RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தமிழ்நாட்டில் 4ஜி சேவை!! ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்செல்

From: 'விஸ்தாரம்'

POST 13/1/2014, 9:37 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: சீனாவின் தொலைதொடர்பு கருவிகள் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனமான இசட்.டி.இ, இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தை நிறுவ ஏர்செல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அதி விரைவு அலைவரிசையான 4ஜி-யை நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இசட்.டி.இ நிறுவனத்தின் தலைவர் சு தேஜுன் இதுகுறித்து பேசுகையில், "நாங்கள் ஒரு மிகச்சிறந்த 4ஜி கட்டுமானத்தை எர்செல்லுக்காக திட்டமிட்டு உருவாக்கி அளித்திட உறுதிபூண்டுள்ளோம். இதன் மூலம், ஏர்செல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நல்ல அனுபவத்தை அளிக்க முடியும்" என்றார்.

இது ஏர்டெல் ஒப்பந்தத்திற்கு அடுத்த படியாக இசட்.டி.இ நிறுவனம் பெற்றுள்ள இரண்டாம் ஒப்பந்தமாகும்.

"இந்த இணை முயற்சியின் மூலம், இந்தியாவில் எல்.டி.இ தொழில்நுட்பத்தை திட்டமிட்டு செயல்படுத்தவும் எங்களுடைய நீண்டகால குறிக்கோளான எல்.டி.இ தொழில்நுட்பத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளவும் இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களின் ஒரே தேர்வாக நாங்கள் வலுப்பெற்றுள்ளோம்" என தேஜுன் தெரிவித்தார்.

இதன் முதல் படியாக, நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, 65 Mbps அளவிற்கும் அதிகமாக அதாவது அதிவேக விவர பரிமாற்ற வசதிகளை அளிக்க உள்ளோம்"

முதலில், இந்த எல்டிஇ தொழில்நுட்பம் சென்னை, தமிழ்நாடு மற்றும் இதர முக்கிய வர்த்தக வட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த அறிவிப்பு வெளிவந்த வேளையில் சென்னை மற்றும் தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் அனைத்து விவர பரிமாற்ற சேவைகளும் (data services) 4ஜி எல்டிஇ தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இசட்.டி.இ நிறுவனம் எர்செல்லுடன் ஒரு நீண்டகால உறவு கொண்டுள்ளதோடு, 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை வட இந்தியாவின் மூன்று வட்டங்களில் வழங்கியதோடு, அடுத்த தலைமுறை இணைப்பு தொழில்நுட்பங்களை இந்தியா முழுவதும் வழங்க ஒரு முக்கிய வர்த்தக நிறுவனமாகவும் உள்ளது.

சென்னை மற்றும் தமிழகத்தில் முடிக்கப்பட்டுள்ள இந்த 4ஜி எல்டிஇ சேவையானது இந்த இரு நிறுவனங்களுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் வாசுதேவ் கூறுகையில், "விவர பரிமாற்றம் ஒரு முக்கிய எதிர்கால உந்துதலாக இருப்பதால், மிக நவீன 4ஜி எல்டிஇ தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு முன் எப்போதும் இருந்திராத ஒரு அனுபவத்தை அளிக்கும். இந்த விவர பரிமாற்ற வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு இணைய-தள வசதியுடைய டப்ளேட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியும், இளைய சமுதாயத்தினர் இன்டர்நெட் மற்றும் விவரத் தேவைகள் மீது கொண்டுள்ள ஆர்வமும் மற்ற சில முக்கிய காரணிகளாக உள்ளன" என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT