RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

முரசு சின்னத்திற்கு முக்கியத்துவம் வரும்! -விஜயகாந்த்

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:01 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: தமிழகத்தில், முரசு சின்னத்திற்கு முக்கியத்துவம் வரும்; தே.மு.தி.க., ஆட்சியைப் பிடிக்கும் காலம், வெகு தூரத்தில் இல்லை,'' என, அந்தக் கட்சியின் தலைவர், விஜயகாந்த் தெரிவித்தார். அத்துடன், லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி, தடாலடியாக அறிவித்து விட்டால், அதிக அளவில் தொகுதிகளை பெற முடியாது என்பதால், அந்த விஷயத்தில், பேரம் படிய வேண்டும் என்பதற்காக, காத்திருக்கிறார்.

சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொதுமக்களுக்கு, பொங்கல் இலவச பொருட்களை வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:இலவசபொருட்களை கொடுக்கும் தமிழக அரசு, மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வில்லை. இந்த விழாவில், விஜயகாந்த் முன்னிலையில், குத்தாட்டம் நடந்ததாக பத்திரிகைகளில் எழுதுவர். 'வெற்றி மேல் வெற்றி தான் நம்ம கையில்' என, இங்கு பாடப்பட்ட பாடல் குறித்து எழுத மாட்டார்கள். 'எல்லா இடத்திலும், கேப்டன் கொடி பறக்கும்' என, அப்துல் கலாம் சொல்வதாக, விழாவில் பாடினர். அப்துல் கலாம் அப்படி, ஒரு போதும் சொன்னதில்லை. என்னை சந்தோஷப்படுத்த, இப்படி பாடினால், அது தவறு.கோபாலபுரம், கொடநாடு, கோயம்பேடு என்ற மூன்று சொற்களிலும், முதல் எழுத்து, 'கோ' தான். தமிழ் அகராதியில், 'கோ' என்றால் அரசன் என்று பொருள். அடுத்த முறை, இந்த மூன்று பேரில் யார் அரசைப் பிடிக்கின்றனர் என, பார்த்து விடுவோம்.

நான் என் மனதில் தோன்றுவதை மட்டுமே பேசுவேன். என்ன பேச வேண்டும் என்பதை,மனதிலேயே, 'எடிட்' செய்து கொள்வேன். மற்றவர்களை போல, பேப்பரில் எழுதி வைத்து படிக்க மாட்டேன். என்னிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்ள, நான் தயார்.விவசாயபூமியான தமிழகத்தில், விவசாயிகள் வாழ்வதற்கு வழியில்லை. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசு கண்டு கொள்ளவில்லை. அரசு சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாக இருக்கிறது.சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவித்தவற்றை செயல்படுத்தவில்லை. மானிய விலையில், ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என, முதலில் மத்திய அரசு அறிவித்தது; பின், அதை, ஒன்பதாக உயர்த்தியது. இப்போது, அதை, 12 ஆக உயர்த்தப் போகின்றனராம்.இதைப் பற்றி பேசினால், நான் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கப் போவதாக சொல்வர். பா.ஜ.,வும் ராமர் கோயில் கட்டுவோம் என, கூறி வருகிறது. அந்த கட்சியையும், நான் விமர்சனம் செய்வதால், தனித்து போட்டியிடப்போவதாகக் கூறுவர்.
முரசு ஒலிக்கும்: தே.மு.தி.க., யாருடன் கூட்டணி வைக்கும் என, அறிவிப்பதற்கு, கால அவகாசம் இருக்கிறது. இவ்விஷயத்தில் பொறுமை அவசியம். திருமாவளவன் என்னை சந்தித்து, கூட்டணி பற்றி பேசினார். தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டு வருகிறது. போருக்குச்சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும் முரசு ஒலிக்கும். ஊழல் செய்தாலும், மக்கள் பேச்சால் முரசு ஒலிக்கும். எனவே, முரசு ஒலிக்கும் காலம், வெகு தூரத்தில் இல்லை.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, அவர் எதுவும் பேசவில்லை. அதிக, 'சீட்'களை பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே, அவர் இப்படி பொறுமை காட்டி வருவதாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தி.மு.க., பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அவரது கட்சிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் இருப்பதாக கருதி நேற்று, அளவு கடந்த நம்பிக்கையோடு பேசியிருக்கலாம் என, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT