RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஜய்யுடன் ஆடிப் பாடி புறணி பேசிய தனுஷ்

From: 'விஸ்தாரம்'

POST 19/1/2014, 4:13 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: தனுஷ் இளையதபதி விஜய்யை சந்தித்து ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளார்.

தனுஷ் திடீர் என்று இளையதளபதி விஜய்யை கடந்த 4ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். தனுஷ் தான் என்ன செய்தாலும் அதை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் அவர் விஜய்யை சந்தித்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இளையதளபதி விஜய்யுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி, புறணி பேசினேன். ஹா ஹா ஹா லவ் யூ ப்ரோ என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தனுஷை விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாட்டு பாடுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்தனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விஜய் அவர்களுக்கு ஹாய் சொல்வது போன்ற புகைப்படத்தை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார்.

சிம்பு தல தல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தளபதி பக்கம் சாய்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT