RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

அரசியல் போஸ்டர்களில் அஜித் : தேர்தல் தந்திரமா? சென்னையில் பரபரப்பு

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:32 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
முதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகர் அஜித் படங்களுடன் கூடிய போஸ்டர் கள், சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன. அதனால், லோக்சபா தேர்தலுக்கு, அஜித் ரசிகர்களை வளைத்து போட, அ.தி.மு.க.,வினர் முற்பட்டுள்ளனரா அல்லது அவர் கட்சி யில் சேரப்போகிறாரா என்ற பரபரப்பு எழுந்து உள்ளது.

அரசியல் போஸ்டர்களில் அஜித் : தேர்தல் தந்திரமா? சென்னையில் பரபரப்பு Tamil_News_large_894472

லோக்சபா தேர்தல், விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளிலும், கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் வேலைகளிலும், தமிழகஅரசியல் கட்சிகள் மட்டு மின்றி, தேசிய கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில், திராவிட கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.திமு.க.,வில், பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும், வாக்காளர்களை கவர, தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்காக, நடிகர், நடிகையரை பயன்படுத்துவது வழக்கமானது.

அந்த வகையில், டி.ராஜேந்தர், செந்தில், குண்டு கல்யாணம், ராதாரவி, எஸ்.வி.சேகர், ராமராஜன், நெப்போலியன், வாகை சந்திரசேகர், தியாகு, வடிவேலு, பாக்கியராஜ் போன்ற நடிகர்களும், குஷ்பூ, ராதிகா, மனோரமா, விந்தியா உட்பட, சில நடிகைகளும், இரு திராவிட கட்சிகளில் ஒன்றில், உறுப்பினராக இருப்பதோடு, அந்தக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தது உண்டு.

வெற்றி வாய்ப்பு :

சூப்பர் ஸ்டார் என, அழைக்கப்படும், ரஜினிகாந்த், ஒரு காலகட்டத்தில், தி.மு.க., மற்றும் மூப்பனாரின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, குரல் கொடுத்தது, அந்தக் கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை தேடித்தந்தது.

வரும் லோக்சபா தேர்தலிலும், நடிகர்கள் பலர், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என, நம்பப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான, அஜித் திரைப்படத்தையும், அதை பார்க்க வரும் ரசிகர்களையும் வரவேற்று, சென்னை நகர் முழுவதும், அ.தி.மு.க.,வினரால் ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

முதல்வர் படம் :

கடந்த, 10ம் தேதி அஜித் நடித்த, "வீரம்' திரைப்படம் வெளியானது. படம் திரைக்கு வரும் முதல் நாள் இரவு, சென்னை நகர் முழுவதும், அ.தி.மு.க., கட்சி கொடி கலரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில், இடது புறம் முதல்வர் படமும், வலது புறம் முதல்வரை பார்த்து, அ.தி.மு.க.,அமைச்சர்கள் பாணியில், தலை குனித்து இரு கரங்களையும் கூப்பி, அஜித் வணங்குவது போன்ற படங்கள் இடம் பெற்று உள்ளன.

வாழ்த்து :

முதல்வரை புகழ்ந்து வாழ்த்தும், அந்த போஸ்டரில், அஜித்தின் வீரம் படம் வெற்றியடையவும், படம் பார்க்க வரும் ரசிகர்களை வாழ்த்தியும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த போஸ்டர்கள் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் அஜித்தை இழுக்கவோ அல்லது தேர்தல் வர உள்ளதால், அவரின் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையிலோ, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கலாம் என,
நம்பப்படுகிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT