RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த...

From: 'விஸ்தாரம்'

POST 112/1/2014, 8:40 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த... Ht2370

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சியைத் தரக்கூடிய உணவுகளை தான் தரவேண்டும். நாம் உண்ணும் உணவானது உடலுக்கு மட்டும் நன்மையை தரவில்லை மூளைக்கும் சேர்த்தே தருகிறது.. குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க அவர்களின் செயல்திறனை வளர்க்க மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை வழங்குவது சிறந்தது.

பால் மற்றும் பாலில் இருந்து செய்யப்பட்ட உணவுகளில் அதிகளவு புரோட்டின், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டச்சத்தை அளிக்கும் பாலானது நரம்புத் தசை மண்டலத்தை நன்கு இயக்கி மூளையின் செல்களையும் நன்கு செயல்பட செய்கிறது.

பெர்ரி பழ வகைகளை சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, நெல்லி மற்றும் நாவல் பழம் மூளைக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகிறது. ஏனெனில் இவ்வகை பழங்களில் உடலுக்கு தேவையான அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. இதில் உள்ள ஓமேகா3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

மூளையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் சத்துகளில் முக்கியமானது தான் கோலைன். இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால் ஞாபகசக்தியை அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. நட்ஸ், பாதாம், பிஸ்தா அக்ரூட் போன்றவற்றை தினமும் சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை வளர்க்கும்..

ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியல் வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டால் மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடலில் உள்ள எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இயங்கும்.

மீன்களில் அதிகமாக ஒமேகா3 ஃபேட்டி ஆசிட்டான டிஎச்ஏ மற்றும் ஈபிஏ அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப்பொருட்களை விட ஒமேகா 3 மீன்களில் அதிகம் உள்ளதால் வாரம் இரு முறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படும்.

மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் கீரைகள் போன்றவைகளும் வளரும் குழந்தைகளுக்கு சிறந்தது. ஆகவே தினமும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகளை கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT