RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மக்கள் உணர்வுகளை அறியாத காங்கிரஸ் அரசு; பிரதமர் பேட்டி குறித்து சமூக வலைதளங்களில் ஆதங்கம்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:28 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
3 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 10 ஆண்டு காலத்தி்ல 3வது முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், தெரிவித்த பல கருத்துக்கள் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமரின் பேட்டி குறித்து, சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ் புக் ஆகியவற்றில், மக்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ததுள்ளனர். இந்த சமூக வலைத்தளங்களில் மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் படிக்கும்போது, மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பலையை காங்கிரஸ் இன்னும் உணரவில்லை என்பதும், மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அரசாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகி இருக்கிறது.

மேலும் சிறந்த பொருளாதார மேதை என்று கருதப்பட்ட மன்மோகன் சிங், கடந்த 10 ஆண்டு காலத்தில், அவருடைய அரசில் நிகழ்ந்த ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பதும், தேர்தலில் வெற்றி கண்டதால், மக்கள் ஊழலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற தொனியில் ஊழலை நியாயப்படுத்தும் வகையில் அவர் தெரிவித்த கருத்துக்களும், அவர் மீதிருந்த நன் மதிப்பைக் குறைத்து விட்டது.


யார் பேரழிவு சக்தி:


சமூக வலைத்தளங்களில் மக்கள் கொட்டித் தீர்த்துள்ள விமர்சனங்களில் சில உங்கள் பார்வைக்கு இங்கே தரப்ட்டுள்ளது:


"நீங்கள் ஓய்வு பெறப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு நன்றி. நீங்கள்தான நாட்டுக்கும் மக்களுக்கும் பேரழிவாக இருந்திருக்கிறீர்கள்."

"பேரழிவை விட உங்கள் 10 ஆண்டு கால ஆட்சி சிறப்பானது என்று கூறத்தக்க வகையில் நீங்கள் என் சாதித்திருக்கிறீர்கள்?"

"நரேந்திர மோடியின் சிறந்த தேர்தல் பிரசாரகராக மன்மேகன் சிங் இருப்பார் என்று அருண் ஷோரி கூறியது உண்மை என்பதை மன்மோகன் இப்போது நிரூபித்துள்ளார். "

"(2009)தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று விட்டதால், அதற்கு முன் நடந்த ( ஐமுகூ- 1)ஆட்சியில் நடந்த ஊழலை மக்கள் பொருட்படுத்தவில்லை என ஊழலை நியாயப்படுத்திப் பேசிய மன்மோகன், 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட முதல்வரை ( மோடி), 'மக்களைக் கொலை செய்தவர்' என்று குறிப்பிட்டது சரியா?"

"பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏமாற்றம் தருவதாக உள்ளது."


ராகுலுக்கு உள்ள தகுதி:


"ராகுல் காந்தியை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க ( பிரதமராக அல்ல) அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன."


"தேர்தல் ஆண்டில் மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்து தெரிவித்ததற்கு மன்மோகனுக்கு நன்றி."

"நரேந்திர மோடிக்கு, மன்மோகன் மேலும் ஒரு ஆயுதத்ததை வழங்கி உள்ளார்."

"மன்மோகன் தெரிவித்த கருத்தால், பேரழிவை ஏற்படுத்தும் பிரதமராக மோடி இருப்பாரா? எப்படி அவ்வாறு இருப்பார் என்ற ஒரு வாதத்திற்கு வழி வகுத்து விட்டார்."

"மோடி குறித்து மன்மோகன் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உண்மையில் மக்கள் கருதுவதை விட அவர் ( மோடி) சிறந்த அரசியல்வாதி."


மோடிக்கு உதவிய மன்மோகன்:


"ஊழல் நடைபெற்றதை நியாயப்படுத்தி மன்மோகன் சிங் பேச, பேச, நரேந்திர மோடி பிரதமராவது எளிதாகிறது."


"மன்மோகன் சிங் தனது 3வது முறை பிரதமர் பதவிக் காலத்தை மோடிக்கு விட்டுக் கொடுத்து விட்டார்."

"மன்மோகன் சிங் நம்மை. நண்பர்களே என்று அழைத்தார். ஆனால் நரேந்திர மோடியோ சகோதர, சகோதரிகளே என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்."

"2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு கிடைக்க இருக்கும் மகத்தான வெற்றிக்கான விருதை, மன்மோகன் சிங்கிற்கே கொடுக்க வேண்டு்ம்."

"இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாதவர்; ஒரு தனி நபரின் தயவால் பதவியில் இருப்பவர். 3 முறை மக்களால் தேர்வு செய்யப்படவரை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது."

"இவரே ( மன்மோகன்) அடுத்த முறை பிரதமராக வரத் தயாராக இல்லாத நிலையில், அடுத்தவரை ( மோடி) தேர்வு செய்யக்கூடாதென் கூறவது எப்படி முறையாகும்?"

"பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெறாத ஒரே இந்திய பிரதமர் மன்மோகன்தான்."


மோடி குறித்து பயம்:


"மோடி குறித்த காங்கிரசுக்கு எவ்வளவு பயம்? 10 ஆண்டு காலத்தில் 3வது முறையாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பிரதமர் மன்மோகன், மோடியைக் குறித்து பேசியதாலேயே இது புலனாகிறது."


"ராகுல் சிறந்த பிரதமராக இருப்பார் என்று மன்மோகன் கூறுவது, காது கேட்காத ஒருவருக்கு கற்பிக்க, பார்வையற்றற ஒருவரை, பேச முடியாதவர் அழைத்துச் செல்வதைப் போல உள்ளது."

"84ம் ஆண்டில் நடைபெற்ற சீக்கியர் கலவரம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது உங்களுக்கு வெட்கமாக இல்லை?"

"திக் விஜய் சிங் மட்டும்தான் உளறு வாயர் என்று நினைத்திருந்தேன்; இப்போது அவரை விட பெரியவர் என்பதை மன்மோகன் நிரூபித்துள்ளார்."


படித்தால் மட்டும் போதுமா:


"அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலும், ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்தாலும், ஒரு சர்தார் எப்போதும் சர்தார்தான் என்பதை மன்மோகனின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்து விட்டது."


"இந்த 5 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக நீங்கள் ( மன்மோகன்) பத்திரிகையாளரைச் சந்தித்துள்ளீர்கள். இருந்தாலும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் இருந்திருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் பேசாமலே இருந்திருக்கலாம்."

"மோடி பிரதமராக செயல்படுவது வெற்றிகரமாக இருக்குமா? அல்லது தோல்வியில் முடியுமா தெரியாது. ஆனால் அவர் ( மோடி) குறித்து காங்கிரஸ் பெரிய அளவில் பயந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை."

"மேடத்தின் ( சோனியா) மகன் என்பதைத் தவிர, ராகுலுக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது."

"அமைதியான பிரதமராக இருப்பதை விட வேறு என்ன மோசம் உள்ளது? ஒரு பிரதமர் தனது (10 ஆண்டு) பதவிக் காலத்தில் 3 மறை மட்டுமே அதுவும் ஒரு எலியைப்போல் முனகி இருக்கிறார்."

"3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் குறித்து, 2 முறை நியமிக்கப்பட்ட பிரதமர் விமர்சிக்கக்கூடாது."


நொண்டிச் சாக்கு:


"விலைவாசி உயர்வுக்கு விவசாயிகளையும், மக்களின் வருமான அதிகரிப்பையும் காரணம் காட்டுவது பிரதமரின் நொண்டிச்சாக்காகவே உள்ளது. "


"குஜராத் கோர்ட் ஒருவரை ( மோடி) குற்றமற்றவர் என்று கூறியபிறகும் அவரை குறை கூறிய பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்."

"ஒரு ஊழல் அரசை மக்கள் தேர்தலில் வெற்றி பெறச் செய்து விட்டதால், ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு விட்டதாக பிரதமர் கூறியிருக்கிறார்."

"ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதி்ல், தமது அரசு தவறி விட்டதென்பதை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT