RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

டில்லி முதல்வரின், மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி ரத்து!!

From: 'விஸ்தாரம்'

POST 112/1/2014, 8:14 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியதால், ஏற்பட்ட நெரிசலை அடுத்து, டில்லி முதல்வரின், மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நேற்று பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சரி வர செய்யாததற்காக, கூடியிருந்த மக்களிடம், முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

டில்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற, 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைந்ததும், முதல் வேலையாக, 'ஜனதா தர்பார்' என்ற பெயரில், தினமும், மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவாலும், அவர் அமைச்சரவை சகாக்களும், ஒவ்வொரு நாளும், டில்லி மாநில தலைமைச் செயலகத்தில், மக்களை சந்திப்பர் என, அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் படி, நேற்று, முதல் முறையாக, மக்களை சந்திக்க, முதல்வர் கெஜ்ரிவால் திட்டமிட்டிருந்தார்.

இதற்கான அறிவிப்பு, முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. இதனால், டில்லி, தலைமைச் செயலக பகுதியில், காலை முதலே, பரபரப்பு காணப்பட்டது. கடும் குளிர் நிலவி வந்த நிலையிலும், காலை, 7:00 மணிக்கே, 3,000த்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு, அதிகபட்சம், 2,000 பேர் தான் கலந்து கொள்வர் என போடப்பட்டிருந்தன.நேரம் ஆக ஆக, மக்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. காலை, 10:00 மணிக்கெல்லாம், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி விட்டனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த, குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால், நிலைமை மிகவும் மோசமானது.

இந்த நிகழ்ச்சியில், செய்தி சேகரிக்க, ஏராளமான, நிருபர்கள் கூடி விட்டதாலும், முதல்வரை சுற்றிலும், ஏராளமானோர் கூடி நின்றதாலும், அந்த இடமே, களேபரமாக காணப்பட்டது.
முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, பொதுமக்கள்என்ன கூறுகின்றனர் என்பதை, காது கொடுத்துக் கேட்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு, சத்தம் அதிகமாக இருந்தது.

இதனால், முதல்வர் முதற்கொண்டு, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும், 'டென்ஷன்' அடைந்தனர். நேரம் செல்லச் செல்ல, கூட்டம் இன்னும் அதிகரித்தது. ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால், பயங்கர நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இன்னும் சில நிமிடங்கள் நீடித்தால், உயிர்ப் பலி ஏற்படலாம் என, நிலைமை

சிக்கலானதால், முதல்வரிடம், அதிகாரிகள் நிலைமையை விளக்கினர்.இதையடுத்து, உடனடியாக, நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட்ட முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகம் உள்ளே வேகமாக சென்றார். சிறிது நேரத்திற்குப் பின், மாடிக்கு சென்று, 'மைக்' மூலம், கூடியிருந்த மக்களிடம், பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: ஏற்கனவே அறிவித்தபடி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஆனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சரி
வர செய்யவில்லை என்பதை, ஒப்புக்கொள்கிறேன்.

இதற்காக, உங்களிடம், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கூட்ட நெரிசல் உருவாகி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, சரி வர செய்து விட்டு, அதன் பிறகு, மீண்டும், குறை தீர்ப்பு கூட்டம், வழக்கம் போல, தொடர்ந்து நடைபெறும்.

இந்த சலசலப்புகளால், குறைதீர்ப்பு நிகழ்ச்சியை, கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை. இவ்வாறு, முதல்வர், கெஜ்ரிவால் கூறினார்.

பின், நிருபர்களிடம், முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ''திங்கள் அல்லது செவ்வாய் கிழமை, நல்லதொரு ஏற்பாட்டை செய்வோம். இன்றைய குறைதீர்ப்பு நிகழ்ச்சியில், பெரும்பாலும், சில குறைகளையே மக்கள் கூறியுள்ளனர்,'' என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT