை, நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார் சிவாஜி.

இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலிருந்த சிவாஜி, என் தந்தை, ஒய்.ஜி.பி.,யின், தோள் மீது கை போட்டு, ரிலாக்சாக சிகரெட் பிடித்தபடி இருந்தார். வீர பாண்டிய கட்டபொம்மன் சிகரெட் பிடித்துக் கொண்டு, காஷுவலாக இருப்பதை பார்க்க, சுவாரசியமாக இருந்தது. மணி 9:15 இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு, மேக்-அப் அறைக்கு வெளியே, சுவர் அருகே, தயாராக நின்று கொண்டார். நான்கு சேவகர்கள், அவரை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டிருந்தனர். மணி 9:30. கட்ட பொம்மனாகவே மாறிய சிவாஜி. உடல் முழுவதையும் முறுக்கி, நான்கு சேவகர்களையும் தடுமாறச் செய்து, அண்ணாமலை மன்றத்தின் மேடைக்குள், சுவற்றை காலால் உதைத்து, புயலென நுழைந்தார். அவர் மேடைக்கு வந்ததும், பயங்கர கைத்தட்டல், ஆரவாரம். கடைசி கோர்ட் சீனில், தூள் கிளப்பினார். அந்தக் காட்சி முடிந்ததும், 'ரொம்ப சிரமப்பட்டு நடிச்சிருக்கீங் களே... இவ்வளவு, 'ஸ்ட்ரெயின்' செய்து நடிக்க வேண்டுமா...' என்று, சிவாஜியிடம் கேட்டார் என் தந்தை.

'உனக்கு தெரியாதது இல்ல ஒய்.ஜி.பி., முழு நாடகத்தை, இரண்டரை மணி நேரம் போடும் போது, ஆடியன்ஸ், ஆரம்பத்திலிருந்து, நம்ம கூட இருப்பாங்க. அவங்களுக்கும் மெதுவாக, அந்த உணர்வு வந்து விடும். இங்கே அப்படி இல்லை. பாட்டு, டான்ஸ் என்று பல நிகழ்ச்சிகள் பார்க்கிறாங்க. வேற, 'மூட்ல' இருப்பாங்க. கட்டபொம்மன் துாக்கில் இடப்படும் சூழ்நிலைக்கு, அவங்களை கொண்டு வர வேண்டும். அதற்காக, அதிகமாக வீராவேசம் காட்டணும், சத்தமா வசனம் பேசணும். அப்போ தான், ஓரிரு நிமிடங்களில், இந்த காட்சியோடு ஒன்றிப் போவாங்க; அதனால் தான் இந்த, 'எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெயின்'. முப்பது நிமிடத்துக்குள் மொத்த டிராமாவின், 'எபெக்ட்'டையும் தரணும்...' என்று விளக்கினார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்தவர்களால் மட்டுமே, இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்.

* மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை, சிவாஜியின் முக சாயலில் தான் அமைக்கப்பட்டது என்பது, நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம். பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் சிவாஜியின் நெருங்கிய தோழி; உடன்பிறவா சகோதரி. சிவாஜியிடமிருந்து அவரது புகைப் படத்தை பெற்று, அதை மும்பை நகர நிர்வாகிகளிடம் தந்தார் லதா. அந்த புகைப்படத்தின் அடிப்படையில், சிவாஜியின் முகத்தையும், உருவத்தையும் கொண்டதாக, அந்த சிலை உருவாக்கப்பட்டது.



POST 175/1/2014, 9:06 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.

என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.
அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.

ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார். ஒருமுறை ஷூட்டிங்குங் காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார். சாதா ரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.

அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார்.



POST 185/1/2014, 9:07 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.
மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது.

நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம். 1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.

ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர். வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.

யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.



POST 195/1/2014, 9:08 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை. நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.

சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.

முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம். சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி. சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம். அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.
நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.

கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.



POST 205/1/2014, 9:09 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கடந்த 1977ல், தமிழகத்தில், வெள்ள நிவாரண நிதிக்காக, சினிமா கலைஞர்களின் கலை விழா, சிவாஜி தலைமையில் நடத்தப் பட்டது. அந்நிகழ்ச்சியில், அசோக சக்ரவர்த்தியாக சிவாஜி மேடையில் நடிக்கும் போது, மேடைக்குள்ளேயிருந்து விஜயகுமாரியும், மேஜரும் மற்ற கதாபாத்திரங்களுக்குரிய குரலைக் கொடுப்பர். சிவாஜி மேடையில் நடிக்கும் போது, நடித்துக் கொண்டே, மேடையின் முன்புறம் வருவார். அவர் பேசுவது, மைக்கில் பதிவாகி, கடைசி ரசிகர் வரை, தெளிவாக கேட்க வேண்டும் என்பதில், கவனமாக இருப்பார்.

நாடகத்தில், சில சமயம், மூன்று நிமிடம், 'மோனோ ஆக்டிங்' செய்கிறேன் என்றால், அது இவரிடம் பெற்ற பயிற்சி தான் காரணம்.

கலை நிகழ்ச்சிக்காக ஒரு ஊரிலிருந்து, அடுத்த நகரத்திற்கு, சிவாஜி உட்பட, அனைத்து கலைஞர்களும் ஒன்றாக பஸ்சில் பயணம் செய்வோம். அப்போது, சிவாஜி, முந்தைய நாள் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்வதோடு, தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும், நிகழ்ச்சியை எப்படி இன்னும் சுவாரசியமாக செய்யலாம் என்றும் ஆலோசனை சொல்வார். முதல் நாள் நிகழ்ச்சியில், நாகேஷ், பாரதியாராக உணர்ச்சி பொங்க, 'மோனோ ஆக்டிங்' செய்தார். அடுத்த நாள் பஸ்சில் செல்லும் போது, சிவாஜி, நாகேஷிடம் மிக நாசூக்காக, 'நீ நடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், மக்கள் உன்னிடம் எதிர்பார்ப்பது நகைச்சுவையை தான். அதனால், தயவு செய்து, ஜூனியர் பாலையாவுடன் சேர்ந்து, ஒரு காமெடி பீஸ், 'செட்-அப்' பண்ணுங்க...' என்றார்.

அதன்படியே நாகேஷும் செய்தார். சிவாஜி சொன்னது போலவே, மறுநாள் நடந்த நிகழ்ச்சியில், மக்களின் சிரிப்பொலி விண்ணைப் பிளந்தது. கடைசி நாள் நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆர்., வந்திருந்து, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். 'அண்ணன்' என்று, மிகவும் மரியாதையோடு, அவரை அழைப்பார் சிவாஜி. சிவாஜியின் சிறந்த நடிப்பையும், மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து செய்த சேவையையும், மனதார பாராட்டினார் எம்.ஜி.ஆர்., கலை நிகழ்ச்சிக்காக, நாங்கள் சென்ற, அந்த நான்கு நாட்களும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், இனி கிடைக்கப் போவதில்லை. அவை, என்றுமே மறக்க முடியாத நாட்கள். சென்னையில் இருந்து கிளம்பியதிலிருந்து, திரும்ப, சென்னை வந்து சேரும் வரை, சிவாஜி ஒரு தலைவராக, தன்னுடன் வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் வராமல், அனைவரும் தங்கள் கலைத் திறனால், மக்களை ரசிக்க வைத்து, பத்திரமாக திரும்ப வேண்டும் என்பதற்கு, எல்லா முயற்சியையும் எடுத்துக் கொண்டார்.



POST 215/1/2014, 9:10 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
'நான் சுவாசிக்கும் சிவாஜி' தொடர் கட்டுரையை, தினமலர் - வாரமலர் இதழில் படித்து ரசித்த, நடிகை லட்சுமி, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தவர், சிவாஜியுடன், தனக்கு ஏற்பட்ட, சில சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமாவதற்கு முன், யு.ஏ.ஏ.வின், 'கண்ணன் வந்தான்' நாடகத்தில், லட்சுமி நடித்திருக்கிறார். அப்போது, நாங்கள், நேரம் கிடைக்கும் போது, சிவாஜியைப் பற்றித் தான் பேசுவோம். பிற்காலத்தில், நாங்கள் இருவரும், அவரோடு சேர்ந்து இவ்வளவு படங்கள் நடிப்போம் என்று அப்போது நினைத்துக் கூட பார்த்ததில்லை. சிவாஜிக்கு மகளாக, சகோதரியாக, காதலியாக, மனைவியாக பல பாத்திரங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி.
தங்கைக்காக படத்தில், லட்சுமிக்கு இரட்டை வேடம். ஒரு நாள், படப்பிடிப்பில், சிவாஜி, 'என்னம்மா நீ, டாம் பாய் மாதிரி நடக்குற... இன்னும் நளினம் வேண்டும்...' என்றார். 'நீங்க நடந்து காட்டுங்கள்; நான், 'பாலோ' பண்றேன்...' என்றார் லட்சுமி. மேக்-அப் மேனிடமிருந்து, டவலை வாங்கி, அதை, மேலாக்கு மாதிரி போட்டு, பதினாறு வயது பெண், காதலி மற்றும் குடும்பப் பெண் போன்ற, மூன்று நிலையில் இருக்கும் பெண்கள் எப்படி நடப்பர் என்று நடந்து காண்பித்தார். பெண்களுக்கு கூட அவ்வளவு நளினம் வராது. அவ்வளவு அழகாக நடந்து காண்பித்தார்.

'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அன்றிலிருந்து, என் நடையை, முழுவதுமாக மாற்றிக் கொண்டேன்...' என்று, பெருமையாக கூறினார் லட்சுமி....
ஏ.எஸ்., பிரகாசம் இயக்கத்தில் வந்த, சாதனை படத்தில், சிவாஜி, திரைப்பட இயக்குனர் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பில், மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது...

ஊட்டியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, எனக்கு இரண்டாவது குழந்தை, பிறந்திருக்கிறது என்ற, செய்தி வந்தது. இந்தச் செய்தியை, சிவாஜியுடன் பகிர்ந்து கொண்டேன். என்னை வாழ்த்தியவர், கூடவே, 'மடையா, இன்னும், இங்கே என்ன செய்துக்கிட்டு இருக்கே... இப்போ, நீ, சுதா பக்கத்தில இருக்கணும்; உடனே, சென்னைக்கு புறப்படு. உன்னுடைய காட்சிகளை அப்புறம் எடுத்துக்கலாம்...' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிரகாசத்திடம் சொல்லி, விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தார். சிவாஜி எப்போதுமே, குடும்ப பாசத்திற்கு, முன்னுரிமை கொடுப்பார்.

சாதனை படத்தில், எனக்கு,உதவி இயக்குனர் கதாப்பாத்திரம். இப்படத்தில், அனார்கலியாக நடித்த புவனா என்ற நடிகைக்கு, வெட்கப்பட்டு நடப்பது எப்படி என்று, சிவாஜி சொல்லிக் கொடுத்தார். படப்பிடிப்பிலிருந்த அனைவரும், இதைப் பார்த்து, கை தட்டி ரசித்தனர். திரை அரங்குகளில், அந்த காட்சிக்கு, கை தட்டல், விசில் என்று துாள் கிளம்பும்.
தமிழ்த் திரை உலகின், முதல் சினிமாஸ்கோப் படம், ராஜ ராஜ சோழன். அதில், ராஜராஜ சோழனின் மகள் குந்தவியாக லட்சுமி நடித்திருப்பார். சரித்திர கதை என்பதால், நிறைய காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் எல்லாம் அணிய வேண்டும்.

ராஜா, ராணி கதைகளுக்கு, கம்பீரம் தருவதே இந்த உடை அலங்காரங்கள் தான். அந்த, கெட்- அப்பில் இருக்கும் போது தான், அந்த கம்பீர உணர்வு கிடைக்கும். படப்பிடிப்பின் இடைவேளையின் போது, சாதாரண நாற்காலியில் உட்கார்ந்தால், உடைகள் கசங்கி விடும். எனவே, ஸ்டூல் போட்டு, அதன் மேல், பக்குவமாக உட்கார வேண்டும்.

'மதியம் சாப்பிடும் போது, ஒட்டியாணத்தை மட்டும் கழற்றி விட்டு சாப்பிடு. ராணி உடைகளை களைந்து விடாதே... ஆடையை மாற்றும் போது, குந்தவியாக நடிக்கும், 'கான்ஸென்ட்ரேஷன்' போய் விடும்...' என்று கூறிய சிவாஜி, 'நாம், சில நாட்களுக்குத் தான், ராஜ ராஜ சோழன் மற்றும் குந்தவியாக நடிக்கிறோம். இந்த உடையையே வாழ்க்கை முழுவதும் அணிந்திருந்த, ஒரிஜினல் ராஜராஜ சோழன், குந்தவி போன்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர்... இம்மாதிரி பாத்திரங்களில் நடிக்கும் போது, கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது...' என்றும், லட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளார் சிவாஜி.

சிவாஜி, காலையில் மேக்-அப் போட்டு, அரசர் உடைகளை அணிந்தால், அன்றைய, படப்பிடிப்பு முடியும் வரை, அந்த உடைகளை கழற்ற மாட்டார்.

நடிப்பு பற்றிய புத்தகங்களில், பாத்திரங்களோடு ஒன்றிப் போவதைப் பற்றி, பல நுணுக்கங்களை குறிப்பிட்டிருப்பர். இவர் அவற்றையெல்லாம் எங்கே படித்தார்... எனக்கு வியப்பாக இருக்கிறது.



POST 225/1/2014, 9:11 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமிழ் திரைப்படத்துறையில், 'மேக் - அப்' கலைக்கு முன்னோடியாக கருதப்படுபவர் ஹரிபாபு. பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாம், அவர் வீட்டிற்கு சென்று, அவரிடம், 'மேக்-அப்' போட்டு, பின், படப்பிடிப்பிற்கு செல்வர். இவர், சிவாஜியின் குடும்ப நண்பர். லட்சுமியும், சிவாஜியும் நடித்த மற்றொரு படம், ஆனந்த கண்ணீர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹரிபாபுவின் மகன், நன்னு இறந்து விட்டதாக, செய்தி வந்தது. நன்னு, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம். பல வெற்றிப்படங்களுக்கு மூலக்கதை அளித்தவர். 'என்னம்மா, எனக்கு நெருக்கமானவங்க ஒவ்வொருத்தரா போயிகிட்டு இருக்காங்க...' என்று லட்சுமியிடம் வருத்தப்பட்டவர், 'சிவாஜி கணேசனுக்கு தான் நண்பன் போயிட்டான்னு துக்கம். இந்தப்படத்தில் இருக்கிற பிராமணனுக்கு இல்லை. (இப்படத்தில் அவருக்கு அந்தணர் வேடம்) டயலாக் கொணடு வாப்பா. அடுத்த ஷாட் எடுக்கலாம்...' என்று கூறி, ஷாட்டுக்கு தயாராகி விட்டார். சொந்த துக்கத்தினால் கூட, படப்பிடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்தார் சிவாஜி.

பெண் வேஷம் பற்றிய விஷயத்தில், மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. போஸ்ட் மார்ட்டம் என்ற சூப்பர் ஹிட் மலையாளப் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்திருந்த. தயாரிப்பாளர் பிலிம்கோ காதர் சாதிக், சிவாஜியுடன் மேனா தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் ஏ.ஜெகன்னாதனும் உடன் இருந்தார்.

அப்போது, சிவாஜி, எனக்கு போன் செய்து, 'மேனோ தியேட்டருக்கு வா. ஒரு படம் பார்க்கணும். என் உதவியாளராக உனக்கு கான்ஸ்டபிள் ரோல்...' என்றார். அவருடன் உட்கார்ந்து, மலையாளப் படத்தை பார்த்தேன். சிவாஜி, பாதிரியராகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, பெரிய ஹிட்டான, வெள்ளை ரோஜா படம் தான் அது. படத்தை பார்த்துக் கொண்டடிருந்த போது, 'அந்த கான்ஸ்டபிள் ரோலை நல்லா கவனி. எங்கே எல்லாம், 'இம்ப்ரூவ்' செய்யலாம் என்று பார்த்துக்கோ. குறிப்பாக பெண் வேடம் போடும் சீனை உன்னிப்பாக கவனி...' என்றார் சிவாஜி.



POST 235/1/2014, 9:12 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
'நாகூர் பக்கத்தில நம்பளோட பேட்டை...' என்ற பாடல் காட்சி. சிவாஜியும், நானும், மாறு வேடத்தில் துப்பறியும் கட்டம். ஹார்மோனியம் வாசிக்கும், கவாலி பாடகராக சிவாஜியும், நடனமாடும் பெண் வேடத்தில் நான். ராஜேந்திரன் எனக்கு, 'மேக்- அப்' போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம், சிவாஜி, 'நீ கொஞ்சம் தள்ளிக்கோ. நானே இவனுக்கு, 'மேக் - அப்' போடுறேன்...' என்றார். 'இல்லை சார், பரவாயில்லை....' என்று, நான் சொன்னதை சட்டை செய்யாமல், 'மாறுவேடம் போடும் போது, பக்காவாக, 'மேக்-அப்' போட்டுக்கணும். நீ சோம்பல்பட்டு, அரை குறை, 'மேக்-அப்' போடு போதும்ன்னு வந்துவிடுவே. அதனால, நானே, 'மேக்-அப்' போட்டு விடுறேன்...' என்றார்.

நிறைய பசை ஒட்டி, தலைக்கு, 'விக்' வைப்பதிலிருந்து நகைகள், காஸ்ட்யூம்கள், அணிவதையெல்லாம் சரி பார்த்தார். அவருக்கு திருப்தியாகும் வரை, 'மேக்-அப்' போட்ட பின்தான், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தோம். கிட்டத்தட்ட, 300 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். வெள்ளை ரோஜா படத்தில், கான்ஸ்டபிள் பெருமாள் நாயுடுவாக, பெண் வேடம் போட்டு, நடனம் ஆடும் காட்சி தான், அதிகம் பேசப்பட்டது.

இன்றும் பல, 'டிவி' சேனல்களிலே, அந்த பாடல் காட்சி ஒளிபரப்பாகும் போது, பலர் என்னை அழைத்து பாராட்டுவர். அந்த பாராட்டுகள் சிவாஜியையே சேரும்.
லட்சுமியிடம் இது பற்றி நான் பேசிய போது, 'கம்ப்யூட்டரிலே நமக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால், 'கூகுளை' தட்டுகிறோம். நடிப்புக் கலையை பொறுத்தவரை, நமக்கு உள்ள ஒரே, 'கூகுள்' தளம், சிவாஜி தான்...' என்றார்.

பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி. தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

எங்கள் குழுவின் கதாசிரியரும், குடும்ப நண்பருமான, பி.வி.ஒய். ராமன் அன்று பிரபலமாக இருந்த, 'தி மெயில்' பத்திரிகைக்காக, சிவாஜியை பேட்டி காணச் சென்றிருந்தார்.
'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர்.

அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி.



POST 245/1/2014, 9:12 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம். இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார்.

இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார். 'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'புண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?

ஏ.ஆர்.எஸ்., நாடக ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான பெயர். எங்கள், யு.ஏ.ஏ.,குழுவில் நடிகராக அறிமுகமாகி, பல வெற்றி நாடகங்களில், முக்கிய பாத்திரங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தவர். 1967 முதல் 1975 வரை, எங்கள் யு.ஏ.ஏ., நாடகங்களை திறம்பட டைரக்ட் செய்தவர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எப்போதும், ஸ்டைலாக ஆடை அணிவார்.

என்னைப் போல், அவரும் சிவாஜி ரசிகர்; வெறியர். சிவாஜியின் நடிப்பின் நுணுக்கங்களைப் பற்றி நிறைய பேசுவார். சிவாஜியின், முதல் படமான 'பராசக்தி படத்தை, ஏ.ஆர்.எஸ்., முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று, பார்த்து ரசித்திருக்கிறார். நானும், அவரும் பேசும் போது, 'பராசக்தி படம் பார்த்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை சொல்லுங்க, ப்ளீஸ்...' என்று, கேட்பேன். அவர் சொன்னதை, அவர் வார்த்தையில், இங்கே அப்படியே தருகிறேன்.

ஏ.ஆர்.எஸ்., 'பராசக்தி படம் பார்த்த அனுபவம் குறித்து கூறியது: கடந்த, 1952ல், தீபாவளியை என்னால் மறக்க முடியாத நாள். காரணம், அன்று தான், 'பராசக்தி படம் ரிலீஸ் ஆனது. பாரகன் டாக்கீசில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ரசிகர் கூட்டத்தில், நானும் ஒருவன். அந்த நடிகனுக்கு முதல் படமா அது; நம்பவே முடியவில்லை. ரசித்தோம், மகிழ்ந்தோம், பிரமித்தோம்! தமிழ் சினிமாவில், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று, ஒரு பாடமே நடத்தியுள்ளார் பராசக்தி கணேசன்.

தூங்கிக் கொண்டிருக்கும் சிவாஜியை, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுப்புவது தான், அவருக்கு படத்தில் முதல் ஷாட். அப்போது, புரியவில்லை, எழுந்தவர் ஒரு சாதாரண மனிதனல்ல; தன்னுடைய மாபெரும் நடிப்புத் திறமையால், தமிழ்ப்பட சாம்ராஜ்யத்தையே தன் வசமாக்கிக் கொள்ளப் போகிற சக்கரவர்த்தி என்று.

எனக்கு, முன் வரிசையில், பிரபல வீணை விற்பன்னர், நடிகர் மற்றும் டைரக்டர் எஸ்.பாலசந்தர் உட்கார்ந்திருந்திருந்தார். புதுமுகம் கணேசனின் நடிப்பை மிகவும் ரசித்த அவர், 'இந்தப் பையனிடம் (அப்போது, சிவாஜிக்கு 23 வயது இருக்கும்) பிரமாதமான காமெடி சென்ஸ், டைமிங் இருக்கு...' என்றார். சிவாஜியின் வசனத்திலும், குணசித்திர நடிப்பிலும், மனதை பறி கொடுத்திருந்த எனக்கு, அப்போது, அவர் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில், சிவாஜியின் அனாயசமான ஹாஸ்ய நடிப்பை, கலாட்டா கல்யாணம், சபாஷ் மீனா மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்களில் பார்த்து, பிரமித்த போது, எஸ். பாலசந்தரின் கண்ணோட்டம் புரிந்தது.

முதல் காதல், முதல் சம்பளம், முதல் பாராட்டு போன்றவைகளுக்கு நிகரானது, நான், முதன் முதலில் அனுபவித்து பார்த்த சிவாஜியின் நடிப்பு.
- இப்படி சிலாகித்து கூறினார் ஏ.ஆர்.எஸ்.,



POST 255/1/2014, 9:14 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
எங்களது, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தின், நூறாவது நாள் விழாவிற்கு, சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில், சேஷப்பா என்கிற சவடால் பேர்வழியாக, ஏ.ஆர்.எஸ்., நடித்திருப்பார். அதில் வரும் நகைச்சுவை, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம், 'டேய், அந்த ரிகார்டு ஜோக்கை, ஒரு தரம் சொல்லேன்...' என்று கேட்பார்.

அந்த, தமாசு இது தான்:

ஒரு பாகவதர், ஏ.ஆர்.எஸ்.,சிடம் (சேஷப்பா), கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
'இல்ல. நாங்க ரிகார்டு வைக்கப் போறோம்...'
'ரிகார்டு வைக்கிற இடத்தில், என்னை வைக்க கூடாதா?' என்று, பாகவதர் கேட்பார்.
'சீ...சீ அந்த இடத்தில உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்...'
சிவாஜிக்கு, ஒரு தனிச் சிறப்பு உண்டு. 'மாஸ்' என அழைக்கப்படும், எளிய ரசிகர்களும் சரி, 'கிளாஸ்' என்று கூறப்படும், மேல்தட்டு ரசிகர்களும் சரி, இந்த இரு வகையினரையும், அவரால், முழுமையாக கவர முடியும்.

சிவாஜி காலமான பின், 'பாரத் கலாச்சார்' அமைப்பு வெளியிட்ட, 2001ம் ஆண்டு மலரில், நான் குறிப்பிட்டது, நினைவுக்கு வருகிறது, 'பார்வதி தேவி, சிவாஜியை, கைலாயத்தில் பார்த்து, சிவபெருமானே வந்து விட்டார் என்று நினைப்பதாகவும், அந்த காட்சியை பரமசிவனே ரசிப்பது போலவும்' குறிப்பிட்டிருந்தேன்.

உண்மை தான். தேச பக்தர்களை, பாரதம் போற்றும் தலைவர்களை, எந்த அளவு அவர் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறாரோ, அந்த அளவு, புராண பாத்திரங்களில் சிவனாக, பெருமாளாக, நாரதராக இன்னும் எத்தனையோ சிவனடியராக, பெருமாள் பக்தராக நடித்து, நம்மை அசத்தி இருக்கிறார்.

இதே போல், சமுதாயத் தில் உயர் மட்டத்தில் இருக் கும் பல பாத்திரங்களை அவர் செய்திருப்பதால், உயர் மட்டத்தில் இருப் போருக்கும் அவரை பிடிக்கும். மும்பையில் நான் கண்கூடாக பார்த்த, சுவையான அனுபவத்தை, இங்கு குறிப்பிடுகிறேன்.



POST 26

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »

Go to page : 1, 2  Next



Associated with other topics

SPONSORED CONTENT