RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் வங்கி கணக்கு!! ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 4:32 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மும்பை: ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது, அந்நாட்டில் சிறந்து விளங்கும் தொழில்களைச் சார்ந்தது. தொழில்கள் சிறந்து விளங்க, மக்களின் உழைப்பும், பங்களிப்பும் அவசியம். கடின உழைப்பாளிகள் உள்ள நம் நாட்டில் தொழில்கள் மேலும் சிறந்து விளங்க, மத்திய வங்கியின் மூலம் இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது இந்திய ரிசர்வ் வங்கியால் திட்டமிடப்பட்டுள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வங்கி கணக்கினை வழங்கும் முயற்சி ஆகும். வங்கி கணக்கினை துவங்குவதன் மூலம் மக்கள் பெறும் நன்மைகளை இங்கு தொகுத்துள்ளோம்.

இந்திய அரசு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் பதினெட்டு வயதினை கடந்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உலகளாவிய மின்னணு வங்கி கணக்கு (universal electronic bank account)வழங்க வேண்டும் என்ற உன்னதமான இலக்கினை இந்திய வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த முயற்சி பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழும் நமது நாட்டில், சிறுதொழில் செய்யும் வணிகர்கள் மற்றும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களின் விரிவான நிதி சேவைக்காக, மத்திய அரசு வங்கியால் நியமிக்கப்பட்ட நாசிகெட் மோர் (NACHIKET MOR) குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது. இது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இந்த பரிந்துரையின்படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது ஆதார் எண்னை பெறும் அதேசமயத்தில், இந்த உலகளாவிய மின்னணு வங்கி கணக்கினை(universal electronic bank account) முழுமையான உயர்தர சேவையை வழங்கும் வங்கியின் மூலம் பெறவேண்டும்.

இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின், உலகளாவிய மின்னணு வங்கி கணக்கினை,18 வயதினை கடந்த இந்திய குடிமக்கள் தொடங்க வேண்டும் என்றும், இந்திய மக்களுக்கு ஆதார் எண்ணினை வழங்கி வரும் அமைப்பான"The unique identification of india "(UIDAI) என்ற அமைப்பின் மூலம் அறிவுறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 1, 2016ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் அனைவரும் உலகளாவிய மின்னணு வங்கி கணக்கிற்கான எண்னை பெற்றிருக்க வேண்டும்.

இந்த வங்கி கணக்கினை இயக்குவதற்காக, மக்கள் 15 நிமிடங்களில் நடந்து அடைந்து விட கூடிய தூரத்தில் மின்னணு பணம் செலுத்தும் மையங்களை நாடெங்கும் பரவியிருக்க செய்ய வேண்டும். எனவே அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த மின்னணு பணம் செலுத்தும் மையங்கள் ஒவ்வொன்றும் மக்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியினையும், ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் வசதியுனையும் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்காக மக்கள் நியாயமான கட்டணத்தை வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

இந்த மையங்கள் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும்,தங்களது ஏதேனும் ஒரு வைப்பு தொகை கணக்கை இயக்கும்போது, அது நுகர்வோர் விலை அட்டவணைக்கு நேர்மறையான விகிதத்தை உருவாக்கும்.

ஜனவரி 1, 2016ஆம் ஆண்டுக்குள் நாம் அடைய திட்டமிட்டிருக்கும் இந்த இலக்கின் மூலம், சிறுதொழில் செய்யும் வணிகர்கள், குறைவான வருமானம் கொண்ட மக்கள், தங்களின் தேவை அறிந்து, கடன் தொகையை மதிப்பிட்டு கடன் வழங்க இயல கூடிய வங்கிகளை சுலபமாக அணுக முடியும். இந்த அணுகுமுறையினால் அவர்கள் தங்கள் தொழில்களுக்காக கடன் கிடைக்கப் பெறுவர். இதற்காக வங்கிகள் தங்கள் கட்டணமாக மக்களால் ஏற்று கொள்ள முடிந்த மலிவான கட்டணத்தை பெற்று கொள்ளவும் அரசு வழி செய்துள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT