RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

சென்னையில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே மெஜாரிட்டி...

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 9:18 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தியடைந்த 25 ஆயிரத்து 344 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியான விக்ரம் கபூர் ரிப்பன் மாளிகையில் இதனை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் 2014-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1.10.2013 அன்று வெளியிடப்பட்டன. 1.1.2014 அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து துணைப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. அது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76 பேர். பெண்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 461 பேர். இதரபிரிவினர் 662 பேர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரி அதிக வாக்காளர்கள் கொண்டதாக உள்ளது. இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு கூடுதலாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 464 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது 5.4 சதவீதம் ஆகும்.

இறுதி திருத்தப்பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆகும். இதுவரை புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும்.

18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்த இறுதி திருத்தப்பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினமான வருகிற 25-ந் தேதி அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பம் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 232. பெண்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 403. இதரபிரிவினர் 142.

இறுதிப்பட்டியல் நகலை அரசியல் கட்சிகளுக்கு விக்ரம்கபூர் வழங்கினார். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா எம்.பி, கலைராஜன், வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி ஆகியோரும் தி.மு.க. சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி. சேகர், கமல கண்ணன், காங்கிரஸ் சார்பில் சைதை ரவி, தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி எம்.எல்.ஏ, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் ஒய்.என்.நாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT