RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்

From: 'விஸ்தாரம்'

POST 112/1/2014, 7:49 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம். இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழியாக கருதப்படுகிறது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள் 03-1388749048-kanipakamvinayakatemple

அதேபோல எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாகவோ என்னவோ மூலைக்கு மூலை இன்று பிள்ளையார் கோயில்களாக காட்சியளிக்கிறது.

ஆனால் எவ்வளவு பிள்ளையார் கோயில்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் பக்தர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில்களை பற்றி பார்ப்போம்.

மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில் புனேவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், இக்கோயிலின் விநாயகர் சிலை ரூபாய் 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.

கற்பக விநாயகர் கோயில் அல்லது பிள்ளையார்பட்டி கோயில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குடைவு கோயிலில் கண்டறியப்பட்ட ஆகம குறிப்புகளிலிருந்து இது கி.பி 1091-மற்றும் 1238-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் விநாயகர் சிலை ஒற்றைப் பாறாங்கல்லை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். இது 18 அடி உயரத்துடனும், 16 அடி அகலத்துடனும் வெகு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாகவே தொட்ட (மிகப்பெரிய) என்று கன்னடத்தில் பொருள்படும்படி இந்தக் கோயில் தொட்ட கணபதி கோயில் என்று அழைக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளைடைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக விநாயகர் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது. இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திருச்சியில் உள்ள மலைகோட்டை 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலைகோட்டையின் உச்சியில் அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலான உச்சிப்பிள்ளையார் கோயில் பல்லவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்பு 7-ஆம் நோற்றாண்டில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. தரைமட்டத்திலிருந்து 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலை அடைய 437 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அமைத்துள்ளது. இந்தக் கோயில் 11-அம நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.

அஷ்டவிநாயக் என்பது மகாராஷ்டிர மாநிலம் புனேவை சுற்றி அமைந்துள்ள எட்டு (அஷ்ட) விநாயகர் கோயில்களை குறிக்கிறது. இந்த எட்டு கோயில்களின் பெயர்களும் அவை அமைந்திருக்கும் இடங்களும் பின்வருமாறு : 1) மயூரேஷ்வர் - மோர்காவ்ன், 2) சித்திவிநாயக் - சித்ததேக், 3) பல்லாலேஷ்வர் - பாலி, 4) கிரிஜாத்மக் - லென்யாத்ரி, 5) சிந்தாமணி - தேவூர், 6) விக்னேஷ்வர் - ஒஸார், 7) மஹாகணபதி - ரஞ்சன்காவ்ன் மற்றும் Cool வரத்விநாயக் - மஹாத். பல சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் இந்த எட்டு விநாயகக் கோயில்களுக்குமான ஒருங்கிணைந்த சுற்றுலாவை மூன்று நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றன.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இடகுஞ்சி நகரத்தில் ஸ்ரீ விநாயக தேவரு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT