RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

From: 'விஸ்தாரம்'

POST 12/1/2014, 12:35 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள்.

கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.

இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.

பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம்.

அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.

இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.

98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.

இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது.

மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.

நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர்.

அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.

‘வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர்.

ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது.

ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும்.

டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா?

20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான்.

அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன.

இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT