RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நியூசி., அசத்தல் வெற்றி : வெ.இண்டீஸ் ஏமாற்றம்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 3:02 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நெல்சன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ‘டக்–வொர்த்’ முறைப்படி நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டியின் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. நான்காவது போட்டி நெல்சனில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் பேட்டிங் தேர்வு செய்தார்.

கப்டில் அதிரடி:

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் கப்டில் (81) அரை சதம் கடந்து கைகொடுத்தார். பின் வந்த ரைடர் (47) அரை சத வாய்ப்பை இழந்தார். வில்லியம்சன் (47), ராஸ் டெய்லர் (49) பலம் சேர்த்தனர். ரோஞ்சி (9) வெளியேற, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. கோரி ஆண்டர்சன் (17), நாதன் மெக்கலம் (9) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் டுவைன் பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

சொதப்பல் துவக்கம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. வால்டன், சார்லஸ் டக்–அவுட் ஆனர். எட்வர்ட்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் (43) ஆறுதல் தந்தார். தியோநரைன் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின் வந்த கேப்டன் டுவைன் பிராவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 33.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தபோது, மழை குறுக்கிட்டது. இதன் பின் மழை தொடர்ந்து வர, ‘டக்–வொர்த்’ முறைப்படி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ (43), ராம்தின் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2–1 என முன்னிலையில் உள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT