RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » சொத்துக்குவிப்பு வழக்கு: யார் இந்த இளவரசி?

சொத்துக்குவிப்பு வழக்கு: யார் இந்த இளவரசி?

From: 'விஸ்தாரம்'

POST 128/9/2014, 5:33 am

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இன்றைய தினம் நீதிபதி வாசிக்கப்போகும் தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சொந்தங்கள். போயஸ்கார்டனுக்குள் இளவரசி வந்தது ஒரு சோகமான நிகழ்வினால்தான்.

சொத்துக்குவிப்பு வழக்கின் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்​பட்டுள்ள இளவரசி 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் ஜெயராமன். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

இளவரசி, அவரது இரண்டு மகள், ஒரு மகனுக்கும் ஜெயலலிதாதான் ஆதரவாக இருந்தார்.

மகளின் திருமணம்:

மூத்தமகள் கிருஷ்ணப்ரியாவின் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. 'ஜெயராமன் இறக்கும் போது அவரது இளம் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போனார். அன்று முதல் இன்று வரை அவர்களை நான்தான் பாதுகாத்து வருகிறேன். அதில் மூத்த மகளுக்கு நடக்கும் இந்தத் திருமணத்தை இன்று ஜெயராமன் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். அந்தளவுக்கு இளவரசி மீது ஜெயலலிதா பிரியமாக இருந்தார்

கருத்து வேறுபாடு:

இளவரசியை கார்டனுக்கு அழைத்து வந்து உரிய பாதுகாப்பையும் மரியாதையையும் வழங்கியவர் சசிகலாதான் என்றாலும் காலப் போக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம்.

மருமகன் ராஜராஜன்:

போயஸ் கார்டனிலேயே வளர்ந்த இளவரசியின் இரண்டாவது மகள் சகீலாவை 2001-ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டவர் ராஜராஜன்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு:

தஞ்சை மாவட்டம், நடுக்காவேரி என்கிற ஊரைச் சேர்ந்த பழனிராஜன் என்பவரின் இரண்டாவது மகன் திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வந்த ராஜராஜன், சில ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னைக்குத் திரும்பினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓடியாடி வேலை செய்த நேரத்தில் கட்சியினருக்கு அறிமுகம்.

திருச்சி இடைத்தேர்தல்:

திருச்சி மேற்கு இடைத்தேர்தல் நடந்தபோது, தலைக்கு 15 லட்சம் வீதம் அமைச்சர்களிடம் வசூல் செய்து நிலைமையை சமாளித்து, வெற்றிக் கொடி கட்டியதால் போயஸ் கார்டனில் பவர்ஃபுல் மனிதராகிப் போனார்.

சமீபத்தில், பெங்களூரு நீதிமன்றத்திற்கு சசிகலா, இளவரசி சென்ற நேரத்தில் இவர்தான் துணைக்குச் சென்றார். தியாகராயநகர் பத்மநாபா தெருவில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்.

விரட்டப்பட்ட மன்னார்குடி குடும்பம்:

மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கட்சியில் இருந்தும் போயஸ்கார்டனில் இருந்தும் சசிகலாவும் சொந்த பந்தங்கள் அனைவருமே நீக்கப்பட்டார்கள். ஆனால் இளவரசி மட்டும் போயஸ்கார்டனிலேயே இருந்தார்.

மருமகனும், சம்பந்திக்கும் கல்தா:

அப்போது இளவரசியின் மருமகன் ராஜராஜனும் இளவரசி யின் சம்பந்தி கலியபெருமாளும் சேர்த்துத்தானே கல்தா கொடுக்கப்பட்டனர் ஆனால் இளவரசி தப்பினார்.

மன்னார்குடி குடும்பம்:

போயஸ்கார்டனில் முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன், அதன்பிறகு சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் வந்தார்கள். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனன், அவரது மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார்கள். சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன்களான மகாதேவனும் தங்கமணியும் அடுத்து வந்தார்கள்.

இளவரசியின் சக்தி:

இவர்களில் ஒவ்வொருவர்களாக பின்னர் கல்தா கொடுக்கப்பட்டனர். அப்போது சசிகலா அமைதியாகத்தான் இருந்தார். அவரால் எந்த தடை போட முடியவில்லை. காரணம், சசிகலாவை மீறி ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுப்பதற்கு சக்தி வாய்ந்த நபராக செயல்பட்டாராம் இளவரசி.

ராவணன் வருகை:

சசிகலா மற்றும் நடராஜன் குடும்பத்தினரது வருகை, விலகலுக்குப் பிறகுதான் இளவரசி தனது குடும்ப உறுப்பினர்களை மெல்ல உள்ளே வந்தாராம். இதில் முக்கியமானவர் ராவணன். இவர்

இளவரசியின் கணவர் ஜெயராமனின் சித்தப்பா மருமகன் இந்த ராவணன். சசிகலாவுக்கும் இதே உறவு முறைதான் வரும். இளவரசியும் ராவணனும் பக்கத்து பக்கத்து ஊராம்.

இளவரசியின் சம்பந்தி:

திருச்சியில் இருந்த கலியபெருமாள், இளவரசியின் சம்பந்தி. ராஜராஜன், இளவரசியின் மருமகன். இவர்களுடன் இன்னொரு கேரக்டரும் செல்வாக்கு படைத்ததாக இருக்கிறது. அவர் பெயர் அசோகன். மிகமிகச் சமீப காலத்தில் மிதமிஞ்சிய செல்வாக்குப் படைத்தவர்களாக ராவணன், அசோகன் ஆகிய இருவரும் வளர்ந்ததற்கு இளவரசியின் உதவிகள்தான் காரணம் என்கிறார்கள்.

இளவரசியின் சகோதரர்கள்:

இளவரசிக்கு வடுகநாதன், கண்ணதாசன், அண்ணாதுரை ஆகிய மூன்று சகோதரர்கள். தஞ்சை அருகில் உள்ள கோட்டூர் பஞ்சாயத்து சேர்மன் பதவியில் இருக்கிறார் இந்த அண்ணாதுரை. இப்படி தனது குடும்ப ஆட்களை அதிகார மையங்களுக்குள் கொண்டு வரும் காரியத்தை கனகச்சிதமாகச் செய்து வந்தாராம் இளவரசி.

யார் அடுத்த வாரிசு:

'அடுத்த வாரிசு' என்ற ஸ்தானத்தில் ராவணன் அல்லது ராஜராஜனைக் கொண்டு வந்து உட்கார வைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த முயற்சிக்கு சசிகலா, நடராஜன் குடும்பத்தினர் தடையாக இருப்பார்களோ என்ற சந்தேக ரேகைகள் இந்த தரப்பினருக்கும் ஓடி இருக்கிறது. எனவே உள்ளடி வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஜெயலலிதா வைத்த வெடியில் இவர்களும் சேர்த்து காலியாகினர்.

நம்பிக்கைக்கு உரியவர்:

'சசிகலா, நடராஜன், இளவரசி ஆகிய முப்படைகளுக்கு மத்தியில் நடந்த தணியாத சண்டையில் மூன்று பக்கமும் இருந்த முக்கியமான அனைவரும் வீழ்த்தப்பட்டார்கள். அதில் இளவரசி மட்டும் தப்பித்தார் அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார் இளவரசி.

சொத்துக்குவிப்பு வழக்கில்:

இப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரனுடன் தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் இளவரசி.« PREV  |  NEXT »Associated with other topics

SPONSORED CONTENT