RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன்!

From: 'விஸ்தாரம்'

POST 128/9/2014, 5:43 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்புமகனாக தத்தெடுத்து நடத்திவைத்த பிரம்மாண்ட திருமணம்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் மிகமுக்கியமான சறுக்கலாக இருந்தது.

யார் இந்த சுதாகரன்?:

திடீரென்று எப்படி வளர்ப்புமகனானார் என்பதை பார்க்கும் முன்பாக தோழி சசிகலாவின் உறவினர்கள்... அவர்களின் மகன்களைப் பற்றி தெரிந்து கொள்கொள்வோம்.

சசிகலாவின் உறவினர்கள் திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி

டிடிவி தினகரன்:

டி.டி.வி. என அ.தி.மு.க-வினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார்.

ஜெ.ஜெ டிவி பாஸ்கரன்:

முன்பு ஜெயலலிதா தொடங்கிய, ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்தவர், பாஸ்கரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன். அரசியலில் ஆர்வம் இல்லாத காரணத்தால், ஆரம்பத்தில் இருந்தே போயஸ் கார்டன் பக்கம் நெருங்கியது இல்லை.

வளர்ப்பு மகன் சுதாகரன்:

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது.

பிரம்மாண்ட திருமணம்:

இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமாக சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்தியலட்சுமிக்கும் திருமணம் செய்துவைத்தார். அதுவே 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெயலலிதா.

சின்ன எம்.ஜி.ஆர்:

அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில்'சின்ன எம்.ஜி.ஆர்.' என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம்பரத்தோடு வலம் வந்தார்.

போதைப்பொருள் வழக்கு:

2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தியாகராயநகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது.

கொலை மிரட்டல் வழக்கு:

துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

புலித்தோல் விவகாரம்:

அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங்களில் சிக்கினர்.

சுதாகரன் பங்குதாரர்:

சிறுதாவூர் நில விவகாரத்தில் தொடர்புடையதாக பேசப்பட்ட பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்திலும் சுதாகரன் பங்குதாரர்.

சொத்துக்குவிப்பு வழக்கு: 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரில் சுதாகரனும் ஒருவர்.

பெயர் மாற்றியும் பலிக்கவில்லை:

தனது பெயரை 'சுதாகர்', 'விவேக சுதாகர்' என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார் சுதாகரன். ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்கு களைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை. இப்போதும் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தனியாகவே பெங்களூருக்கு சென்று வருகிறார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT