RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

'வெண்ணிற ஆடையில்' தொடங்கிய பயணம்: ஜெயலலிதா ஒரு பார்வை...

From: 'விஸ்தாரம்'

POST 128/9/2014, 9:18 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: கோமளவள்ளி ஜெயராம் என்றால் யாருக்கும் தெரியாது அதே சமயம் ஜெ.ஜெயலலிதா என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்த ஜெயலலிதாதான் இன்றைக்கு உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார்.

ஜெயலலிதா சிறைக்குப் போனதால், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-- மைசூர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார்.

ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

ஜெயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ம் ஆண்டில் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம்.

வெண்ணிற ஆடை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்ததுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் நிறம், அழகு அவருக்கு என்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

அடிமைப் பெண், அரசகட்டளை, ரகசியபோலீஸ், பட்டிக்காடா பட்டணமா, கந்தன் கருணை, யார் நீ, என் அண்ணன், சூர்ய காந்தி ஆகிய படங்களில் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கல்.

ஜெயலலிதாவின் 100 வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.

1960, 70களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் `வேதா'. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் ஜெயலலிதா.

நடிகையாக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்து, அவரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் அதிமுகவை தொடங்கிய பின்னர் கட்சியில் இணைந்தார். ராஜ்யசபா எம்.பியானார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, பின்னர் 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வரான அவர் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களி வெற்றி வெற்றி பெற்று மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார்.

நடிகையின் மகளாக பிறந்து நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் களத்தில் எதிரிகளையே காணோம் என்று பேசினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனதால், களத்தில் ஜெயலலிதாவையே காணோம் என்கின்றனர் எதிர்கட்சியினர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT