RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும்

From: 'விஸ்தாரம்'

POST 19/1/2014, 4:19 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது. இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக வரும் காட்சிகள் அதிரடியாக இருக்கும். இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஷங்கரின் முதல்வனுக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளை பார்ப்போம்.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்க அர்ஜுன் ஆட்டோவில் வந்து இறங்குவார். கெஜ்ரிவாலோ மெட்ரோ ரயிலில் பதவி ஏற்கும் விழாவுக்கு சென்றார்.

ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் தனது பதவிக்காலம் குறுகிய நேரமே என்று தெரிந்தும் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராடுவார். கெஜ்ரிவாலும் தனது பதவிக் காலம் குறைவானதே என்பதை தெரிந்தும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார்.

பதவி ஏற்ற சிறிது நேரத்தில் அர்ஜுன் ஆயிரக்கணக்கான ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வார். இதே போல் கெஜ்ரிவால் பதவியேற்ற 10 நாட்களுக்குள் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு 800 பேரை டிரான்ஸ்பர் செய்தார்.

முதல்வன் படத்தில் அர்ஜுன் சேரி பகுதிகளுக்கு திடீர் என்று சென்றதுடன், ரேஷன் கடைக்கு சென்று ஊழல் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வார். டெல்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா வீடு இல்லாதவர்கள் இரவில் தங்கும் இடங்களுக்கு திடீர் என்று சென்றுள்ளார்.

முதல்வன் சூப்பர் ஹிட்டானது. கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT