RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆசாத்- கருணாநிதி சந்திப்பு.. திமுகவில் புதுக் குழப்பம்?

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 3:59 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: காங்கிரஸுடனான கூட்டணி கிடையாது என்று அறிவித்த பின்னரும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இடையேயான சந்திப்பு திமுகவில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசாத்- கருணாநிதி சந்திப்பு.. திமுகவில் புதுக் குழப்பம்? 11-1389431214-karunanidhi-ghulam-nabi-600-jpg

ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்து வெளியேறியது திமுக. அது முதலே திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்பது திமுக பொருளாளரின் கருத்து. இதனையே அவர் செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசிவருகிறார்.

இந்த நிலையில் டிசம்பர் 15-ந் தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஸ்டாலினின் ஆதரவாளர்கள், காங்கிரஸுடன் கூட்டணியே வேண்டாம் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பகிரங்கமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் திமுகவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலும் பட்டாசு வெடித்தனர். இதனால் இரு கட்சிகளிடையே இனி கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமானது. இதனால் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை திமுக நடத்தி வந்தது.

இந்நிலையில் தேமுதிக- திமுக கூட்டணிக்கு மு.க. அழகிரி எதிர்ப்பு தெரிவித்து கலகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு கருணாநிதியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுக இப்படி உட்கட்சி குழப்பத்தில் சிக்கிய நிலையில்தான் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் திடீரென கருணாநிதியை சந்தித்துப் பேசினார். ஆசாத்- கருணாநிதி சந்திப்பைத் தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ஆசாத்தின் கருணாநிதியுடனான சந்திப்பால் திமுகவில் புதிய குழப்பம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என்று திமுக அறிவித்த பின்னரும்கூட எப்படியாவது திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாக வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி முயற்சித்தாக கூறப்படுகிறது. இந்த முயற்சிக்கு தொடக்கம் முதலே ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்டாலினின் கடும் எதிர்ப்பையும் மீறியே ஆசாத் -கருணாநிதி சந்திப்பை நிகழ்த்திக் காட்டினாராம் கனிமொழி. ஏற்கெனவே மு.க. அழகிரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கருணாநிதி மேல் கோபத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின். இந்த நிலையில் கனிமொழியும் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆசாத்- கருணாநிதி சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததால் கொந்தளித்துப் போனராம் ஸ்டாலின்.

தமது கொந்தளிப்பை வெளிப்படுத்தவே ஆசாத்- கருணாநிதி சந்திப்பின் போது சிஐடி காலனி வீட்டுக்குப் போகவும் ஸ்டாலின் மருத்துவிட்டாராம். "ஊர் ஊராக போய் கட்சியை நான் வளர்த்தால் இப்படி ஆளாளுக்கு கட்சி கட்டுப்பாட்டை மீறினால் என்னைவிட்டு விடுங்கள்" என்ற அளவுக்கு கருணாநிதியிடன் ஸ்டாலின் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் அண்ணா அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த இந்நிகழ்வுகளால் திமுக புதிய குழப்பத்தில் சிக்கியிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT