RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

முதல்வரும் இல்லை.... அமைச்சர்களும் இல்லை....சென்னையில் கலவரம்… ஸ்தம்பித்த தமிழகம்

From: 'விஸ்தாரம்'

POST 128/9/2014, 6:06 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதனையொட்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கலவரம், கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகரம் முழுவதும் அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபடுவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

பெங்களூர் நீதிமன்றத்தில்

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி குற்றம் சாட்டப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சென்றுள்ளனர். அமைச்சர்களும், அளும் கட்சி எம்.எல்.ஏக்களும், பல்லாயிரக்கணக்கான அதிமுகவினரும் பெங்களூரில் குவிந்துள்ளனர்.

நான்கு பேரும் குற்றவாளிகள்

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி டி.குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ரூ. 66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதில் ரூ.9.95 கோடி சொத்துக்கு மட்டுமே கணக்கு காட்டப்பட்டதாகவும், மீதம் உள்ள ரூ.56.70 கோடி சொத்துக்கு கணக்கு இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமையில்லாத தமிழகம்

இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள், தலைமைச்செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பெங்களூருக்கு சென்றுள்ளதால், அதிமுகவினரை கட்டுப்படத்த யாருமில்லை. கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

சென்னையில் மாநகரப் பேருந்து போக்குவரத்து மதியம் 3 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

அதிமுகவினர் கைது

சென்னை நகரில் கலவரம், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சில இடங்களில் தடியடி நடத்தி கலைத்தனர்.

ரயில்மறியல்

நெல்லை, நாகை, விருத்தாசலம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

தீவைப்பு, தீக்குளிப்பு

சென்னை மாநகரம் முழுவதும் அதிமுகவினர் பலர் எதிர்கட்சியினரின் உருவபொம்மைகளை தீவைத்து எரித்தனர். அதிமுகவினர் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.ஆஙகாங்கே கலவரம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளளன.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT