RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நாடாளுமன்றத் தேர்தல் நேரம் பார்த்து நஞ்சு கலக்கும் செயல்... கருணாநிதி கண்டனம்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 3:48 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: "கழகப் பொதுக்குழு" என தவறான பிரச்சாரம் செய்து மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது விஷமத்தனமானது, நாடாளுமன்றத் தேர்தல் நேரம் பார்த்து நஞ்சு கலக்கும் செயல் என்று தி்முக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படிப்பட்ட விஷமத்தனத்தில் ஈடுபடுவோர் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
"இனி ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்போடு மதுரை தோழர்கள் அன்பரசு, இளங்கோவன், கீரிப்பட்டி செந்தில் ஆகியோருடைய பெயரில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கலைஞர் அரங்கத்தில், ஜனவரி 30, 2014 என்ற தேதியில் நடைபெறுவதாக போலி வண்ணச் சுவரொட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, என் பார்வைக்கும், பொதுச் செயலாளர் பேராசிரியர் பார்வைக்கும் வந்தது.

தி.மு.க. பொதுக்குழு ஜனவரி 30, கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவதாக அந்தச் சுவரொட்டியில் விளம்பரப்படுத்தியிருப்பதையும், அந்தச் சுவரொட்டியை ஒட்டி வேறுபல கருத்துக்கள் விஷமத்தனமாக அச்சிடப்பட்டு மதுரை மாநகரில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷமத்தனமான செயலை கழகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்பதற் காகவே செய்திருக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

ஏனென்றால் 15.12.2013 அன்று நடந்த பொதுக் குழுவில் கலந்து கொள்ளாத மு.க.அழகிரியின் படமும், சுவரொட்டி விளம்பரத்தில் இணைக்கப் பட்டிருப்பது விஷமத்தனமானதும், விஷக் கருத்தை தி.மு.கழகத்தின் மீது பரப்புவதற்கு சிலர் செய்த திட்டமிட்ட சதி என்றும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி வளர்ந்து வரும் இந்தக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேரம் பார்த்து நஞ்சு கலக்கும் செயல் என்றும் நான் கருதுவதாலும் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டவர்கள் கழகத்தை உயிராகக் கருதும் என் போன்றவர்களின் மனத்தையும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் மனத் தையும் புண்படுத்துவதாலும், உடனடியாக அவர்களின் விரும்பத்தகாத இச்செயலுக்கு மன்னிப்புக் கேட்டு அதனை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டால் அவர்கள் கழகத்திலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படு வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT