RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » காங். பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க, ராகுல் நப்பாசை!

காங். பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க, ராகுல் நப்பாசை!

From: 'விஸ்தாரம்'

POST 1on 15/1/2014, 9:38 pm

OUR PROMOTE PAGEVisthaaram - News Channel...
புதுடில்லி:''நான், காங்கிரஸ் கட்சியின் விசுவாசமுள்ள சிப்பாய். கட்சி மேலிடம், "எந்த பதவி' கொடுத்தாலும், அதை ஏற்க தயார். பொறுப்புகளை தட்டிக் கழிக்க மாட்டேன்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், இந்தி மொழி பத்திரிகைக்கு பேட்டி அளித்து, தனக்குள்ள நப்பாசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தலைமையில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கு மாநிலங்களில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், பிரதமர் பதவியை குறிவைத்து, ராகுல் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில், நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, நான்கு மாதங்களுக்கு முன்பே, அவர், பிரசாரத்தை துவங்கி விட்டார். மத்தியில், ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், குழப்பம் நிலவி வருகிறது. தற்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கே, மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, பேச்சு எழுந்தது. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைமுறையினரும், இதை விரும்பவில்லை. கட்சி தலைவரான சோனியா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், துணை தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், ராகுல் தான், நரேந்திர மோடிக்கு, சரியான போட்டியாக இருப்பார் என்றும், பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், பொறுப்புகளை ஏற்பதற்கு, ராகுல் தயக்கம் காட்டி வந்தார்.

கடந்தாண்டு ராஜஸ்தானில் நடந்த, காங்., சிந்தனையாளர்கள் மாநாட்டில் பேசிய ராகுல், "அதிகாரம் என்பது, விஷம் போன்றது என, என் தயார், எனக்கு அறிவுறுத்தியுள்ளார்' என்றார். ஆனாலும், லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, காங்கிரசில், பலரும் வலியுறுத்த துவங்கினர்.இந்நிலையில், இந்தி மொழி பத்திரிகைக்கு, ராகுல் அளித்துள்ள பேட்டி, காங்., வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல்

வட்டாரத்திலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல், அதில் கூறியுள்ளதாவது:காங்கிரஸ் கட்சிக்கு, நாடு முழுவதும், ஏராளமான விசுவாச தொண்டர்கள் உள்ளனர். நானும், அவர்களைப் போல், விசுவாசமுள்ள சிப்பாய் தான். கட்சி மேலிடம், எனக்கு, "என்ன பொறுப்பு' கொடுத்தாலும், அதை ஏற்க தயார். காங்கிரஸ் மேலிடம், என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ, அதைச் செய்யத் தயார். "அதிகாரம் என்பது விஷம் போன்றது' என, ஏற்கனவே நான் கூறியதற்கும், தற்போது, நான் கூறுவதற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறுகூறியதால், பொறுப்புகளை, நான் தட்டிக் கழிக்கிறேன் என, அர்த்தம் அல்ல. நமக்கு, அதிகாரம் கிடைக்கும் போது, மக்கள் நலனுக்கு அவற்றை பயன்படுத்த வேண்டும்; சுய நலனுக்காக அதை பயன்படுத்த கூடாது.எங்கள் குடும்பத்தில், என் பாட்டி இந்திரா, தந்தை ராஜிவ் உள்ளிட்ட எவருமே, அதிகாரத்தை நோக்கமாக வைத்து செயல்பட்டது இல்லை. காங்கிரஸ், மிகப் பெரிய ஜனநாயக கட்சி. அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு, நாட்டு மக்களின் கைகளில் உள்ளது. எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும், அதை அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்து முடிப்பேன்.

பா.ஜ., தற்போது, தனி நபரை நம்பி, களம் இறங்கியுள்ளது. அந்த கட்சிக்கு, நாட்டு மக்கள் மீது, பற்று இல்லை. இந்த நாட்டின் மரபணுவில் காங்கிரஸ் உள்ளது. நாட்டு மக்களிடமிருந்து, காங்கிரசை யாராலும் பிரிக்க முடியாது. பிரியங்கா என் சகோதரி; நெருங்கிய தோழி. அவர், தேர்தலில் போட்டியிட மாட்டார். காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான அவர், தேர்தல்களின்போது, எனக்கு உதவுவார்.

அடுத்த லோக்சபா தேர்தலிலும், காங்., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. "ஆம் ஆத்மி'யின் வளர்ச்சியால், எங்களுக்கு பயம் இல்லை. டில்லியில், காங்கிரஸ்
Advertisement

செய்ய நினைத்த சில பணிகளை, தற்போது ஆம் ஆத்மி செய்கிறது.எங்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கிடைக்கும் பயன்களை விட, மக்களின் நலனே முக்கியம். அதற்காக, காங்கிரஸ் கட்சியில், பிரச்னைகளே இல்லை என, கூறி விட முடியாது.பிரச்னைகள் உள்ளன; அவற்றை சரி செய்வோம். கூட்டணி கட்சிகள், எங்களை விட்டு, ஓடுவதாக கூறுவது தவறு. காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில், கூட்டணி கட்சிகள் எங்களுடன் உள்ளன. பீகாரிலும், வலுவான கூட்டணி அமைப்பது குறித்து, பேசி வருகிறோம். இவ்வாறு, ராகுல் பேட்டி அளித்துள்ளார்.
இதையடுத்து, நாளை மறுநாள் நடக்கவுள்ள, காங்., உயர்மட்டக் குழு கூட்டத்தில், கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ராகுல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என, கூறப்படுகிறது.

""அடுத்த லோக்சபா தேர்தலை, ராகுல் தலைமையில் சந்திக்கவே, நாங்கள் விரும்புகிறோம். இதை, மீண்டும், மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம். ராகுல், இயற்கையான தலைவர். ஆனாலும், இந்த முடிவை அறிவிக்கும் அதிகாரம், கட்சி தலைவர் சோனியாவுக்கு தான் உள்ளது. விரைவில், அந்த நல்ல முடிவை, சோனியா எடுப்பார் என, நம்புகிறோம்.

மணீஷ் திவாரி ,
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் காங்.,« PREV  |  NEXT »Associated with other topics

SPONSORED CONTENT