RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

சபரிமலையில் 14.1.14ல் மகரஜோதி தரிசனம்

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 11:00 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சபரிமலை: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து, நேற்று புறப்பட்டது. சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.

நாளை மாலை, மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

மகரவிளக்கு நாளில், பந்தளம் அரண்மனையில் இருந்து வழங்கப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவாபரண பவனி, நேற்று, பந்தளம் வலியகோவிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டது.

காலை, 5:00 மணி முதல், திருவாபரணங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்தனர். பகல், 12:30 மணிக்கு நடை மூடப்பட்டது. பின், பந்தளம் மன்னர் பிரதிநிதி திலிப்வர்மா ராஜா முன்னிலையில், திருவாபரணங்கள் மூன்று பேடகங்களில் அடைக்கப்பட்டு, பூஜை நடந்தது.

சரணகோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. குருசாமி கங்காதரன் தலைமையிலான பக்தர்கள் திருவாபரண பெட்டிகளை சுமந்து வந்தனர். இவை, நாளை மாலை, 5:30க்கு சரங்குத்திக்கும், 6:15 க்கு சன்னிதானத்திற்கும் வந்து சேருகிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT