RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

செவ்வாய் கிரகத்தை விட செம குளிரா இருக்காமே அமெரிக்கா.... !

From: 'விஸ்தாரம்'

POST 19/1/2014, 4:34 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சிகாகோ: அமெரிக்காவை கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அமெரிக்காவின் பல பகுதிகள் செவ்வாய் கிரகத்தை விட பயங்கர குளிராக இருக்கிறதாம். இதற்கெல்லாம் காரணம், ஆர்க்டிக் பிரதேசத்தில் நிலவும் மிகப் பயங்கரமான குளிர்தானாம்.

செவ்வாய் கிரகத்தை விட செம குளிரா இருக்காமே அமெரிக்கா.... ! 08-1389158162-chicago23-600-jpg

அமெரிக்காவை ஒட்டியுள்ள கனடாவிலும் குளிர் கடுமையாக வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்கா, கனடாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிரகத்தில் நிலவும் குளிரை விட அதிக குளிர் நிலை பதிவாகியுள்ளதாம்.

சிகாகோ நகரம் பயங்கர குளிரில் உறைந்து போய்க் கிடக்கிறது. இதனால் லிங்கன் பூங்கா விலங்கியல் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள துருவக் கரடியே மிரண்டு போய் நடுநடுங்க ஆரம்பித்து விட்டதாம். இதையடுத்து அதை தற்போது சூடான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

கென்டக்கியில் செம காமெடி நடந்துள்ளது. அங்குள்ள சிறையிலிருந்து தப்பிய கைதி ஒருவர், கடும் குளிரால் ஆடிப் போய் விட்டாராம். மறுபடியும் சிறைக்கே வந்த அவர் என்னை மீண்டும் சிறையிலேயே அடைத்து விடுங்கள், வெளியில் குளிர் தாங்க முடியவில்லை என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம். தப்பி வந்த இவர் வெளியில் நிலவிய கடும் குளிரில் நடுநடுங்கி அனாதரவாக இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து இரவு முழுவதும் தங்கியுள்ளார்.

கனடா முழுவதும் குடும் குளிரில் உறைந்து போய்க் கிடக்கிறது. அதேபோல ஹவாய் தவிர்த்த அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் உறை நிலை வெப்பநிலையே காணப்படுகிறது. வழக்கமாக இந்த சமயத்தில் கொஞ்சம் வெயிலைப் பார்க்கக் கூடிய புளோரிடா, கலிபோர்னியாவையும் கூட குளிர் இந்த முறை விட்டுவைக்கவில்லை.

அமெரிக்கா, கனடாவில் தற்போது நிலவி வரும் குளிரின் கொடுமையைச் சொல்வதாக இருந்தால் எந்தவிதமான தற்காப்பு ஆடையும் இல்லாமல் வெளியில் வந்தால் ஒரே நிமிடத்தில் நீங்கள் அப்படியே உறைந்து போய் விடுவீர்கள். சில மணி நேரங்களில் உயிரே போய் விடும். அப்படி வாட்டுகிறது குளிர்.

ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் அதிக அளவிலான பயங்கர குளிர் காற்றுதான் அமெரிக்காவையும், கனடாவையும் இந்த அளவுக்கு ஆட்டிப் படைப்பதாக கூறுகிறார்கள்.

பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர்க் குழாய்கள் அனைத்தும் அப்படியே உறைந்து போய்க் கிடக்கின்றன. விமானங்களை இயக்க முடியவில்லை. ரயில்கள் அப்படி அப்படியே நிற்கின்றன. சாலைகளில் ஐஸ் கட்டிகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. பிளாட்பாரங்களில் நடக்க முடியாத நிலை... எங்கெங்கும் ஐஸ் கட்டிகள்தான்.

மின்னசோட்டாவில் உள்ள எம்பராஸ் என்ற நகரம்தான் மிக மிக குளிர்ந்து போய்க் கிடக்கிறது. இங்கு - 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டிக் கொண்டுள்ளது. மான்டனோவில் - 52 வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இன்டியானா, அயோவா, மாரிலேன்ட், மிச்சிகன், மின்னசோட்டா, நெப்ரஸ்கா, வடக்கு டகோடா, ஓஹையோ, பென்சில்வேனியா, தெற்கு டகோட்டா, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, விஸ்கான்ஸின் ஆகிய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இங்கெல்லாம் - 40 முதல் -50 டிகிரி செல்சியஸ் வரை குளிர் கொளுத்துகிறது.

செவ்வாய் கிரகத்தில் கூட இப்படி ஒரு குளிர் இல்லையாம். அங்கு தினசரி வெப்பநிலையானது - 25 முதல் -31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர் தொடர்ந்து அனுப்பி வரும் வெப்ப நிலை அறிக்கை இது. செவ்வாய் கிரகமானது சூரியனிலிருந்து 7.8 கோடி மைல் தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுருங்கச் சொன்னால் இந்த கடும் குளிரால் அமெரிக்காவே ஆடிப் போய்க் கிடக்கிறது!.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT