RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ரத்தக்கண்ணீர் பட வசனகர்த்தா தங்கராசு மரணம்: ராமதாஸ் இரங்கல்

From: 'விஸ்தாரம்'

POST 16/1/2014, 1:58 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், ரத்தக்கண்ணீர் திரைப்பட வசனகர்த்தாவான திருவாரூர் தங்கராசு மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கூறியுள்ளதாவது:

"திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், திராவிடர் கழகத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவருமான திருவாரூர் தங்கராசு உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார் என்பதை அறிந்து பேரதிர்ச்சியும், பெரும் துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டில் திராவிட கழகத்தை வளர்த்தெடுப்பதில் தந்தை பெரியாருக்கு தோள் கொடுத்தவர். பகுத்தறிவு கருத்துக்களை பரப்புவதில் தந்தை பெரியார் வேர் என்றால் திருவாரூர் தங்கராசு மரமாக விளங்கினார்.

அவர் எழுதிய ரத்தக்கண்ணீர் திரைப்பட வசனங்கள் மூட நம்பிக்கையாளர்களையும் விழித்தெழச் செய்யும் திறன் கொண்டவையாகும். அவர் எழுதிய இராமாயணம், திருஞான சம்பந்தர் ஆகிய நாடக நூல்கள் பகுத்தறிவு உருவாக்கத்தில் புரட்சிகளை படைத்தவை ஆகும்.

மக்கள் நலனிலும், மற்றவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய தங்கராசு தம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தமது படைப்புக்களுக்காகவும், தமக்காகவும் கொடுக்கப்பட்ட வெகுமதிகளைக் கூட சேவை நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வள்ளலாக திகழ்ந்தவர்.

எதற்கும் அஞ்சாத சிந்தனையாளரும், பகுத்தறிவாளருமான திருவாரூர் தங்கராசின் மறைவு பகுத்தறிவு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT