RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மத்திய அரசை ஆதரித்தவருக்கு தெரியாதா? முதல்வர் பதில்

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:13 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை:'ஒப்பந்த அடிப்படை, மாற்றுப் பணியில் மருத்துவர் நியமனத்தில், இட ஒதுக்கீடு பொருந்தாது; ஓமந்தூரார் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு, அதிக தகுதி, அனுபவம் மிக்கவர்களை கொண்டு வரவே, அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது,' என, கருணாநிதி குற்றச்சாட்டுக்கு, ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.

மத்திய அரசை ஆதரித்தவருக்கு தெரியாதா? முதல்வர் பதில் Tamil_News_large_894413

இதுகுறித்த அவரது அறிக்கை:சமூக நீதியின் குரல் வளையை நான் நெரிப்பதாக, கருணாநிதி கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல; ஏற்க இயலாதது. கருணாநிதி அறிக்கையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமையும், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என, அரசு சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு, இடஒதுக்கீடு பொருந்தாது. அவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் தான், ஏற்கனவே, அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்டனர்.தமிழ்நாடு மாநில, சார்நிலை பணிகள் விதியின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு, இடஒதுக்கீடு உட்பட, பொது விதிகள் பொருந்தாது.

இவ்விதிகள் கீழ், 2006 - 11 வரை, தி.மு.க., அரசால், சுகாதாரத் துறையில், 540 பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.மத்திய அரசிற்கு எதிராக, 'எய்ம்ஸ்' பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மற்றும் நடைமுறையில் உள்ள, விதி, முன்மாதிரியை கருத்தில் கொண்டே, ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவர்கள் நியமனம் நடக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு தான் கொண்டு வர வேண்டும். ஒன்பதரை ஆண்டு காங்கிரஸ் கூட்டணி, அமைச்சரவையில் பங்கு வகித்த தி.மு.க., அமைச்சரவையில் இருந்து விலகியும், காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடியவர் கருணாநிதி.

சுயநலத்திற்காக காங்கிரசை அணுகிய கருணாநிதி, இடஒதுக்கீட்டிற்காக மேலிடத்தை அணுக நேரமில்லையா? மனமில்லையா என்பதை, அவர் தான் விளக்க வேண்டும்.கருணாநிதியின் அறிக்கை, 'அத்தனையும் புளுகு' என்பதை, மக்கள் எளிதில் புரிந்து கொள்வர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT