RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம்: அரசியல் கட்சிகள் புதுயுக்தி

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 9:30 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வாக்காளர்கள், 5.37 கோடி.

இவர்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், 23.49 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில், 30லிருந்து 39 வயதிற்கு உட்பட்டோர், 21.71 சதவீதம்.வாக்காளர் பட்டியலில், புதிதாக இடம் பெற்றுள்ள வர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள்.

அதனால், எஸ்.எம்.எஸ்., - எம்.எம்.எஸ்., இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான, பிரசாரங்களை மேற்கொண்டால், இவர்களை கவர முடியும் என, அரசியல் கட்சிகள் நம்புகின்றன.

மெகா திரைகளில்:

குஜராத் மாநிலத்தில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் மோடி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவது, காணொலி காட்சி போன்ற, மின்னணு தகவல் தொழில்நுட்ப முறையில், பல இடங்களில், மெகா திரைகளில், ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன் மூலம், தேர்தல் சுற்றுப் பயணம் என்ற பெயரில், அவர் பல இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட்டதோடு, அவரின் உரைகளை, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் கேட்கும் வகையில் செய்யப்பட்டது.

இந்த அணுகுமுறையை, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., நாடு முழுவதும் கடைபிடிக்க உள்ளது.அதேபோல், டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, புதிதாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சில அணுகுமுறைகளைப் கடைபிடித்து, அதிக அளவிலான இடங்களைப் பிடித்தது.அதனால், வரும் லோக்சபா தேர்தலிலும், இதே பாணியை பின்பற்ற, தமிழக அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதுதொடர்பான யோசனைகளையும், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்க துவங்கியுள்ளன.

கடந்த ஆண்டு, செப்டம்பரில், தி.மு.க., சார்பில், இணையதளம் ஒன்று துவக்கப்பட்டது. அத்துடன், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டரில், வலைப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், இந்த இணையதள விவகாரங்களை, கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

லோக்சபா தேர்தல் வர உள்ளதால், விரைவில், இந்த இணையதள குழு மாற்றி அமைக்கப்பட்டு, முழு வீச்சில் செயல்பட உள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக...:

அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை, 'பென்டிரைவ்' மூலமாக வழங்கியது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, நவீன தொழில் நுட்ப விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்த, அ.தி.மு.க., கட்சி, ஆட்சிக்கு வந்த பின், அதில், ஆர்வம் செலுத்தவில்லை. ஆனாலும், வரும் லோக்சபா தேர்தலுக்குள், சில நாட்களாக முடங்கியுள்ள, அ.தி.மு.க., இணையதளத்தை சீர்படுத்தி, அதன் மூலம், சில பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

தமிழக காங்கிரசில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம், அந்த இணையதளம் மேம்படுத்தப்படவில்லை. கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள், அவற்றில், 'அப்டேட்' செய்யப்படவில்லை. இதுவும், தேர்தலுக்கு முன்னதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

மொத்தத்தில், பழைய பிரசார முறைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான, புதிய வகை பிரசார அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும் என்பதில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இவர்களில் முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தெரிய வரும்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT