லட்சுமிமேனன் படத்திற்கு இசை அமைக்கவிருந்த இசை அமைப்பாளர் திடீரென்று வெளியேறினார். விமல்-இனியா நடித்த வாகை சூட வா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான்.
தற்போது ஜெய்-நஸ்ரியா நாசிம் நடிக்கும் திருமணம் எனும் நிக்ஹா படத்துக்கு இசை அமைக்கிறார். இதையடுத்து விமல், லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சபை என்ற படத்துக்கும் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.
இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அப்படத்திலிருந்து திடீரென்று வெளியேறிவிட்டார் ஜிப்ரான். இதற்கு இயக்குனர் ராகவனிடம் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் பிரச்னை எதுவும் இல்லை என்ற பாணியில் தனது இணைய தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் ஜிப்ரான். அதில் அவர் கூறும்போது, வேலை மற்றும் நேரமின்மை காரணமாக மஞ்ச பை படத்தில் பணியாற்ற முடியாத நிலை உள்ளதால் மனவருத்தத்துடன் வெளியேறிவிட்டேன்.
தற்போது நான் ஒப்புக்கொண்ட மற்ற படங்களின் பணியில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.