RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கனிமொழி மீது புதிய குற்றச்சாட்டு ; பண வர்த்தனை மோசடி பிரிவு பாய்கிறது; மத்திய அரசு வக்கீல் புது யோசனை

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:05 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தி.மு.க.,வுக்கு புதிதாக ஒரு நெருக்கடியை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் தொடுத்துள்ளார். அதாவது கனிமொழி மீது பண வர்த்தனையில் பெரும் மோசடி செய்ததாக ஒரு புதிய குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் என்று அமலாக்க துறைக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பதியப்படும்போது கனிமொழியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக விவரம் அறிந்த சட்டத்துறையினர் கூறுகின்றனர்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வை சேர்ந்த ராசா , எம்.பி.,கனிமொழி, கலைஞர் டி.வி., நிர்வாக இயக்குனர் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவன அதிபர்கள், என 15 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கனிமொழி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மோகன்பராசுரன், அமலாக்க துறை மற்றும் நிதி துறை, சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் , கனிமொழி பங்குதாரராக இருக்கும் கலைஞர் டி.வி.,க்கு ரூ. 200 கோடி பரிமாற்றம் நடந்தது தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை. இந்த பணம் பெறப்பட்டது தொடர்பாக அமலாக்க துறையினர் பண வர்த்தனை மோசடி தொடர்பாக வழக்கு பதியலாம். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தவும். இதன் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டு பதியலாம். இந்த விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையில் கால தாமதம் செய்யக்கூடாது. இவ்வாறு தாமதிக்கும்போது குற்றவாளிகள் இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க வழி காணுவர் என்றும் எச்சரித்துள்ளார்.

மீண்டும் கைதா? கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மீது நம்பிக்கை மோசடி ( 409 ), 120 , ஏமாற்றுதல், கூட்டுச்சதி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மட்டும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

இந்நிலையில் பணச்சலவை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்கு பதியப்படும் பட்சத்தில் மீண்டும் கனிமொழியை கைது செய்ய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வழக்கின் படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும். இது தொடர்பான சொத்துக்களை முடக்கி வைக்க முடியும்.

இது குறித்து கனிமொழியின் வக்கீல் ஜோசப் அரிஸ்டோல் கூறுகையில், இது மிக கால தாமதமானது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதால் நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.

வரும் 21 ம் தேதி ரிட் மனு விசாரணை: இதற்கிடையில் கனிமொழி தரப்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் விசாரணையை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என கோரும் ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 21 ம் தேதி விசாரணை நடக்கிறது. இந்த மனுவில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடனாக வந்த 214 கோடி? கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , இவர் குறுகிய காலம் மட்டுமே இந்நிறுவனத்தில் இருந்தார். பின்னர் விலகி விட்டார்,. கனிமொழி எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திட்டது இல்லை. கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த ரூ.214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு கோர்ட்டில் இவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT